Friday, October 11, 2013

கீழக்கரை நகராட்சி சார்பில் சாலை பணிகள்!நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு!



கீழக்கரை நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் சாலை அமைத்தல்,கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை 10 வார்டு பழைய மீன் கடை பகுதி வரை 140 மீட்டர் அளவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணிகளை சேர்மன் ராவியத்துல் காதரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் 12வது வார்டு பகுதியில் வீடுகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர் குழாய் இணைப்புகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளை நகராட்சி சார்பில் சீரமைக்கும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.