Sunday, October 28, 2012

கீழ‌க்கரையில் 40க்கும் மேற்ப‌ட்டோருக்கு டெங்கு! ந‌ட‌வ‌டிக்கை ம‌ந்த‌ம் என‌ குற்ற‌ச்சாட்டு!


கீழக்கரையில் பெரியவர் முதல் சிறியவர் வரை 40க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் புதுத்தெரு அப்துல்வாகிது என்பவரின் ஒன்றரை மாதம் ஆண் குழந்தை இறந்தது. பெரிய அம்பலார் தெருவைச் சேர்ந்த பாத்திஹ் மவுலானா(19) என்ற இன்ஜினியரிங் மாணவன் மற்றும் மேலத்தெரு மாதிஹூர்ரசூல் சாலையைச் சேர்ந்த ஹதிஜத் ரில்வியா(20) என்ற இளம்பெண் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துரை மற்றும் நகராட்சி இணைந்து எடுத்த நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் டெங்கு பாதிப்பு தலைதூக்கியுள்ளது.

மீண்டும் உயிரிழப்பு ஏற்படும் முன்பு சுகாதாரத்துறை முகாம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து 21வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறுகை யில், ‘எனது வார்டு பகுதியில் சுகாதாரக்கேடு அதிகம் இருப்பதால் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள அன்புநகரை சேர்ந்த ஹிரா(13) என்ற 7ம் வகுப்பு மாணவி மற்றும் பெரிய அம்பலார் தெருவைச் சேர்ந்த ஒரு மாண‌வ‌ரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழக்கரையை சேர்ந்த 40கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்பால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை கீழக்கரையில் விரைவில் இதற்கான முகாம் அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேட்டை போக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், ‘டெங்கு பரவுவதற்கு காரணம் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் மெத்தனமே. ஆங்காங்கே பலநாட்கள் அகற்றப்படாமல் கிடக்கும் குப்பைகளும், தேங்கி நிற்கும் கழிவுநீரும்தான் காரணம் முத லில் அதை அகற்றி மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் முகாம் அமைக்க வேண்டும்’ என்றார்.






இது குறித்து ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர் குத்புதீன் ராஜா கூறுகையில்,

ஆங்காங்கே ம‌ழை நீர் தேங்கி நிற்கிற‌து.இத‌ன் மூலம் கொசு ப‌ர‌வும் வாய்ப்பு அதிக‌ம் இதை ந‌க‌ராட்சி உட‌ன‌டியாக‌ அக‌ற்ற‌ வேண்டும்டெங்கு காய்ச்ச‌ல் ப‌ர‌வி வ‌ருவ‌தால் குழ‌ந்தைக‌ளை வெளியே அழைத்து செல்லும் போது அச்ச‌மாக‌ உள்ள‌து.ப‌க‌ல் நேர‌த்தில் க‌டிக்கும் கொசுமூல‌ம் டெங்கு ப‌ர‌வுவதாக‌ சுகாதார‌த்துறையால் அறிவுறுத்த‌ப்ப‌ட்டுள்ள‌துது.என‌வே இர‌வில்தான் வெளியே அழைத்து செல்ல‌ வேண்டும் போல் தெரிகிற‌து.மேலும் கொசும‌ருந்து அனைத்து இட‌ங்க‌ளில் அடித்த‌ல் வேண்டும்.த‌ற்காலிக‌மாக‌ கூடுத‌ல் ப‌ணியாள‌ர்க‌ளை நிய‌மித்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்

துணை இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,

‘கீழக்கரையில் டெங்குவை ஓழிப்பதற்காக ஐந்து குழு அமைத்து ஒவ்வொரு வார்டாக காய்ச்சல் இருப்பதை கண்டறிந்து சுகாதாரத்தை பாதுகாக்கவும் கிணறுகளில் மருந்து ஊற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் டெங்கு காய்ச்சல் குறைந்த பாடில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
விரைவில் இதற்கான முகாம் கீழக்கரையில் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்படும். வரும் நவம்பர் மாத இறுதிக்குள் டெங்கு பிளஸ் மலேரியா இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.




 

6 comments:

  1. Makkal muyarchi vendum (kurippaha pengal)....illlai endral ithu saathiyam illai...!

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 31, 2012 at 7:30 PM

    நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகார பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி திருவாளர். பால்சுப்பிரமணியன் கூற்றில் கூட குப்பைகளை அக்ற்றுவது சம்பந்தமாக மூச்சே விடவில்லை. ஏதோதோ சொல்லி சப்பை கட்டு கட்டுகறார்..எல்லாம் பாவப்பட்ட கீழக்கரை மக்கள் வாங்கி வந்த வரம் அப்படி!!!

    குப்பைகளை அகற்றாமல் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்/ எதிர் பார்ப்பதில் யாது பயன்??

