Sunday, October 13, 2013

கீழக்கரை (மணல்மேடு) கண்காட்சி திடல்!பாதுகாப்பு,சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகோள்!



கீழக்கரையில் பெருநா ளை முன்னிட்டு வடக்கு தெரு மணல் மேடு  என்றழைக்கப்படும் திடலில் ஆண்டுதோறும் கண்காட்சி நடைபெறும்.இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ராட்டினம்,உள்ளிட்ட பொழுது போக்கு சாதனங்கள் நிறுவப்படும்.மாலை நேரத்திலிருந்து இரவு வரை இங்கு ஏராளமானோர் வந்து செல்வர்.

இது குறித்து கீழக்கரையின் சமூக ஆர்வலர் சேகு சதக் இப்ராஹிம் கூறியதாவது,


பல ஆண்டுகளாக பெருநாள் தினங்களில் கீழக்கரை  மணல்மேடு பொருட்காட்சியில் செய்ய தவறிய நடவடிக்கைகள்

1 )குப்பைகளை தினமும் சுத்தம் செய்யாதது ,
2 ) அதிக ஹோட்டல்கள் வரிசையாக உள்ளது இதில் காஸ் சிலிண்டர் அதிகமாக பயன்படுகிறது இதனால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது ,(தீ அணைப்பு வண்டி இல்லாதது )
3 )மருத்துவர் குழு மற்றும் ஆம்புலன்ஸ் இல்லாதது ,
4 )இரவு 10 மணிக்கு மேல் நடத்துவது இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து ,
5 )உள்ளே உள்ள அனைத்து பொருட்களும் அநியாய விலையில் உள்ளது இதை சரி செய்ய தவறியது,
6 )விளையாட்டு ஊஞ்சல்களுக்கு பாதுகாப்பு சோதனை ஓட்ட சான்றிதழ் இல்லாதது ,
7) ஆண்கள், பெண்களுக்கு என தனி தனி கழிப்பிட வசதி இல்லாதது,
 வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தாமல் இருப்பது .

விபத்து நடந்தால் யார் பொறுப்பு .இந்த விசயங்களை சரி செய்ய தனியார் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

எனவே நமது மாவட்டத்தில் நடக்கும் பெரிய பொருட்காட்சி ,இங்கு நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் பொதுமக்கள் வருகின்றனர், எனவே மக்களின் நலன் கருதி இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கீழக்கரை நகராட்சி ஆகியவை பொருட்காட்சி நடத்தும் தனியார் நிர்வாகத்துடன் இணைந்து மேற்கூறிய பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. நமது ஊரில் இன்று நேற்று அல்ல ஆண்டாண்டு காலமாக இது போன்று பாதுகாப்பற்று தான் நடை பெற்று வருகிறது . சில வருடங்களாக அது மிக மோசமாக நடைபெற்று வருவதை நாம் அறிய முடிகிறது . இது நாம ஊருக்கு தேவையா தேவையற்றதா என்பது குறித்து இரு கருத்துகள் இருக்கிறது .

    1.தினமும் பொருள் காட்சியில் சுத்தம் செய்யப்படவேண்டும் இது தனிப்பட்ட ஜமாத்தால் நடத்தபடுகிறது அவர்கள் அதற்க்கு என்று தனியாக சில பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியார்களையும் சுத்தம் செய்ய அழைக்கலாம் .

    2.அதிக ஹோட்டல் இருகிறது விபத்து நடக்க வாய்ப்புகள் இருக்கிறது கண்டிப்பாக பொருள் காட்சியே ஏற்று நடத்தும் ஜாமாத் தீயணைப்பு துறைக்கு மற்றும் நகராட்சிக்கு மனு கொடுக்கலாம் விபத்துகள் தவிர்க்கப்படும்

    3. மருத்துவர் குழு மற்றும் ஆம்புலன்ஸ் தா மு மு கா மற்றும் எஸ் டி பி ஐ மற்றும் சில இயக்கங்கள் அரசு ஆம்புலன்ஸ் இருக்கிறது அவதரிக்கும் மனுக்கள் கொடுத்து தயார் நிலையில் இருக்க செய்யலாம் .

    4.இரவு 10 மணிக்கு மேலே பொருள்காட்சி நடத்தபடுகிறது இதை சம்மந்த பட்ட ஜாமத் சகோதர்கள் தடை செய்யலாம் .முன்பு எல்லாம் ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தற்போது அப்படி இல்லை இது சில பிரச்சனைகளையும் உருவாக்கும்

    5.உள்ளே உள்ள பொருள்கள் அதிக விலை விற்க்கபடுகிறது என்றால் 3 நாள்களுக்கு அதிகமாக கடைகளுக்கு வாடகை வசூல் செய்யபடுகிறது என்றும் கூறபடுகிறது அதை சம்மந்தப்பட்ட ஜமாஅத் சகோதர்கள் சரி செய்யலாம் . அதிகமாக விற்கப்படும் கடைகளுக்கு அடுத்த முறை கடை கொடுக்கபடாது என்று அறிவிப்பு செய்யலாம்

    6. விளையாட்டு ஊஞ்சல்களுக்கு பாதுகாப்பு சோதனை ஓட்ட சான்றிதழ் அனைத்தையும் பரிசோதனை செய்யப்பட்ட உடன் பொருள்காட்சியில் அனுமதி அளிக்கலாம்

    7.ஆண்கள், பெண்களுக்கு என தனி தனி கழிப்பிட வசதி இல்லாதது தற்காலிகமாக அமைப்பது சற்று சிரமமான ஒன்றாக தான் இருக்கும் . வருகிற கூட்டத்திற்கு இந்த கழிப்பிடங்கள் அமைப்பது கடினம் தான்

    இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது இதை யாராவது மனுவாக மாவட்ட ஆட்சியாளருக்கு கொடுத்தால் இந்த பொருல்காட்ச்சிக்கு அனுமதி கிடைக்காது என்றே நினைக்கிறன்

    உங்களுடைய கேள்விகள் அனைத்தும் நியாமானது தான்

    ReplyDelete
  2. nalla kelvikal...
    unmaithaan...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.