Sunday, October 27, 2013

உபயோகமற்ற கண்ணாடி பொருட்கள்,பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி வீட்டு அழகு பொருட்கள்!பள்ளி மழலையர் அசத்தல்!



கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தனி திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.





பள்ளியின் மழலை மாணவ மாணவியருக்கு  களிமண் ,உபயோகமற்ற கண்ணாடி பொருட்கள்,,பிளாஸ்டிக்  உள்ளிட்ட கழிவுகள் மூலம் விசிறி ,பொம்மை உள்ளிட்ட பல்வேறு அழகு  பொருட்கள் செய்யும் போட்டிகள் நடத்தப்பட்டன இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பல்வேறு கழிவு பொருட்களை  வீணடிக்காமல் வீட்டு அழகு பொருட்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

மேலும் உயர் நிலை மாணவர்களுக்கு பொது அறிவு கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் கூறியதாவது,

மாணவ,மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டனர்.இதன் எந்த பொருளையும் வீணடிக்காமல் மறு சுழற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் வளர்த்து கொண்டனர்.வீட்டில் பெற்றோர்களும் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.