    நாம் ஏற்கனவே கீழக்கரை டைம்ஸில் கருத்து பதிவு செய்தப்படி கீழக்கரை வெல்பேர் துப்பரவு பணியில் இன்னும் தொய்வு நிலையே தொடர்கிறது..பணி தொய்வால் கவுச்சு நாற்றம் எடுத்த குப்பை மற்றும் கழிவுகளை வீதியில்தான் கொட்டுவாரகள். இதன் காரண்மாக் மக்களை நோவதில் யாதொரு பயன்??

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 31, 2012 at 7:46 PM

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 5:22 PM
    சிறப்பாக செயல் பட்ட கீழக்கரை வெல்பேர் அஷோஷியேஷன் மர்ஹூம் ஜனாப்.லியாகத் அலி மறைவுக்கு பின் ஏறபட்ட நிர்வாக மாற்றத்திற்கு பின் அதன் பணியில் தொய்வு காணபபடுவது போல தென்படுகிறது..

    முதலில் புதிய நிர்வாகத்தினர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விசில் சத்தம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.. துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை எடுக்க வீடு நாடி வரும் போது அவர்கள் எழுப்பும் விசில் சத்த ஒலியால் பொது மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு.காலத் தாமதம் தவிர்க்கப் படுகிறது..மேலும் வீட்டின் உடபுறத்தில் இருந்தாலும் விசில் ஒலியால் நினைவுட்டப் படுகிறார்கள்..நல்லதொரு பராட்டுக்குரிய செயல்பாடு..

    பாச மனைவி, ஆசை மக்களை,பெற்று வளர்த்து ஆளாகிய தியாக பெற்றோர்களை,சகோதர சகோதரிகளை உற்றார் உறவுகளை,தோள் கொடுப்பான் தோழர்களை பிரிந்து கடல் கடந்து , ஆசாபாசங்களை துறந்து இயந்திர மனிதனாக அரபு, அமீரக நாடுகளில் வாழும் நமது நகர் உடன் பிறவா சகோதரர்களிடம் மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் நிதியினாலும், இ.டி.எ - அஸ்கான் - ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை தலைவர் பாசத்துகுரிய சாலாவுதீன் காக்கா அவர்களின் தீவிர ஆதரவு மற்றும் சளையாத ஆலோசனையின் பயனாக கீழக்கரை வெல்பேர் அஷோஸியேஷன் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நகரின் சுகாதார சீர்கேட்டை முடிந்த அளவு சீர் செய்து வருகிறது என்பதை யாராலும் மறைக்கவோ மறக்கவோ முடியாது..


    Reply

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 6:16 PM
    கடந்த ஆராண்டு காலத்திற்கு மேலாக குப்பைகரையாக மாறிய கீழக்கரையில் வெல்பேரின் சேவை மட்டும் இல்லாதிருந்தால் நகரின் சுகாதார நிலைமையை எண்ணிப் பார்க்கக் கூட நமது மூளைகளுக்கு திராணி என்பது திண்ணமாக அறவே இருக்க முடியாது. சுகாதார சீர்கேட்டின் காரணமாக பூத்து குலுங்க வேண்டிய சில பிஞ்சுகளை இழந்தோம்.

    அந்த ஆதஙகத்தில் தான் மனம் அழுது இதை பதிவு செய்கிறேன்... வெல்பேர் சேவையில் தொய்வு மட்டுமல்ல முன்னை விட இன்னும் சிறப்பாக முனைப்புடன் செயல் பட வேண்டும் என பொது மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்..உங்கள் சேவை அவ்வளவு மகத்தானது.. சீரிய சிறப்புடையது.

    நகரில் பெரும்பாலான பொது மக்கள் அசைவ உணவுக் காரர்கள். ஆகவே வீட்டில் சேரும் மீன்,இறைச்சி மற்றும் சில மணி கூறுகளில் நாற்றமெடுக்கும் கழிவுகளை ஒரு நாளைக்கு மேல் பாதுகாக்க முடியாது. சமீப காலத்தில் வெல்பேர் துப்பரவு பணியாளர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வராமல் இருக்கிறார்கள், குறிப்பாக இடி சந்துகளில் உள்ள வீடு களுக்கு..காரணம் புரியவில்லை. அச்சமாக இருக்கிறது.. எனென்றால் இந்த குறைபாடு பொது மக்களை நடு இரவில் நாற்றமெடுத்த கழிவு குப்பைகளை நடு வீதியில் வீசக்கூடிய சூழ்நிலையை உருவாக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும்.. தேவையா?? பின்னர் பொது மக்களை நோவதில் யாது பயன்??

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழவின் ஆதாரம்..

    மேலும் துப்பரவு பணி மேற்பார்வையாளார்களின் அலைபேசி எண்ணையும் பரவலாக அறியப்பட வைக்க வேண்டும். அப்போது தான் குறை உள்ளவர்கள் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்..

