Friday, October 4, 2013

கீழக்கரையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்!முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்துவேன்!ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ பேட்டி!


கீழக்கரையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த விரைந்து செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்த உள்ளேன் என்று ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் எம்.எல்.., ஜவாஹிருல்லா கூறியதாவது:


 கீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நீண்ட காலமாக உள்ளது. வாகனங்களில் ஒரு குடம் குடிநீர் எட்டு ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட மாற்று நடவடிக்கையாக கீழக்கரையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர வேண்டும் என சட்டசபையில், முதல்வர் ஜெ.,விடம் கோரிக்கை வைத்தேன்.

இதன் எதிரொலியாக ராமநாதபுரத்தில் 100 கோடி ரூபாயில், உப்பு நீரை நன்னீராக்கும் திட்டம் துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இருப்பினும் ஆயத்தப் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மக்கள் குடிநீருக்கு தொடர்ந்து சிரமமடைந்து வருகின்றனர். கீழக்கரையில் இந்த திட்டம் உடனடியாக செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து முதல்வரிடம், தொடர்ந்து வலியுறுத்துவேன், என்

இது தொடர்பாக கீழக்கரைடைம்சில் வெளியான முந்தைய செய்தி... http://keelakaraitimes.blogspot.ae/2013/03/blog-post_11.html

3 comments:

  1. கீழக்கரை அலி பாட்சாOctober 4, 2013 at 10:05 PM

    இன்ஷா அல்லா அடுத்த முறை கீழக்கரைக்கு வருகை தரும் போது காவேரி கூட்டு குடி நீர் வினியோகதிற்காக கீழக்கரைக்கு வரும் குழாயில் நடக்கும் படைத்தவனுக்கே பொருக்காத அக்கிரமத்தை, அநியாயத்தை நேரிடையாக ஆய்வு செய்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து உங்களை நம்பி ஓட்டு போட்ட கீழக்கரை மக்களின் குடி நீர் தேவையை ஓரள்வுக்கேனும் தீர பரிகாரம் காண முன்னுரிமை கொடுங்கள். படைத்தவன் இதற்கான கூலியை நிச்சயமாக தருவான். மேலும் இது விவரத்தை உங்களின் கீழ்ககரை அமைப்பாளர்களிடம் உன்னிப்பாக கேளுங்கள்.விரக்தியின் எல்லைக்கே சென்று விடுவீர்கள்.

    அத்துடன் முதல்வரிடம் கீழக்கரை தனித் தாலுகா விவரத்தையும் நினைவூட்ட தவறாதீர்கள்.. புண்ணியமாகட்டும்

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாOctober 4, 2013 at 10:36 PM

    நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அம்மையார் கூட்டணியில் இருந்த ஆதரவு பெற்று வெற்றி வாகை சூடினீர்கள். சமீபத்தில் தியாகச் செம்மல்,கரை படியா திஹார் ராணி,கோவை செம்மொழி மாநாட்டின் நாயகிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இந்நிலையில் அம்மையாரிடம் தங்களுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நாங்களும் மூடர்கள் இல்லை, இன்றைய அரசியலில். ம்ம்ம்.... பார்ப்போம்.

    ReplyDelete
  3. கீழக்கரையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த விரைந்து செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்த உள்ளேன் என்று ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் சொல்லாகும் , இது போற்று கீழக்கரையில் பல திட்டத்தை கொண்டுவருவதாக சொன்னார் ஆனால் எதுவும் நடக்கவில்லை , கீழக்கரையில் தனி தாலுகா அலுவலகம் கொண்டு வர போகிறேன் என்று அவர் கூறி பல வருடங்கள் கழிந்து விட்டது கீழக்கரையில் தனி தாலுகா அலுவலகம் கிடைத்ததா ? இல்லை

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.