Monday, October 28, 2013

வீண் விமர்சனம் தவிர்ப்போம்!ஒற்றுமை காப்போம்! கட்டுரை: எஸ்.கே.வி சேக்


                                                   கட்டுரையாளர்: எஸ்.கே.வி.ஷேக்

இன்று  அடுத்தவர்களை பற்றி பணத்திற்காகவும், பதவிக்காவும் தன்னுடைய பெயர் முன்னிலை பெற வேண்டும் என பல காரணங்களுக்காக உலகில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிறரை வீண் விமர்சனம்  செய்பவர்கள் நாளை நாமும் அவதூறுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக போகிறாம் என்பதை உணர்வது இல்லை . வீண் விமர்சனங்களை தூர ஏறிந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூற தொடங்கலாம் அதையும் தாண்டி இதுபோன்ற சமயங்களில் அமைதியாக  மெளனம்  காப்பது வாழ்கையில் அன்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்க செய்யும் எனபதே இக்கட்டுரை மூலம் விளக்கப்படும் சிறப்பம்சம் 

இன்று உலகில் யாரையாவது வீணாக விமர்சிப்பது அல்லது வேண்டுமென்றே குறை கூறிக்கொண்டே இருப்பது அது சிலரின் பாணியாகவே இருக்கிறது அதில் நமது ஊரு  மட்டும் விதிவிலக்கா !!அதற்கு பின்னால் உள்ள  பின்புலங்களை பற்றி மக்கள் யாரும்  சிந்திப்பது இல்லை 

நம்மில் சிலர் 

நம்மை ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்று பிறர் நினைத்தாலும் பரவாயில்லை, வாயைத் திறக்காதிருப்பது நல்லது என்று பெரும்பான்மையோர் மெளனமாக இருப்பது வீண் விமர்சனம் செய்பவர்களுக்கு வசதியாக போய் விடுகிறது.
 வாயைத் திறந்து பேசி நாம் நினைத்ததே சரி என்று உறுதிப்படுத்துவதை விட பேசாதிருப்பது நல்லதுதான்.நாம்தான் மௌனத்தின் சிறப்புப் பற்றியே மணிக்கணக்கில் பேசக் கூடியவர்களாயிற்றே!

பிறர் பேசுவதைக் கேட்கும் உபத்திரவத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தாமே விடாமல் பேசிக் கொண்டிருப்பதை ஒரு தந்திரமாக வைத்திருப்பவர்களும் உண்டு. 

மற்றொருபுறம் ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்குவதில் இவர்களுக்கு இருக்கும் துடிப்பும் அவர்களை சும்மாயிருக்க விடுவதில்லை. எனவே மௌனத்தைக் கிழித்து நார் நாராக்கி உலகம் பேச்சோசையால் விளையும் இரைச்சலில் திளைக்கிறது.அடுத்தவர்களை விமர்சனம் செய்து தன்னை தானே தலைவனாக்கி கொள்ள துடிக்கும் சில நெஞ்சங்களும் உண்டு 

சிலர் தன்னை சிந்தனை சிற்பிகளாக காட்டுவதிலும் தன்னை போன்று நல்லவர்கள் இந்த உலகத்தில் இல்லாதது போல் மிகை படுத்துவதும் உண்டு . அப்படி அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது மக்களுக்கே எரிச்சல் அடையும் படியாக மாறுவது இயல்பான ஓன்று தானே 

‘மௌனம் என்பது ஒரு அழகிய திரை; சத்தம் என்பது அதில் விழும் பொத்தல்’ 

இந்த வரிகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால்  நாம் தவறாக சிலரின் சுய நலத்திற்க்காக விமர்சிக்க படும் போது மெளனம் என்ற அழகிய திரை யாய் இருப்பதே சிறந்தது 

பேச்சினால் ஒருவர் என்னென்ன விதமாக தொல்லைக்கு ஆளாக நேரும் அல்லது ஆளாக்கலாம் என்பதை நாமெல்லோருமே அறிந்திருக்கிறோம். உலகையே உதறி வெல்லும் ‘வீர’ உணர்வும், மற்றோரெல்லாம் எதிரிகளே என்னும் வெறுப்புணர்வும் நமக்குச் சும்மா வந்துவிடவில்லை. 

‘நாம் வேறு அவர்கள் வேறு’ என்று நம் அடிநாளிலிருந்தே பேசிப் பேசி நம்மை பிரிப்பவர்களும் உண்டு இந்த நிலை அவர்களையே அழித்து விடும் இதனையும் தாண்டி உண்மை நிலையே வெற்றி பெரும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை 

 சிலர் நம்மை விட வயதில் முதியவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்கிறார்கள்  .நாளை நீங்களும் அந்த வயதிற்கு  வரக்கூடும் என்பதை நம்மில் நிறைய நண்பர்களுக்கு தெரிவது இல்லை .அதே போல் சிறியவர்கள் விமர்சனம் செய்யும் போது பெரியவர்கள் மிக நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் அது உங்களுடைய பெருந்தன்மையே பறைசாற்றும் 

நம்முடைய ஊரில் இப்படி சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் "வயது போகப் போக பற்கள் விழுவதை விட நாக்கு விழுந்தால் நலமாக இருக்கும்" என்றும் சொல்வது உண்டு . 

