Wednesday, October 9, 2013

18வது வார்டில் வீட்டுக்குள் சாலையோர கழிவுநீர் செல்லும் அவலம்!கவனிக்க மறுப்பதாக கவுன்சிலர் மீது புகார்

  வீட்டு வாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கீழக்கரை 18வது வார்டின் ஒரு பகுதியில் சாலையோரம் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் பல இடங்களில் சிமெண்டி மூடி உடைந்தும் ,குப்பை கூளங்கள் நிறைந்தும் இருப்பதால் கழிவு நீர் சீராக ஓடாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மேலும் சில தாழ்வான இடத்தில் வீடுக்குள் கழிவுநீர் புகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுஃபியான் கூறியதாவது,

நீண்ட காலமாக இப்பிரச்சனை இருந்து வருகிறது.கால்வாய் மூடிகள் உடைந்து இருப்பதால் உள்ளே தவறி விழும் சம்பவமும் நடைபெறுகிறது.இங்கே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இப்பகுதி வழியாக ஏராளமான பள்ளி சிறுவர் சிறுமிகள் சென்று வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் உள்ள  கால்வாயிலிருந்து கழிவுநீர் வழிந்து வீட்டு உள் பகுதிக்கு கழிவு நீர் புகுந்து விடுகிறது.இதனால வீட்டில் உள்ளவர்கள் படும் சிரமத்திற்கு அளவே இல்லை.வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும்  வீட்டில் புகுந்த கழிவுநீரை வெளியேற்றும் அவல நிலைக்கு வீட்டுக்காரர்கள் தள்ளபடுகிறார்கள்.

இது தொடர்பாக பல முறை இப்பகுதியின் கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிமிடம்  எடுத்து கூறியும் எவ்வித நடவடிக்கையையும் இவர் எடுக்கவில்லை.ஊர் பிரச்சனையில் முன் நிற்கும் இவர்  முதலில் தனது வார்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்.இவர்தான் நகராட்சியின் பார்வைக்கு எடுத்து சென்று வார்டின் குறைகளை தீர்க்க வேண்டும்.ஆனால் யாரும் கேட்பார் இல்லாததால் இப்பகுதி மிக மோசமான சுகாதார கேடில் முன்னிலை வகிக்கிறது.இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் விரக்தியில் உள்ளனர்.இனியாவது இப்பகுதி பிரச்சனையை தீர்ப்பார்களா? என்றார்.

படங்கள் மற்றும் செய்தி : எஸ்.கே.வி சேக்(கீழக்கரை கிளாசிபைட்)

5 comments:

  1. I see daily this issues in this Area..! mr muhaideen ibrahim take action immediately..!!

    Reg : Skv Sheik

    ReplyDelete
  2. ஊர் பிரச்சனையில் முன் நிற்கும் இவர் முதலில் தனது வார்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்.இவர்தான் நகராட்சியின் பார்வைக்கு எடுத்து சென்று வார்டின் குறைகளை தீர்க்க வேண்டும். insha அல்லாஹ்

    ReplyDelete
  3. ஊர் பிரச்சனையில் முன் நிற்கும் இவர் முதலில் தனது வார்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்.இவர்தான் நகராட்சியின் பார்வைக்கு எடுத்து சென்று வார்டின் குறைகளை தீர்க்க வேண்டும்.insha allah

    ReplyDelete
  4. கீழக்கரை அலி பாட்சாOctober 9, 2013 at 10:41 PM

    வார்டு மக்கள் பிரதிநிதி சகோதரர் முகைதீன் இபுறாகிம் அவர்களுக்கு இந்த பிரச்சனையில் நல்லதோர் தீர்வு காண எந்த அளவுக்கு தார்மீக பொருப்பு உள்ளதோ நகராட்சி ஆணையர் மற்றும் நகரின் முதல் குடி மகளுக்கும் அதில் இம்மியளவுக்கும் குறையாமல் தார்மீக பொருப்பு உண்டு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. காரணம் இது பொது மக்களின் தலையாய பிரச்சனை. ஆனால் இவர்களுக்குள் இருக்கும் ஈகோவினால்.துயர் அடைவதோ பாவப்பட்ட பொது மக்கள். என்ன கொடுமை இது.? இப் பகுதியில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் மக்கள், பழைய விளக்கு மாரில் “ இது நக்ராட்சிக்கு பரிசு” என பேப்பரில் எழுது ஒட்டி தொங்க விடுங்கள். நகராட்சி நிர்வாகம் ரோஷப்படுகிறதா என்பதை பார்ப்போம். பிரச்சனைக்கு தீர்வு காண்ப்படுகிறதா என பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  5. கீழக்கரை அலி பாட்சாNovember 23, 2013 at 10:41 PM

    மறு பதிப்பு கீழக்கரை டைம்ஸிலிருந்து

    கீழக்கரை அலி பாட்சாOctober 9, 2013 at 10:41 PM

    வார்டு மக்கள் பிரதிநிதி சகோதரர் முகைதீன் இபுறாகிம் அவர்களுக்கு இந்த பிரச்சனையில் நல்லதோர் தீர்வு காண எந்த அளவுக்கு தார்மீக பொருப்பு உள்ளதோ நகராட்சி ஆணையர் மற்றும் நகரின் முதல் குடி மகளுக்கும் அதில் இம்மியளவுக்கும் குறையாமல் தார்மீக பொருப்பு உண்டு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. காரணம் இது பொது மக்களின் தலையாய பிரச்சனை. ஆனால் இவர்களுக்குள் இருக்கும் ஈகோவினால்.துயர் அடைவதோ பாவப்பட்ட பொது மக்கள். என்ன கொடுமை இது.? இப் பகுதியில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் மக்கள், பழைய விளக்கு மாரில் “ இது நக்ராட்சிக்கு பரிசு” என பேப்பரில் எழுது ஒட்டி தொங்க விடுங்கள். நகராட்சி நிர்வாகம் ரோஷப்படுகிறதா என்பதை பார்ப்போம். பிரச்சனைக்கு தீர்வு காண்ப்படுகிறதா என பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.