Sunday, September 30, 2012

பிற‌ந்த‌ நாள‌ன்று டெங்கு காய்ச்ச‌லில் கீழ‌க்க‌ரை இள‌ம்பெண் உயிர‌ழ‌ந்தார்!கீழ‌க்க‌ரையில் தொட‌ரும் சோக‌ம்!

கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு மாதிஹுர் ர‌சூல் சாலையில் வ‌சித்து வ‌ந்த‌ யூசுப் சாகிபு ம‌க‌ள் ஹ‌திஜ‌த் ரில்வியா(20) இவ‌ர் தொட‌ர்ந்து ஒரு வார‌ கால‌மாக‌ காய்ச்ச‌ல் பாதித்து ராம‌நாத‌புர‌ம் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ந்துள்ளார். நேற்று ப‌ரிசோத‌னை செய்த‌தில் டெங்கு இருப்ப‌தாக‌ தெரிய‌வ‌ந்த‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. இதை தொட‌ர்ந்து காலையில் ம‌துரை த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முய‌ற்சிகள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ நிலையில் இன்று அதிகாலை உயிர‌ழ‌ந்தார். இவ‌ருக்கு செப் 30ம் தேதி 20வ‌து பிற‌ந்த‌நாள் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

க‌ட‌ந்த‌ ஆக‌ 18ல் கீழ‌க்க‌ரை பெரிய‌ அம்ப‌லார் தெருவை சேர்ந்த‌ பாத்திஹ் ம‌வுலானா என்ற‌ இன்ஜினிய‌ரிங் மாணாவ‌ர் காய்ச்ச‌லில் ப‌லியானார். அதே போல் புது தெருவை சேர்ந்த‌ அப்துல் வாஹிது ம‌க‌ன் ஒன்றைரை மாத‌ குழ‌ந்தை உயிர‌ழ‌ந்தது.

15வ‌து வார்டு க‌வுன்சில‌ர் கூறுகையில்,

 என‌து வார்டு ப‌குதியில் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ச‌ரியான‌ முறையில் குப்பைக‌ளை அக‌ற்றுவ‌தில்லை,கொசும‌ருந்து அடிப்ப‌தில்லை இது குறித்து ப‌ல‌முறை ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர்,தலைவ‌ர்,ம‌ற்றும் சுக‌தார‌ ஆய்வாள‌ரிட‌ம் புகார் தெரிவித்தும் ந‌ட‌வ‌டிக்கை இல்லை என‌து வார்டு ப‌குதியை ஒதுக்கிவிட்ட‌ன‌ர் என்றார்.

அப்ப‌குதியை சேர்ந்த‌ பாசில் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து ,
கீழ‌க்க‌ரையில் ஒவ்வொரு முறை காய்ச்ச‌லில் உயிர‌ழ‌ப்பு ஏற்ப‌டும் போது அர‌சின் சுகாதார‌த்துறை இது டெங்கு இல்லை என்ற‌ கார‌ண‌ங்க‌ளை ம‌ற்றும் கூறி விள‌க்க‌ம‌ளிக்கிறார்க‌ளே த‌விர‌ த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைகள் எடுத்த‌பாடில்லை இன்னும் உயிர்க‌ள் ப‌லியாக‌ வேண்டும் என்று காத்திருக்கிறார்க‌ளோ...என்றார்

  ஹ‌திஜ‌த் ரில்வியாவின் ம‌றைவு அப்ப‌குதியில் பெரும் சோக‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

4 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 30, 2012 at 7:55 PM

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹூன். வ இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்.. இஹ்தி னஸ்ஸிராதல் முஸ்த்கீம்..

    சோதனை மேல் சோதனை போதுமடா அல்லா. சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது (இந்த கீழக்கரை)பூமி யாரப்பே..

