Thursday, October 24, 2013

உயரம் தாண்டுதலில் தொடரும் கீழக்கரை மாணவரின் சாதனை !


தமிழக முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்களில் நடந்தது. மயில்வாகனன் எஸ்.பி., துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் வரவேற்றார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டி நடந்தது.100, 400, 800 மற்றும் 500 மீட்டர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தன. முதலிடத்தை பிடித்தவர்கள் மண்டல அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இப்போட்டியில் கீழக்கரை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில் (15) உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 1.90 மீட்டர் தாண்டி முதல் பரிசை வென்றார்.

 முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, குழு போட்டிகளின் முடிவில் ரொக்க பரிசு வழங்கப்பட்டது கால்பந்து பயிற்றுனர் நோயலின் ஜான் நன்றி கூறினார்


தேசிய அளவில் உயரம் தாண்டும் போட்டிகளில் முத்திரை பதித்து வரும் முஹம்மது ஆகில் (15)  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெரு பகுதியை சேர்ந்த மாணவர் இவர் சென்னை முத்தியால்பேட்டை பள்ளியில் பயின்று வருகிறார்..இவரது தந்தை நூஹ் இப்ராஹிம் ஆவார்.


உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஆர்வமுடைய இவர் ஜீனியர் பிரிவிலான போட்டிகளில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் பங்கேற்று உயரம் தாண்டும் போட்டிகளில் இளம் வயதிலேயே சாதனைகள் படைத்து வருகிறார்.


மாநில அளவிலான போட்டிகளில் பெற்ற வெற்றிகள்


 2012ம் ஆண்டில் கிருஸ்ணகிரியில் நடைபெற்ற போட்டிகளில் தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்.


2012-2013ம் ஆண்டுகளில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான விழா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.78 மீட்டர் தாண்டி முதலிடம் பெற்றார்.


2013ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற 28வது ஜீனியர் அளவிலான போட்டியில் 1.98 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து  முதலிடம் பெற்றார்

தேசிய அளவில் பெற்ற வெற்றிகள்


2012ம் ஆண்டு கொச்சினில் நடைபெற்ற ஜீனியர் தடகள போட்டியில் 2ம் இடம் பெற்றார்.1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.


2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார்.1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.


2012ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார்.1.88 மீட்டர் உயரம் தாண்டினார்.


2013ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற போட்டியில் 2ம் இடம் பெற்றார்.1.86 மீட்டர் உயரம் தாண்டினார்.

3 comments:

  1. கீழக்கரை அலி பாட்சாOctober 24, 2013 at 11:21 PM

    கீழக்கரை அலி பாட்சாSeptember 17, 2013 at 4:01 PM கீழக்கரை டைம்ஸில் பதிவு.

    தம்பி முகம்மதுஆகில்.

    வலிமை மிக்க உந்தன் சிறகுகளை விரித்து விட்டாய். உன் எண்ணம் ஈடேற்றம் அடைய வல்ல ரஹ்மான் கருணை புரிவானாக.ஆமீன்

    இந்த வெற்றிக்குரிய புகழ் அனைத்தும் படைத்த ஏகனுக்கே

    உனது வெற்றிகள், புகழ் தொடர மனதார இரு கையேந்தி வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகின்றேன். ஆமீன்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பட்சாOctober 25, 2013 at 12:27 AM

    கீழக்கரை அலி பாட்சாSeptember 17, 2013 at 4:01 PM கீழக்கரை டைம்ஸில் பதிவு.

    தம்பி முகம்மதுஆகில்.

    வலிமை மிக்க உந்தன் சிறகுகளை விரித்து விட்டாய். உன் எண்ணம் ஈடேற்றம் அடைய வல்ல ரஹ்மான் கருணை புரிவானாக.ஆமீன்

    இந்த வெற்றிக்குரிய புகழ் அனைத்தும் படைத்த ஏகனுக்கே

    உனது வெற்றிகள், புகழ் தொடர மனதார இரு கையேந்தி வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகின்றேன். ஆமீன்.

    ReplyDelete
  3. தம்பி முஹம்மது ஆகில் உன் திறமைகளை கண்டு நாடே வியக்கட்டும் இந்த இளம் சிங்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது அவரது திறமைகளை இன்னும் நாம் வெளியே கொண்டு வர அவரை ஊக்கு விக்க வேண்டும்
    கீழை பைசல்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.