Sunday, September 16, 2012

முக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை அவ‌ம‌தித்த‌தை க‌ண்டித்து கீழ‌க்க‌ரையில் ஆர்பாட்ட‌ம் !ஏராள‌மானோர் திர‌ண்ட‌ன‌ர்.


அமெரிக்காவில் பெருமான‌ர் முக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை இழிவுப‌டுத்தி ப‌ட‌ம் த‌யாரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தை க‌ண்டித்து உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போராட்ட‌ங்க‌ள், ஆர்பாட்ட‌ங்க‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.


அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளதையும் உல‌க‌ம் முழுவ‌தும் முஸ்லீம்க‌ள் ம‌த்தியில் கொந்த‌ளிப்பு ஏற்ப‌ட்டு க‌ண்டித்து க‌டும் போராட்ட‌ங்க‌ள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

இந்நிலையில் இன்று கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான இஸ்லாமிய‌ பெரும‌க்க‌ள் திர‌ண்டு வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் க‌ண்ட‌ன‌ முழ‌க்க‌ங்க‌ளை எழுப்பிய‌ப‌டி ஆர்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.மேலும் சாரை சாரையாக‌ ‌ இளைஞ‌ர்க‌ள் ஆர்பாட்ட‌ம் ந‌டைபெறும் இட‌த்தில் குவிந்த‌ன‌ர்.

ஆர்ப்பாட்ட‌த்தில் ஆட்சேப‌மிக்க‌ சினிமாவை எடுத்த‌‌ சாம் பாசைல் க‌ண்டித்தும்,ஆத‌ரிக்கும் அமெரிக்க‌ அரசை க‌ண்டித்தும் ஆவேஷ‌மாக‌ கோஷ‌ம் எழுப்ப‌ப‌ட்டு ஆர்பாட்ட‌ம் ந‌டைபெற்ற‌து. மேலும் இது வ‌ரை க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்காத‌ ம‌த்திய‌ அர‌சுக்கு க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.
அமெரிக்க அதிப‌ர் ஒபமாவின் ம‌ற்றும் சாம் பாசைல் உள்ளிட்ட‌வ‌ர்க‌ளில் கொடும்பாவி எரிக்கப்ப‌ட்டது.ஒபாமாவின் ப‌ட‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ப‌தாகைக‌ள் உடைக்க‌ப்ப‌ட்டு எரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.கூட்ட‌ம் கூட்ட‌மாக‌ ம‌க்க‌ள் ஆர்பாட்ட‌த்தில் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ஆர்பாட்ட‌த்தில் ராம‌நாத‌புர‌ம் தொகுதி எஸ்டிபிஐ துணை த‌லைவ‌ர் அப்பாஸ் ஆலிம்,இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லீம் லீக் ந‌க‌ர‌ நிர்வாகி லெப்பை த‌ம்பி, கேஈசிடி இமாம் அபு ஆலிம் எஸ்டிபிஐ மாநில‌ நிர்வாகிக‌ளில் ஒருவ‌ரான‌ அப்துல் ஹ‌மீது க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் நிர்வாகிக‌ள் க‌ண்ம‌ணி சீனி ,க‌மால்நாச‌ர் உள்ளிட்டோர் க‌டும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்து பேசின‌ர்

4 comments:

 1. athiga makkal koodiya, kodumbavi amerikka kodi erippu sambavangal pala thalaivargalin kandana kuralgal ivai anaithaiyum innum thelivaagavum vilakkamaagavum pathivu seyyalame?....

  ReplyDelete
 2. பேதைமை பாராது ஒவ்வொரு இயக்கங்களும் தங்கள் வெறுப்பை , அமெரிக்காவுக்கு எதிரான அருவெறுப்பை காட்ட நம் கீழக்கரையில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்த வேண்டும். கூடுமானவரை நாம் ஒட்டு மொத்தமாக அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். பொருளாராத ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 3. பேதைமை பாராது ஒவ்வொரு இயக்கங்களும் தங்கள் வெறுப்பை , அமெரிக்காவுக்கு எதிரான அருவெறுப்பை காட்ட நம் கீழக்கரையில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்த வேண்டும். கூடுமானவரை நாம் ஒட்டு மொத்தமாக அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். பொருளாராத ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 4. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 17, 2012 at 11:37 AM

  வார்த்தைகளை தேடினால் கண்ணீர் தான் வருகிறது.ஆதிக்க வெறி பிடித்த அமெரிக்க இஸ்ரேலிய சொறி நாய் களின் தீய செயலால் இன்று சர்வ தேச அளவில் முஸ்லீம் சமுதாயமே கொதிப்படைந்துள்ளது.

  யா அல்லாஹ் உனது ஹபீப் எங்களின் இறுதி ரசூல் கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்ல லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை, திட்டமிட்டு அவ மரியாதை செய்து விட்டததாக இருமாந்திருக்கும் அந்த கூட்டு சதியாளர்களை மஹ்ஷர் வரை காத்திருக்காமல், எஙகளின் உணர்வுகளோடு நீயும் பங்கு கொண்டு அந்த கேடு கெட்ட மூதேவிகளை எங்கள் கண்கள் குளிர, எங்கள் கண்ணீர்கள் பன்னீர் சொட்டுகளாக மாற அவர்களை சின்னம் பின்னம் படுத்தி விடு, ஊர் அறிய உலகம் அறிய இந்த பூமியிலேயே.. அதுவும் இந்த விநாடியாகவே இருக்கட்டும்.. அது மற்றவர்களுக்கும், சாத்தான்களின் தலைவன் பராக் ஹுசைன் ஒபாமா,வக்காலத்து பேசும் நாதாரி ஹிலாரி கிளிண்டன் போன்றவர்களுக்கும் எச்சரிக்கையாக அமையட்டும்..

  நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது அனைத்தையும் பிடரி நரம்புக்கு அருகில் இருந்து கண்காணிக்கும் எங்கள் ஏகனே, அந்த சிறு மதியாளர்களின் சதியை முறி அடித்திருக்க கூடாதா? உன்னுடைய மௌனமும் ஒரு வகையில் நன்மையாகத் தான் முடிந்து விட்டது.. இல்லாவிட்டால் கீழக்கரையில் ஊர் மக்கள் அனைவ்ரும் வியக்கும் வண்ணம் இனப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இவ்வளவு மக்கள் உணர்ச்சி பூர்வமாக, ஐக்கியமாக ஆர்பாட்டத்தில் கலந்து தங்களின் அகஉணர்வுகளை வெளிப் படுத்தி இருப்பர்களா? புகழ் அனைத்து நாயன் ஒருவனுக்கே..

  மேலும், இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்..இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்.. ஆமீன், ஆமீன் யாரப்பில் ஆல்மீன். அல்லாஹு அக்பர்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.