தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த இறைச்சிக்கடை வியாபாரிகள், கூடுதல் விலைக்கு ஆடுகள் வாங்க ராமநாதபுரம் மாவட்டத்திற்கு படையெடுத்து வருவதால், உள்ளூர் இறைச்சி வியாபாரிகள் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதி, பிரப்பன் வலசை, தேர்போகி, பூமாலை வலசை, செல்வநாயகபுரம், காமாட்சிபுரம் போன்ற கிராமங்களில், ஆயிரக்கணக்கானோர் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல், பாதுகாப்புடன் ஆடுகளை வளர்ப்பதால் சந்தையில் நல்ல "கிராக்கி' உள்ளது.
அக்., 16ல் பக்ரீத் பண்டிகை, நவ.,2ல் தீபாவளி பண்டிகை வர விருப்பதால், வியாபாரிகள், ஆடுகளை அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக வெளி மாவட்ட வியாபாரிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் சந்தைகள் கூடும் ஊர்களிலும், ஆடுகள் அதிகம் வளர்க்கும் கிராமங்களையும் கண்டறிந்து அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் ஆடுகளை வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
பக்ரித் பெருநாளையோட்டி கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆடுகள் அறுக்கப்பட்டு குர்பான் கொடுக்கப்படும்.இதனால் இப்பகுதியில் அதிகப்படியான ஆடுகள் விற்பனைக்கு தேவைப்படும்.ஆனால் இம்முறை உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆடுகள் கிடைப்பது சிரமமாக உள்ளது எனவே இம்முறை விலையும் அதிகரிக்கும் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கீழக்கரை முஸ்லிம் பஜார் இறைச்சி வியாபாரி ஹபீப் முகம்மது கூறியதாவது
வழக்கமாக வாரத்திற்கு 40 ஆடுகளை, சந்தையில் வாங்கி வந்து வியாபாரம் செய்வோம். கடந்த சந்தையில் வெளி மாவட்ட வியாபாரிகள் படையெடுப்பால் எதிர்பார்த்த விலைக்கு ஆடுகள் கிடைக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வாங்கி வந்தோம்.
இந்த பகுதியில் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இறைச்சி, சென்னை போன்ற நகரங்களில் கிலோ 460 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆகவே கூடுதல் விலையை கொடுத்து லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். இதே நிலை நீடித்தால், இறைச்சி விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை, என்றார்.
கீழக்கரையை தவிர பெரும்பாலும் வேறு எங்கும் செம்மறி ஆட்டிறைச்சி விற்கப்படுவதில்லை. ஆகவே வெளி மாவட்ட வியாபாரிகளினால் ஆடுகள் கிடைப்ப்தில்லை என்பது வீணாண பொய்யுரையாகும்.கட்ந்த் இரண்டு வருடங்களாக நம் பகுதியில் மழையே இல்லை. அதன் காரணமாக புல், பூண்டுகள் முளைக்கவில்லை. ஆடுகள 10,15 கிலோ அளவுக்கு கொழுக்கவில்லை.குர்பானிக்கான தேவைகள் என்பது வருடா வருடம் உள்ள பிரச்சனை தான். அது சரி. கற்பனைக்கு அடங்காத விலை கொடுத்தால் வேண்டிய அளவு எண்ணிக்கையில் கிடைப்பது எப்படி?
ReplyDeleteகுர்பானி கொடுக்கும் எண்ணம் கொண்ட வெளி நாட்டில் வாழும் சீதேவிகள் கையில் நாட்டின் பண வீக்க்ம் காரணமாக கையில் சற்று கூடுதலான காசு புழங்குகிறது.ஆகையால் என்ன விலை கொடுத்தும் வாங்குவார்கள் என்பது வியாபாரிகளின் எதிர் பார்பபு
பொருள் கிடைக்கவில்லை என்றால் விலை கூடுவதில் என்ன லாஜிக்.விலையை கூடுதலாக கொடுத்தால் பொருள் கிடைக்கிறதே. அது எப்படி?நம்ம நாட்டு பொருளாதரமே புரிய மாட்டேன் என்கிறதே!!!