Wednesday, October 30, 2013

கிழக்கரை - ராமநாதபுரம் சாலையில் டூவீலர் விபத்து!சதக் கல்லூரி மாணவர் உயிரழந்தார்!திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்தவர் கருணாகரன், . கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்தார்.

 நேற்று வகுப்பு முடிந்து கல்லூரி அதே ஊரை சேர்ந்த நண்பர் பழனியுடன் டூவீலரில்(ஹெல்மேட் அணியவில்லை) திருப்புல்லாணி உப்பளம் அருகே மாலை 5 மணிக்கு வந்து கொண்டு இருந்தனர். தூத்துக்குடியில் இருந்து மன்னார்குடிக்கு உரம் ஏற்றி சென்ற லாரி மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த கருணாகரன் பலியானார்டூவீலரை ஓட்டி வந்த பழனி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறா.


கன்னியாகுமரி மாவட்டம் சீதம்பாலை சேர்ந்த லாரி டிரைவர் அருண்செல்வத்தை, திருப்புல்லாணி எஸ்.., ஜேசுதாஸ் கைது செய்தார்.

கீழக்கரை வண்ணாந்துறை வளைவு அருகே  வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை

அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் கூறுகையில்,

இவ்வழியே செல்லும் வெளியூர் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன.பல முறை இந்த பகுதியில் விபத்து நடைபெற்று உயிரழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை ரோந்து வாகனங்கள் கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் செயல் பட்டது போல் .தெரியவில்லை.எண்ணற்ற விபத்துக்கள் ஏற்பட்டு விட்டது. வேகத்தை தடுக்காத வரை  விபத்துக்கள் குறைய வாய்ப்பில்லை .மேலும் விபத்து குறித்த அறிவிப்பு பலகைகளை இப்பகுதியில்  வைக்க வேண்டும் என்றார்.

2 comments:

 1. நம் கீழக்கரை பகுதியில் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய பத்து பொன் விதிகள் :
  1. சொந்த வாகனத்தை விடுத்து அடுத்தவர்கள் வாகனத்தை ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நம் வாகனம்.. நம் சொல் கேட்கும். அதனை கட்டுப்படுத்துவது எளிது.
  2. உள்ளூருக்குள் வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியாவிட்டாலும், இராமநாதபுரம் செல்லும் போதாவது அவசியம் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.
  3. உள்ளூர் சாலைகளில் 30 கி.மீ. வேகத்திற்கு குறைவாகவும், கீழக்கரை - இராமநாதபுரம் சாலைகளில் 70 கி.மீ வேகத்திற்கு மிகாமலும் வாகனம் ஓட்டுவது, நல்ல கட்டுப்பாட்டை தரும். ஏனெனில் நம் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்கள் திடீரென சாலையின் குறுக்கே பாய்வதால், வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மித வேகம் நல்லது.
  4. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது அறவே கூடாது. நாம் மது அருந்தா விட்டாலும், கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் வழி நெடுக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதால், இங்கு குடித்து விட்டு வாகனம் ஒட்டி வரும் குடி மகன்களை கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கையாக வாகனம் ஓட்ட வேண்டும்.
  5. முறையாக சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவதை கற்றுக் கொள்ள வேண்டும்.
  6. செல் போனை சைலண்ட் மோடில் வைத்து விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய பழகிக் கொள்வது நல்லது.
  7. ஒரு வேலை அவசியமாக பேச வேண்டும் என்றால், சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு பேசுங்கள்.
  8. ஒவ்வொரு முறையும் ஹாரன், பிரேக், ஹெட் லைட், இண்டிகேட்டர், டயரில் உள்ள காற்று அளவு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என சரி பார்த்து விட்டு பயணத்தை துவங்க பழக வேண்டும்.
  9. கீழக்கரையில் இருந்து செல்லும் போது முக்கு ரோடு, சதக் ஆர்ச், முனிய சாமி கோவில், வண்ணாந்துறை வளைவு, தோணிப் பாலம் வளைவு, திருப்புல்லாணி வளைவு, பாலகரை வளைவு, ஆர்.எஸ் மடை வளைவு உள்ளிட்ட விபத்துகள் அதிகம் நடைபெறும் ஆபத்தான பகுதிகளில் அடுத்த வாகனங்களை, அசுர வேகத்தில் முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும்.
  10. அதி முக்கியமாக வாகனம் ஓட்டும் முன்னதாக இறைவனை வேண்டி விட்டு, நம் அன்பு பெற்றோர்கள், மனைவி மக்களை மனதில் வைத்து பயணத்தை துவங்க வேண்டும்.
  எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் எதிர்பாராத விபத்துகளில் இருந்து பாதுகாப்பானாக..

  ReplyDelete
 2. கீழக்கரை அலி பாட்சாOctober 30, 2013 at 11:35 PM

  எத்தனையோ முறை இது சம்பந்தமாக பலரும் பல தரப்பட்ட சூழ்நிலையில் சங்கை ஊதி விட்டார்கள். ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாக இருக்கிறது. விழிப்புணர்வு என்பது காத தூரத்தில் உள்ளது.என்ன செய்வது விதிக்கபட்டது தான் நடக்கும்.

  இதை விட பெரிய கொடுமை சமீப காலத்தில் கீழ்க்கரையில் 10,12 வயதுக்கு குறைவானவர்கள் மூவராக (டிரிப்பில்ஸ்) செல்லுவது அதிகரித்து வருகிறது. என்னென்ன விபரிதங்கள் நடக்க இருக்கிறதோ? படைத்தவன் தான் அறிவான்.

  இது விஷயத்தில் முதல் குற்றவாளி பெற்றோர்கள்.
  இரண்டாவது போக்குவரத்து காவலர்கள் (இது வரை கீழக்கரையில் இவர்கள் நியமிக்க பட்வில்லை).
  மூன்றாவது பள்ளிக் கூட நிர்வாகம் (இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருபவர்களை கண்டிக்காதது)

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.