Saturday, October 19, 2013

குப்பைகள் கொட்டப்படும் கீழக்கரை நகராட்சியின் உரக்கிடங்கில் தீவைப்பு! போலீசில் புகார்!





கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை உரமாக்க கொட்டப்படும் கொட்டகையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளில் யாரோ மர்ம நபர்கள் தீவைத்துள்ளதாகவும் இது குறித்து காவல்துறை புகாரளிக்கப்பட்டதாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.இதனால் குப்பைகள் கொட்டுவதற்கு இடையூறு மட்டுமின்றி புகை மூட்டத்தால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,

கீழக்கரையில் எடுக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு மிகுந்த சிரமப்பட்டு பல்வேறு நல்ல மனம் படைத்தவர்கள் உதவியுடன் இடம் பெறப்பட்டு உரம் கிடங்காக அமைக்கப்பட்டுள்ளது.இங்குதான் கீழக்கரையில் எடுக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதை தடுத்து  குப்பைகளை கொட்ட முடியாமல் செய்து கீழக்கரையை மீண்டும் சுகாதார கேடாக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு யாரோ விஷமிகளால்  இக்கிடங்கில் குப்பைகளுக்கு தீவைத்திருக்கலாம் என்றும்
இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தீயை அணைத்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.