நீங்கள் யாரானால் என்ன : நான் யாரானால் என்ன அனாவசியக் கேள்விகள் : அனாவசியப் பதில்கள் எதையும் நிரூபிக்காமல்  சற்றே சும்மா இருங்கள்!

வார்த்தைகளில் இல்லாத மௌனம் பலவற்றைச் சொல்லிவிடுகிறது. சங்கடங்களைத் தவிர்த்து நெருக்கத்தைக் கொண்டுவருகிறது. இரைச்சலை விழுங்கி அமைதியைக் கொண்டுவருகிறது. மறுப்பு வார்த்தைகளைக் கொட்டாமல் சமாதான விருப்பத்தை ஏற்படுத்துகிறது. 

“வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால் உண்மைகளை விளக்காது” 

இன்னும் ஒரு குட்டி கதை மூலம் ...

கண்டபடி பேசாதிருந்தால் குறைந்தபட்சம் உங்கள் கன்னத்தையாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்துகிற விதமாக ஒரு ஜோக். இதை பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் தன் கட்டுரையொன்றில் தந்திருக்கிறார் 

ஒரு கனவான் ஒரு ரோபோவை விலைக்கு வாங்கினார். அந்த ரோபோவின் விசேஷம் என்னவென்றால், அதற்கு எதிரே யார் பொய் பேசினாலும் பொய் பேசியவரின் கன்னத்தில் அறைந்துவிடும். இது தன் வீட்டுக்கு அவசியம் தேவை என்று கருதினார் கனவான். ஏனென்றால் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருந்தான் அவர் மகன்.

வீட்டுக்கு ரோபோவை எடுத்துவந்து அதைப் பற்றிய விவரத்தையும் சொன்னார் கனவான். ஒருநாள் பையன் தாமதமாக வந்தான். கேட்டதற்கு, ஸ்பெஷல் கிளாஸ் என்றான். ரோபோ அவன் கன்னத்தில் விட்டது ஒரு அறை. அறை வாங்கிய பிறகுதான் உண்மையைச் சொன்னான் மகன்; நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றிருந்ததாக.

உடனே கனவான் சொன்னார்: “டேய், உன்னை மாதிரி சிறுவனாக இருக்கும்போது நான் இப்படியெல்லாம் பொய்யே சொன்னதில்லை”
விழுந்தது அவர் கன்னத்திலும் ஒரு பளார்.

இந்த இரண்டையும் பார்த்த கனவானின் மனைவி சொன்னாள்: “பாருங்கள், உங்கள் பையனும் உங்களை மாதிரிதானே இருப்பான்?”

இப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அவளுடைய கன்னத்திலும் விழுந்தது ஒரு அறை . எதிர்பார்க்கவில்லை அந்த பெண் 

இப்படி பட்ட ரோபவை பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் .

ஏன் என்றால் அடுத்தவர்களை பற்றி பொய்யே வாரி இரைக்கும் போது இவர்களை பற்றிய வண்டவாளங்கள் தெரியதொடங்கி விடும் 

எனவே கண்ணியமற்ற முறையில் வீண் விமர்சனம் செய்பவர்களை பற்றி நாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை நம்முடைய கண்ணியத்தை நம்முடைய மொனத்தின் மூலம் காட்ட வேண்டும் .

 இன்று உலகில் முகநூல் மற்றும் இனையதளங்களில் ஒருவரை ஒருவர் மிக கேவலமாக விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்  கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது என்று சொல்வார்கள் எனவே எழுதும் போது மிக கவனமாக இருத்தல் அவசியம்  எழுத்து என்ற இருபக்கமும் கூர்மையான கத்தி  நம்மையும் தாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதனால் யாரையும் யாரும் வீண் விமர்சனம் செய்வதை தவிர்த்து வேண்டும்.அதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்து  ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம் .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்க எனது முகப்புத்தகத்திலும் மொபைலிலும் அழைக்கலாம்.   0097150 4726244

5 comments:

  1. சரியாகச் சொன்னீர், ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தத்தை ஒரு மெளனம்
    பறைசாற்றிவிடும்.
    மெளனமாக இருப்போரை மூடராக பார்க்கும் கூட்டமே பெரும்பாலும் வார்த்தை விவாதத்தின்போது தோல்வியைத்தழுவும்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாOctober 28, 2013 at 7:24 PM

    அட்டகாசமான தலைப்பு. இந்த கட்டுரை இன்றைய காலத்தின் கட்டாயம். காரணம் இப்போதெல்லாம் முகநூலில் சிலரின் கருத்து பதிவுகள் நமக்கு கொலை வெறியை உண்டாக்குகிறது.திரைமறைவில் அவர்கள் இருப்பதால் எளிதாக தப்பித்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பதர்கள் தங்களின் கட்டுரையை மேலோட்டமாக படிக்காமல் பாரா வாரியாக படித்துணர்ந்து திருந்திக் கொண்டால் தங்களின் கட்டுரைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    எடுத்துக் கொண்ட தலைப்பு நல்ல நோக்கம்.மனம் நிறைவான பாராட்டுகள்

    ReplyDelete
  3. கதை பழசு ஆனா சொன்ன விதம் புதுசு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கதை பழசு ஆனா சொன்ன விதம் புதுசு வாழ்த்துக்கள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.