Sunday, September 23, 2012

கீழக்க‌ரை ந‌க‌ராட்சி உர‌க்கிட‌ங்கில் ம‌ர‌க்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சி!க‌லெக்ட‌ர் தொட‌ங்கி வைத்தார்!



குப்பைக‌ளை கொட்டி உர‌மாக்குவத‌ற்காக‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு சொந்த‌மான
‌ தில்லையேந்த‌ல் ப‌குதி உர‌க்கிட‌ங்கில் க‌ட்டிட‌ ப‌ணிகள் நிறைவ‌டைந்து த‌யார் நிலையில் உள்ள‌து.இங்கு ம‌ரக்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சி க‌லெக்ட‌ர் த‌லைமையில் ந‌டைபெற்ற‌து.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு 2010&11ல் சொந்தமான குப்பை கிடங்கு இன்றி தினமும் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அப்போதைய நகராட்சி தலைவர் பசீர்அகமது (திமுக), அப்போதைய அமைச்சர் சுப. தங்கவேலன் ஆகியோர் குப்பை கொட்டுவ‌த‌ற்கு நில‌ம் வேண்டுமென‌ ஈடிஏ ஸ்டார் நிறுவ‌ன‌த்தின் மேலாண்மை இய‌க்குந‌ரும் கீழ‌க்க‌ரை வெல்பர் அசோசியேஷன் டிர‌ஸ்டியுமான‌ ச‌லாஹீதீனிட‌ம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து  தில்லையேந்தல் ஊராட்சி தோணி பாலம் அருகே 12 ஏக்கர் நிலம் கீழ‌க்க‌ரை நகராட்சிக்கு இலவ‌ச‌மாக‌ வழங்க‌ப்ப‌ட்ட‌து.

இத‌ன் பின் க‌ட்டிட‌ ப‌ணிக்காக‌  சார்பில் த‌னியார் ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில் கலெக்டர் நிதியிலிருந்து ரூ.14 லட்சம் நிதி என ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அந்த இடத்தில் சுற்று சுவர் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் குப்பை கிட‌ங்கு அமைவ‌தை எதிர்த்து கோர்டில் வ‌ழ‌க்கு ,தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்தின‌ர் எதிர்ப்பு போன்ற‌ ப‌ல்வேறு பிர‌ச்ச‌னைக‌ளால் ப‌ணிக‌ள் தாம‌தமான‌து தொட‌ர்ந்து ஆட்சி மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ராக‌ அதிமுக‌ சார்பில் ராவிய‌த்துல் காத‌ரியா தேர்வு செய்ய‌ப்ப‌ட்டார்.

க‌ட்டிட‌ ப‌ணியை தொட‌ர‌ தொர்ந்து த‌டைக‌ள் ஏற்ப‌ட்ட‌து ப‌ல்வேறு த‌டைக‌ளும் சீர் செய்ய‌ப்ப‌ட்டு நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா,ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ,  மற்றும் நகராட்சித் துணை தலைவர் ஹாஜா முகைதீன், நகராட்சி க‌வுன்சில‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரின் முய‌ற்சி ம‌ற்றும் ஆத‌ர‌வால் த‌ற்போது குப்பைக‌ள் கொட்டுவ‌த‌ற்கான‌ உர‌க்கிட‌ங்கு ப‌ணி  2011&12க்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் சுற்றுச்சுவர் கட்ட மேலும் ரூ.20 லட்சம், தளம் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு த‌ற்போது ப‌ணிக‌ள் முழுமையாக‌ நிறைவடைந்துள்ளன.


சுற்றுசூழ‌லை பாதுகாக்கும் வ‌கையில் உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நட வனத்துறை சார்பில் 270 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உர‌க்கிட‌ங்கு வளாகத்தில் கலெக்டர் நந்தகுமார் முத‌ல் மரக்கன்று நட்டு ம‌ர‌க்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சியை  தொட‌ங்கி வைத்தார்.

நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா, துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், ஆணையர் கமிஷனர் முகமது முகைதீன், மேற்பார்வையாளர் அறிவழகன், நகர் அதிமுக செயலர் ராஜேந்திரன், நிர்வாகிகள் நாராயணன், பாரதி, ஜகுபர்ஹூசைன், பாபு, சரவணா பாலாஜி, ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அன்வ‌ர் அலி,ஜெயபிரகாஷ், சாகுல், மஜிதாபீவி, பாவா செய்யது கருணை, ரபியுதீன், சித்திக்அலி, ஹாஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.