    மலர்ந்து பூத்து குலுஙகக் கூடிய இந்த இளம் வயதில், சீரோடும் சிறப்போடும் வளர்த்த ஆசை செல்வ மகளை ஜனாஸா கோலத்தில் கணட அன்னாரின் தாய், தந்தையருக்கு ஆறுதல் கூற திண்ண்மாக நம்மால் முடியாது..நம்மை படைத்த வல்ல நாயன் ஒருவனால் ம்ட்டுமே முடியும்.ஸ்ப்ரன் ஜமீலா என்னும் அழகிய, உயர்ந்த பொறுமையை அவர்களுக்கு நல்க யா அல்லாஹ் நீராடும் கண்களோடு உன்னிடத்தில் இரு கையேந்தி மனமுருக துவா செய்கிறோம்..

    மேலும் அன்பு சகோதரி மர்ஹூமா ஹதிஜத் ரில்வியாவுக்கு, உனது ஹபீப் எங்களின் இறுதி ரசூல் கண்மணி செய்யதினா முகம்மது நபி ஸல்லலாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் உம்மத்து களுக்காக உந்தன் பெருங் கருணையினால் படைத்திருக்கும் ஜன்னத் பிர்தௌவ்ஸில் நற்பதவியையும், எம் பெருமானரின் ஷபாத்(தை)யும் நஸிப்பாக்கி வைப்பாயாக எங்கள் ஏக நாயனே ஆமீன்

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 30, 2012 at 10:04 PM

    ஒரு வாரமாக காய்ச்சலில் அவதிப் படுபவர்க்கு நேற்று தான் இரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உள்ளதாக அறியப் பட்டுள்ளது..கால தாமதத்திற்கு காரணம் யாதோ??மர்த்துவ மனையின் வருமானத்திற்காகவா??

    சமீப காலங்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக கருவாடு காயப்போடும் கடற்கரை ஊர்களில் டெங்கு கிருமிகள் பரவலாக காண்ப்படுவதாக மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ண்ம் இருக்கிறது..அப்படி இருக்கையில் இந்த கால தாமதம் ஏன்?? விழிப்புணர்வு இல்லையா அல்லது அலட்சியத்துடன் கூடிய ஆணவ போக்கா??

    போன ஆத்மா திரும்பப் போவதிலை.ஈடும் கட்ட முடியாத துயரச் சம்பவம்.. இருக்கும் உயிர்களை காப்பாற்ற இனியாவது விழிப்புடன் செயல் படுவோமாக..

    அது சரி, நம்தி ஊரில் நகராட்சியின் சுகாதாரத் துறை செயல் படுகிறதா? இல்லையா?? பேருக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தான் அவர்களுக்கு மக்களின் வரிப் பணத்திலிருந்து சம்பளம் கொடுக்கப் படுகிறதா? சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்து செயல் பட முனைவீர்களாக. வீணாக பாவத்தை சுமக்க எத்தனிக்காதீர்களாக. இறைவன் பிடரி நரம்புக்கு அருகில் இருந்து கண்காணித்து கொண்டிருக்கிறான்..
    இது மக்கள் பிரதிநிதிகள் அனவருக்கும் பொருந்தும்

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 30, 2012 at 10:29 PM

    மறு பதிப்பு:

    சமீபத்திய பத்திரிக்கையின் குறிப்புபடி கடலோர குடி இருப்பு கிராமங்களில் தொற்று நோய் கிருமிகள் அபரிதமாக காணப்படுகிறது. காரணம் அங்கேல்லாம் ஊற வைத்து நாற்றம் எடுத்த மீன்களை கருவாடு தயாரிக்க மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே திறந்த வெளியில் காயப் போடுகிறார்கள்.

