Booking Spicejet :>> http://book.spicejet.com/
Customer Service : (INDIA)
Sales & Reservations (24/7)
+91 987 180 3333
+91 965 400 3333
மதுரை - துபாய்க்கு நேரடி விமான சேவை வலியுறுத்தி பல ஆண்டு காலமாக பல்வேறு தரப்பினரும் தமிழகத்தில் வலியுறுத்தி வந்தனர் இது தொடர்பாக ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் சார்பில் துபாயில் தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.இக்கூட்டங்களில் தென் தமிழகத்திலிருந்து தொழில் முனைவோர்,சமூக நல அமைப்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தங்களது கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்
சென்ற ஜனவரி மாதம் துபாய் ஈடிஏ ஸ்டார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹீதீன் நேரடி விமான சேவையை வலியுறுத்தி பேசினார்.அருகில் மதுரை முன்னாள் எம்பி ராம்பாபு உள்ளார்.
ஈடிஏ நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குநர் அக்பர்கான்
கூட்டத்தில் பங்கேற்ற தென் தமிழக பிரமுகர்கள்
சில மாதம் முன்பு துபாய் வருகை தந்த மத்திய அமைச்சர் அஜீத்சிங்கை அரிகேசவநல்லூர் மீரான் தலைமையில் அமீரக தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்து மதுரை - துபாய் நேரடி விமான சேவையை வலியுறுத்தினர்
இப்படியாக பலரின் முயற்சியின் பலனாக மதுரையில் இருந்து துபாய்க்கு 2வது வெளிநாட்டு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நவம்பர் மாதம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இதற்கான் டிக்கெட் முன் பதிவு துவங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதுரைக்கு முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை கிடைக்கிறது.
இதன் மூலம் மதுரைக்கு முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை கிடைக்கிறது.
இந்த சேவையை தொடங்குவதன் மூலம் தென்மாவட்டங்களில் இருந்து உலக நாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். நவம்பர் இறுதியில் விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக விருதுநகர் தொகுதி எம்.பி.யும் மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினருமான திரு மாணிக் தாகூர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்
சிவில் விமானதுறை அமைச்சகம் ஏற்கனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு துபாய் செல்லும் வழித்தடத்திற்கு அனுமதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான சேவையினால் கிடைக்கும் பலன்கள்:
1. மலர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி உத்வேகம்பெறும்.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி பெருகும்.
3. மருத்துவ சுற்றுலா முன்னேற்றம் அடையும். மதுரையில் மிகக் குறைந்த செலவில் தரமான உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை பல மருத்துவமனைகள் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
4. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு இந்த புதிய சேவை ஒரு வரப்பிரசாதமாகும். இதன் மூலம் சொந்த நாட்டிற்கு வரும் இவர்களது பயண நேரமும் பயண செலவும் மிச்சமாகும்.
5. சுற்றுலா தொழிலும் வளர்ச்சிபெறும்.
இதை தொடர்ந்து FlyDubai நிறுவனமும் தனது விமான சேவையை மதுரைக்கு வழங்க ஆர்வமாக உள்ளது. அநேகமாக இந்த நிறுவனத்தின் விமான சேவை 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என கருதப்படுகிறது.
அமீரக வாழ் இராமநாதபுரம்,மதுரை,சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட உழைப்பாளி களுக்கு கானல் நீர் போல தெரிந்த இந்த விமானச் சேவை செயல் பாட்டிற்கு உழைத்த, விடா முய்ற்சி செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி கலந்த இதய பூர்வமான வாழ்த்துகள் உரித்தாகுக.
ReplyDelete