Monday, February 6, 2012

அநாகரீகமாக பேசியதாக நகராட்சி அலுவலர் மீது கலெக்டரிடம் புகார் !




அநாகரீகமாக பேசியதாக ந‌க‌ராட்சி அலுவ‌ல‌ர் மீது ந‌ட‌வடிக்கை எடுக்க‌ கோரி க‌லெக்ட‌ரிடம் 18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் அருண்ராயிட‌ம் ம‌னு கொடுத்துள்ளார்.

அம்ம‌னுவில் கூறியிருப்ப‌தாவ‌து,

4.02.2012-ம் தேதி காலை 11 மணியளவில் கீழக்கரை நகராட்சி 5வது வார்டு பகுதியில் பொது சுகாதாரம் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு தேவை என குப்பைகளை தெருக்களில் போடாமல் பெரிய பிளாஸ்டிக் டிரம் வைத்து அதில் குப்பைகளை போடவும் அதில் சேரும் குப்பைகளை தினசரி நகராட்சி பொது சுகாதார வாகனம் எடுத்துக் செல்லவும் கீழக்கரை நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் தன் சொந்த செலவில் பெரிய 6 பிளாஸ்டிக் டிரம் வாங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பல கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.
5வது வார்டு பருத்திக்காரத் தெருவில் வீட்டின் அருகே பல நாட்களாக அள்ளாத குப்பைகளால் துர்நாற்றம் அதிகமாக இருந்தது. அங்கு வந்த கீழக்கரை நகராட்சி துப்பர‌வு பணி மேற்பார்வையாளர் மனோகரிடம் வீதியில் குப்பைகளை அள்ளாமல் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளதே இப்பகுதி மக்கள் மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு புகார் செய்தால் நம் நகராட்சிக்கு அவப்பெயர் என்ற அடிப்படையில் கேட்டேன்.

துப்பரவு பணி மேற்பார்வையாளர் மனோகரன் அநாகரிகமான முறையில் "மாசு கட்டுப்பாட்டு வாரியம் போங்கள், எந்த மாமா கட்டுபாட்டு வாரியம்" போங்கள் எங்கு புகார் செய்தால் எனக்கென்ன அதை நான் பார்த்துக் கொள்கின்றேன் உங்க வேலையை பாருங்க என அநாகரிகமான முறையில் மாசுக் கட்டுபாட்டு வாரிய நிர்வாகத்தை தவறாக பேசினார். நகர்மன்ற கவுன்சிலரிடம் தவறாக பேசும் இவர் பொது மக்களிடம் எப்படி பேசுவார்? பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் இவரை வேறு நகராட்சிக்கு பணிமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். சொந்த ஊரில் 25 வருடங்கள் தொடர்ந்து பணிபுரிவதால் இவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் இருந்து வருகின்றது என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

3 comments:

  1. திண்ணை தோழன்February 7, 2012 at 10:00 PM

    முன்னாள் சேர்மனின் கைப்புள்ள இந்த மனோகரன்
    முன்னாள் சேர்மன் அடித்த கொள்ளையில் பீயே வாக செயல்பட்ட இந்த மனோகரன் சேர்த்த சொத்துக்கும் அடிச்ச பணத்துக்கும் முறையாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. திண்ணை தோழன்February 7, 2012 at 10:02 PM

    முன்னாள் சேர்மன் கைப்புள்ள மனோகரன்
    இல்லாத பணியாளர்களுக்கு செய்யாத வேலைக்கு பில் போட்டு அடிச்ச மக்கள் பணத்தை திரும்ப மீட்க வேண்டும்

    ReplyDelete
  3. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை இவர் 18 வது வார்டு உறுப்பினரா?இல்லை 5 வது வார்டு உறுப்பினரா? இல்லை கீழக்கரை சேர்மனா?? 5 வது வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் அங்கு இருக்கும் போது அங்கு உள்ள பிரச்சனைகளை பற்றி பேச இவருக்கு என்ன உரிமை உள்ளது. மேலும் அன்று நடந்த அந்த விழாவில் இவர் மட்டும்தான் கலந்து கொண்டாரா?? துணை சேர்மன் உட்பட அதிகமான உறுபினர்கள் அங்கு இருந்தார்கள் மேலும் கீழக்கரையில் உள்ள குப்பை பிரச்சனை அனைவரும் அறிந்த விஷயம். 5 வது வார்டு தவிர மற்ற அணைத்து வார்டும் சுத்தமாக இருக்கிறதா? இவரது 18 வது வார்டு குப்பை இல்லாமல் பல பலவென இருக்கிறதா?? 4.02.2012-ம் தேதி அன்று 5 வது வார்டில் துப்பரவு பணி மேற்பார்வையாளர் மனோகரன் அவர்களிடம் இவர் வீணாக வாய் தகராறு செய்துள்ளார், எந்த ஒரு மனிதனுக்கும் சரியான காரணம் இல்லாமல் ஒருவர் தகராறு செய்யும் பொழுது கோபம் வரத்தான் செய்யும் அவர் அரசு அதிகாரியாக இருந்தால் என்ன இல்லை அரசியல்வாதியாக இருந்தால் என்ன? இதை இவர் பெரியதாக்கி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். இவர் செய்யும் செயல் அனைத்தும் இவரது சுய விளம்பரத்திற்காக மட்டும்தான் இதில் சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் வேதனை, இவருக்கு வாக்களித்த மக்களுக்காக இவர் எப்பொழுது கடமை ஆற்ற போகிறார் என்று தெரியவில்லை.. இவர் உறுப்பினர் பதவியேற்ற பிறகு மக்களுக்கு கடமை செய்ததை விட நகராட்சி கூட்டம் மற்றும் பொது இடங்களில் தகராறு செய்ததும் தேவையற்ற புகார்கள் செய்ததும்தான் அதிகம்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே உண்மை புரியும். இது எனது தனிப்பட்ட கருத்து இதில் உண்மை இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் அனுப்புங்கள். இல்லை என்றால் என்ன தவறு உள்ளது என்று கூறுங்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.