    இது விஷயத்தில் நமதூரின் நிலை என்ன? நமதூரின் சிறிய கடற்கரையை அடைத்தாற்போல் கருவாடு பண்ணை உள்ளது. அனுதினமும் கடற்காற்று தரையை நோக்கி வீசும் போது அங்கு காயப்போட்டிருக்கும் கருவாடுகளை ஆரத் தழுவி தொற்றுக் கிருமிகளுடன் ஊருக்குள் நுழையும் காற்றை சுவாசிக்க கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கணாததற்கு கடற்கரை ஓரக்களில் குப்பை மலைகள்.இதன் பயனாகவே வருடம் முழுவதும் நகரில் தொற்று வியாதிகள் தீராத பிரச்சனையாக உள்ளது. இது சம்பந்தமாக உள்ளூர் மற்றும் இராமநாதபுரத்தில் உள்ள சிறப்பு குழந்தை மருத்துவர்களிடம் கேட்டால் மனதை பிழியும் அதிர்ச்சியான அறிக்கைதான் கிடைக்கும். அதிலும் கடற்கரை ஓரங்களில் குடி இருப்போரிடம் முக்கியமாக காலை வேளையில் அவர்கள் படும் துயரத்தை கேட்டால் அதை எழுத்தில் வடிக்க முடியாது.

    முன் காலங்களில் கருவாடு பண்னைகள் ஊருக்கு கிழக்கே பெரிய பட்டிணத்த்ற்கு இடைப்ப்டட மக்கள் குடி இருப்பு இல்லாத திறந்த வெளியிலும், மேற்கே சின்ன ஏர்வாடிக்கு இடைப்பட்ட மக்கள் குடி இருப்பு இல்லாத திறந்த வெளிப் பகுதியிலும் காயப் போடுவார்கள். இது மட்டும் அல்ல. திராவகம் கலந்த கடல் பாசிகளையும் காயப் போடுவார்கள்.200-க்கும் அதிகமான மீன்பிடி விசை படகுகள் இருந்த காலத்தில் கூட இந்த கொடுமை நடக்கவில்லை

    ஆனல் சமீப காலங்களில் ஊரின் நலனில் அக்கரை அற்ற சொரணை அற்ற பொரும்பாலன மக்களின் காரணமாக, போகுவரத்து செலவை மிச்சப்படுத்தி தொழிலில் கொள்ளை லாபம் காண இவர்கள் ஊர் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கி பூமியிலேயே சுகிக்க வைக்கிறார்கள். கஷ்டத்தை அனுபவிகிறர்களே தவிர எதிர்ப்பு இல்லை. வசூல் வேட்டை நடத்தி குதுகளிக்கும் பொது நல அமைப்புகளும் கண்டு கொள்வதில்லை. (விதி விலக்காக இருக்கும் மிகச் சில பொது நல அமைப்புகள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

    தனிப்பட்ட இரண்டு நபர்களுக்காக ஊர் மக்கள் அல்லல் படத்தான் வேண்டுமா? ஒருவர் வெளியூர் வாசியான கருவாடு பண்ணைக்காரர். மற்றவர் இடத்தை வாடகைக்கு கொடுத்தவர்கள்.அவர்களின் செல்வத் தகுதிக்கு இந்த வாடகை வருமானம் ஒரு பொருட்டே அல்ல. ஊர் மக்களின் நலன் கருதி மனம் மாற எல்லாம் வல்ல ரஹ்மான் கருணை புரிவானாக.ஆமீன்.

    பூனைக்கு யார் மணி கட்டுவது? நகராட்சி சுகாதாரத் துறையும், மாவட்ட சுகாதார மேலாளர் திருமதி. உமா மகேஸ்வரியும் லஞ்ச லாவண்ணியத்திற்கு இடம் கொடாது போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நகர மக்களை குறிப்பாக குழந்தை செல்வங்களை காக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் கட்சி பாகுபாடு இன்றி துயர் நீங்க பாடு பட வேண்டும்..

    இழப்புகள் ஏற்பட்ட பிறகு துயரப் படுவதை விட வரும் முன் காப்போம் என செயல் படுவோமாக. இதில் பொது மக்களுக்கும் மகத்தான பங்குண்டு.காரணம் இழப்பு ஏற்பட்டால் வேதனைப் படப் போவது பொது மக்களாகிய நாம் தான்..

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹூன். யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அவருக்கு மறுமையில் சிறந்த இடத்தை கொடுத்தருள்வாயாக!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.