Sunday, October 6, 2013

கீழக்கரை அருகே இறந்து கரை ஒதுங்கி அரிய வகை டால்பின்!


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஏரான்துறை கடற்கரையில் பாட்டில்மூக்கன் என்றழைக்கப்படும் அரியவகை டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.
வனவர் இன்னாசிமுத்து தலைமையில் வனகாப்பாளர் முத்துமாரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மகேந்திரன், ராஜா, நாராயணன், அழகர்சாமி உள்ளிட்டோர் ஏர்வாடியில் உள்ள ஏரான்துறை கடற்கரையில் ரோந்து சென்றனர். 
அப்போது கடற்கரையில் 5 அடி நீளமுள்ள 30 கிலோ எடையுள்ள ஒரு வயதான பாட்டில்மூக்கன் என்ற அரியவகை டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்ததை கண்டனர். இது குறித்து அவர்கள் கீழக்கரை வனச்சரகருக்கு தகவல் கொடுத்தனர்.
 நேற்று காலை வனச்சரகர் ஜெயராமன் முன்னிலையில் ஏர்வாடி கால்நடை மருத்துவர் பகவத்சிங் இறந்த டால்பினின் உடலை பரிசோதனை செய்தார். பரிசோதனைக்கு பின்னர் அப்பகுதியில் இந்த டால்பினை வனத்துறை ஊழியர்கள் புதைத்தனர்.

சமீப காலமாக தொடர்ச்சியாக இப்பகுதி கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரனங்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.