Thursday, October 10, 2013

விளையாட்டு போட்டிகள்!சதக் கல்லூரி மாணவ,மாணவியர் சாதனை!




சென்னை அண்ணா பல்கலை, 16வது மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, ஆண்கள் பிரிவில், கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.

மாணவிகளுக்கான தனித்திறன் போட்டியில் மூன்றாம் ஆண்டு கட்டடக்கலை மாணவி பவித்ரா இரண்டு தங்கப்பதக்கம்,அம்பலம் சீத்தாக்குமாரி இரண்டு வெண்கலம், ஜெனிபர் ரோஸ்லின் ஒரு வெண்கலம், தொடர் ஓட்டத்தில் பவித்ரா, அம்பலம் சீத்தாக்குமாரி, மரியஜோஸ்மின், மணிமேகலை ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி இயக்குனர்களையும், கல்லூரி தலைவர் யூசுப் சாகிப், செயலாளர் சர்மிளா, இயக்குநர்கள் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, ஹூசைன் ஜலால், முதல்வர் முகம்மது ஜகாபர் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.