Thursday, October 24, 2013

வரவேற்பை பெற்ற கீழக்கரையின் முதல் காவல்துறை அதிகாரியின் பேச்சு! முஹைதீனியா பள்ளி ஆண்டு விழா!கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் 23வது ஆண்டு ஆண்டு விழா இன்று மாலை மணியளவில் முஹ்யித்தீனியா பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ராஜன்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  டாக்டர். ஜோசப் ராஜன்  கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ்  (காவல் துறை சார்பு ஆய்வாளர், கோயம்புத்தூர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

சப் இன்ஸ்பெக்டர் அணஸ் பேசியதாவது,

கீழக்கரையில் ஆணாக பிறந்தால் வெளிநாடு செல்ல வேண்டும் ; பெண்ணாக பிறந்தால் 'வெளிநாட்டு மாப்பிள்ளை' என்கிற நிலை மாறி கல்விக் கூடங்கள் நிறைந்த நம் ஊரிலிருந்து IAS, IPSஅதிகாரிகள் உருவாக முயற்சிக்க வேண்டும். நம் எண்ணங்கள் எப்படியோ, அது போலவே நம் எதிர்காலமும் அமையும். ஆகவே வெளிநாட்டு மோகத்தை விடுத்து, இப்போதே மாணவர்கள் நல்ல குறிக்கோள்களை மனதில் நிறுத்த வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்." 

கீழக்கரையில் உள்ள இளைஞர்கள் வெளிநாடு செல்லும் ஆர்வத்தை தவிர்த்து தாயகத்திலேயே  அதிகாரிகளாக உருவாக  வேண்டும் என்ற அவருடைய பேச்சிற்கு கூட்டத்திற்கு வந்திருந்தோர் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இராமநாதபுரம் ராஜன்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  டாக்டர். ஜோசப் ராஜன் மறைந்த டாக்டர் பாரூக் அவர்களின் நினைவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

10 வது மற்றும் 12 வது வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவியருக்கும் ரூ 15000ம் ரொக்க பரிசு சமூக நல அமைப்பான நாசா சார்பில் வழங்கப்பட்டது அது போன்று இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ 8 ஆயிரம் வழங்கப்பட்டது.10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு தலா ரூ 4000 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜமாத் மற்றும் கல்விக்குழு நிர்வாகிகள் முஹைதீன் இப்ராஹிம் என்ற தம்பிவாப்பா, மெளலா முஹைதீன், ரபீக்  மிர்ஷா பசீர் ஜமாத் பிரமுகர் ரத்தின முஹம்மது  உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்றனர்்
3 comments:

 1. கீழக்கரை அலி பாட்சாOctober 24, 2013 at 10:29 PM

  அன்று


  மாணவ மணிகளே இது தான் சரியான தருணம், நீங்கள் எதுவாக ஆக வேண்டுமென்று இன்றே விதை போடுங்கள்…அதை நோக்கி செயல் படுங்கள்..

  {கீழை ராஸா என அன்பொழுக அழைக்கப்படும் முன்னாள் மாணவர் ராஜா கான் அவர்கள் மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளியில் 67 வது (2013)எழுச்சி மிகு சுதந்திர தின உரையின் ஒரு பகுதி}


  இன்று

  "கீழக்கரையில் ஆணாக பிறந்தால் 'துபாய்' ; பெண்ணாக பிறந்தால் 'துபாய் மாப்பிள்ளை' என்கிற நிலை மாறி கல்விக் கூடங்கள் நிறைந்த நம் ஊரிலிருந்து IAS, IPSஅதிகாரிகள் உருவாக முயற்சிக்க வேண்டும். நம் எண்ணங்கள் எப்படியோ, அது போலவே நம் எதிர்காலமும் அமையும். ஆகவே வெளிநாட்டு மோகத்தை விடுத்து, இப்போதே மாணவர்கள் நல்ல குறிக்கோள்களை மனதில் நிறுத்த வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்."

  மாணவர்களை அரசுப் பணிகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் விதமாக கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ் (காவல் துறை சார்பு ஆய்வாளர், கோயம்பத்தூர்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் 23வது ஆண்டு ஆண்டு விழா (இன்று 24.10.2013 மாலை 3.30 மணியளவில்) முஹ்யித்தீனியா பள்ளி வளாகத்தில் சிறப்புரையாற்றினர்.

  கீழக்கரை வாசிகளில் படித்த மேதாவிகளியிடையே என்ன ஒரு உயர்ந்த கருத்துகள். இருவருமே ஊரார் அனைவரின் பராட்டுக்குரியவர்களே. வாழ்த்துவோம்.

  ReplyDelete
 2. மாஷா அல்லாஹ் இளம் வயது சப் இன்ஸ்பெக்டராக சிறப்பாக கோவையில் பணியாற்றிவரும் சகோதரர் அனஸ் அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துவோம் ..இவரது சாதனைகளால் நம் ஊர் சிறக்கட்டும்

  ReplyDelete
 3. நம்முடைய ஊரைச் சேர்ந்த முஹம்மது அனஸ் (காவல் துறை சார்பு ஆய்வாளர், கோயம்பத்தூர்) அவர்கள் காவல் துறையில் பணியில் சேர்ந்து திறம்படப் பணிபுரிவது சிறப்புக்குரியதாகும். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நம் ஊரைச் சேர்ந்த கொடையாளர்கள் நம் ஊரின் மாணவர்களுக்கென்று போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றினைத் துவக்கினால் நன்றாக இருக்கும். குறிப்பாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் நம் ஊர் மாணவர்களுக்கு அது பெரிதும் உதவியாய் இருக்கும்.

  வாழ்த்துக்களுடன்..

  முனைவர் நா. சேதுராமன், உதவிப் பேராசிரியர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர் - 607 001.
  அலைபேசி - 9865381281
  மின்னஞ்சல்- drnsethuraman@gmail.com

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.