    வாழக நலமுடன், நாங்களும் நீங்களுமாக..

    Reply

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 6:31 PM
    சங்கை மிகு குர்ஆனின் அறிவிப்பு:

    அசுத்தங்களை வெறுத்து விடுங்கள். அத்தியாயம் 74 அல் முத்தஸ்ஸிர் (போர்த்திக் கொண்டவர்) வசனம் 5

    உங்கள் இறைவனின்ன் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (க் கஷ்டங்களை)நீங்கள பொறுத்திருங்கள் வசனம் 7

    ReplyDelete
  4. அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீசல் போட்டதா கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிட்டாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.""எந்தூர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.



    ""ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சில... குப்பை அள்றதுக்குன்னு, ஒரு வாகனம் வாங்கினாங்க... அதோட மதிப்பு, 16 லட்ச ரூபாய்... வாங்கினப்பவே வெள்ளோட்டம் பார்த்தாவ... அப்பவே வண்டி சரியில்லேன்னு, ஓரங்கட்டிட்டாவ... மேலிடத்துக்கும் தகவல் தரலே... வண்டியை, "ரிப்பேர்' செஞ்சு ஓட்டுறதுக்கும் முயற்சிக்கலே... இப்ப, அந்த வண்டியை தினமும் பயன்படுத்துறதாவும், டீசலுக்கு தினமும் இவ்ளோ தொகை ஆகுதுன்னும் கணக்கு காமிச்சு, அந்தக் காசை சுருட்டிட்டிருக்காங்க... கலெக்டருக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலே...'' எனக் கூறினார் அண்ணாச்சி.""இதென்ன பெரிய விஷயமா... நிறைய எடத்துல, ஓடிட்டிருக்குற வண்டிகளையே, கூடுதல் கி.மீ., ஓடுனதா கணக்கு காமிச்சு, பணத்தை எடுக்கத் தானே செய்யறா...'' எனக் கூறியபடியே கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் காலியானது!

    ReplyDelete
  5. அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீசல் போட்டதா கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிட்டாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.""எந்தூர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.



    ""ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சில... குப்பை அள்றதுக்குன்னு, ஒரு வாகனம் வாங்கினாங்க... அதோட மதிப்பு, 16 லட்ச ரூபாய்... வாங்கினப்பவே வெள்ளோட்டம் பார்த்தாவ... அப்பவே வண்டி சரியில்லேன்னு, ஓரங்கட்டிட்டாவ... மேலிடத்துக்கும் தகவல் தரலே... வண்டியை, "ரிப்பேர்' செஞ்சு ஓட்டுறதுக்கும் முயற்சிக்கலே... இப்ப, அந்த வண்டியை தினமும் பயன்படுத்துறதாவும், டீசலுக்கு தினமும் இவ்ளோ தொகை ஆகுதுன்னும் கணக்கு காமிச்சு, அந்தக் காசை சுருட்டிட்டிருக்காங்க... கலெக்டருக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலே...'' எனக் கூறினார் அண்ணாச்சி.""இதென்ன பெரிய விஷயமா... நிறைய எடத்துல, ஓடிட்டிருக்குற வண்டிகளையே, கூடுதல் கி.மீ., ஓடுனதா கணக்கு காமிச்சு, பணத்தை எடுக்கத் தானே செய்யறா...'' எனக் கூறியபடியே கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் காலியானது!

    ReplyDelete
  6. அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீசல் போட்டதா கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிட்டாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.""எந்தூர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.



    ""ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சில... குப்பை அள்றதுக்குன்னு, ஒரு வாகனம் வாங்கினாங்க... அதோட மதிப்பு, 16 லட்ச ரூபாய்... வாங்கினப்பவே வெள்ளோட்டம் பார்த்தாவ... அப்பவே வண்டி சரியில்லேன்னு, ஓரங்கட்டிட்டாவ... மேலிடத்துக்கும் தகவல் தரலே... வண்டியை, "ரிப்பேர்' செஞ்சு ஓட்டுறதுக்கும் முயற்சிக்கலே... இப்ப, அந்த வண்டியை தினமும் பயன்படுத்துறதாவும், டீசலுக்கு தினமும் இவ்ளோ தொகை ஆகுதுன்னும் கணக்கு காமிச்சு, அந்தக் காசை சுருட்டிட்டிருக்காங்க... கலெக்டருக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலே...'' எனக் கூறினார் அண்ணாச்சி.""இதென்ன பெரிய விஷயமா... நிறைய எடத்துல, ஓடிட்டிருக்குற வண்டிகளையே, கூடுதல் கி.மீ., ஓடுனதா கணக்கு காமிச்சு, பணத்தை எடுக்கத் தானே செய்யறா...'' எனக் கூறியபடியே கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் காலியானது!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.