கீழக்கரை ரோட்டரி சங்கம்,ராமநாதபுரம்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ராமநாதபுரம்
அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா
நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்
ராசீக்தீன் தலைமை வகித்தார்.செயலாளர் சுப்ரமணியன் ,நிர்வாகிகள் மூர் ஹசனுதீன்,செய்யது
அஹமது,ராஜா,சுந்தர்,ஹசன்,சதக்கத்துல்லா உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பட்டய தலைவர் பேராசியர்
அலாவுதீன் முகாமை துவங்கி வைத்தார்.இதில் கண்ணில் நீர் வடிதல்,நீர் அழுத்தம்,சர்க்கரை
வியாதியினால் கண்களில் ஏற்படும் பாதிப்பு,புரை உண்டாகுதல் உள்பட கண் சம்பந்தப்பட்ட
அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர்
பாலசுப்பிரமணியன் தலைமையில் திட்ட மேலாளர் மற்றும் உதவி மருத்துவர் டாக்டர் முஹம்மது
நஸீம் ,வட்டார கண் மருத்துவ உதவியாளர்களாக நாகராஜ் டேனியல் ,ஜோசப்,வாசுதேவன், ஆகியோர்
80க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர் 6பேர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு
செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.