Saturday, September 15, 2012
கீழக்கரை பத்திரபதிவு அலுவலகத்தை வெளியூருக்கு மாற்ற திட்டம் !
கீழக்கரை பத்திரபதிவு அலுவலகம்( பைல்(பழைய) படம்)
பத்திர பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு கீழக்கரையில் இடம் கிடைக்காததால் ஏர்வாடி அல்லது திருப்புல்லாணிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.கீழக்கரையில் உள்ள பத்திர பதிவாளர் அலுவலகம் 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த அலுவலகம் தொடர்ந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கீழக்கரையில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு ரூ.35 லட்சம் நிதி வழங்கியும், இடம் கிடைக்கவில்லை என்று கூறி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இட நெருக்கடியால் நாள்தோறும் அலுவலர்களும்,பொது மக்களும் சிரமம் அடைகின்றனர். இங்கு இடம் கிடைக்காத பட்சத்தில், ஏர்வாடி அல்லது திருப்புல்லாணியில் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என பத்திரபதிவு அலுவலக வாசலில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சார் பதிவாளர் புல்லாணி கூறியதாவது:
ஏர்வாடியில் தனியார் ஒருவர் 20 சென்ட் நிலம் இலவசமாக அரசுக்கு வழங்க முன் வந்துள்ளார்.
திருப்புல்லாணியிலும் இடம் வழங்க ஊராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே கீழக்கரையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் மாவட்ட பதிவாளர் ஆலோசனையின் படி விரைவில் மாற்றம் செய்யப்படும், என்றார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த இப்ராகிம் என்பவர் கூறியதாவது,
கீழக்கரையில் இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பத்திர அலுவலகத்தை மாற்ற கூடாது.வெளியூருக்கு மாற்றினால் கீழக்கரை மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.கீழக்கரையில் காலியாக உள்ள அரசு இடங்களை கண்டறிந்து அங்கு பத்திர அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.அது வரை வாடகை கட்டிடத்தில் செயல்படுத்தலாம்.
கீழக்கரையில் அரசு சார்பில் 3 மதுக்கடைகள் அமைப்பதற்கு இடம் பெற்று ஏற்பாடு செய்த அரசு நிர்வாகத்திற்கு பத்திர அலுவலகம் அமைக்க இடம் கிடைக்கவில்லையா?வெளியூருக்கு மாற்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கீழக்கரை அனைத்து கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் அனைத்தும் இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.கீழக்கரையில் இதற்கான கட்டிடம் கட்ட இடம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம்,வருவாய்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகம் செய்ய வேண்டும்.
என்றார்.
கீழக்கரையில் பல்லாண்டுகளாக செயல்பட்டு வந்த மின் கட்டண வசூல் மையத்தை கட்டிட உரிமையாளர் காலி செய்ய சொன்னதாக அறிவிக்கப்பட்டு கீழக்கரையிலேயே வேறு ஒரு இடத்தில் செயல்பட வாடகைக்கு கட்டிடம் கிடைக்கவில்லை என்று கூறி ஊருக்கு வெளியே வண்ணாந்துறை அருகே மாற்றம் செய்யபட்டது .இதனால் இன்றுவரை பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது
Subscribe to:
Post Comments (Atom)
பத்திர ஆபீஸ்க்கு தேவை உள்ளவர்கள் மட்டும் தான் போவார்கள், எப்பவாவது ஒரு முறை தான் ஒருவர் போக நேரிடும்,
ReplyDeleteஆனால் பொதுமக்கள் அடிக்கடி,மாதம் மாதம் போகக் கூடிய மின் கட்டண ஆபீசை ஊருக்குள் மாற்ற யாரும் முயற்சி செய்ய வில்லை
தங்கள் ஆதங்கத்தை பூரணமாக உணர முடிகிறது..யாரும் முயற்சிக்க வில்லை என்பது ஒத்துக் கொள்ள முடியாத வாதம்.. தொடர் முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறது..நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களை நம்மால் தண்டிக்க முடியாது அல்லவா..
Deleteமக்களிடமும் எழுச்சி வேண்டும். அதற்கு இன்று நகராட்சியில் நட்ந்த சம்பவம் ஒரு அருமையான எடுத்துக் காட்டாகும்..பெண்ணாட்டர் தெரு பொது மககளின் ஒற்றுமையான போராட்டத்தால் வெற்றி அடைந்துள்ளார்கள்..இது போன்ற எழுச்சி தொடருமானால் தனி தாலுகா அலுவலகம், ஆரம்ப கால குடிநீர் இரும்பு குழாய்களை மாற்றுதல், போக்குவரத்து காவலர்கள் நியமனம், பழைய மின் கம்பி மற்றும் போஸ்ட் களை மாற்றுதல், முதன்மை அஞ்சலகத்தில் ஜெனரேட்டர் இருந்தும் பயன்படுத்தாது மின் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்த வரும் மக்களிடம் மின் இணைப்பு இல்லை என காரணம் கூறி அலை கழிப்பது போன்ற ம்க்கள் நல திட்டங்கள் சீரடைய வழி வகுக்கும் என்பது திண்ணம்..
இது சம்பந்தமாக முன்பே எமது கருத்தினை பதிவு செய்திருந்தோம்..
ReplyDeleteவள்ளல் சீதக்காதி சாலயில் குனாதானா ஜவுளிக் கடைக்கு நேர் எதிரில் வருவாய் துறைக்கு பாத்தியபட்ட,அலுவலகம் கட்டுவத்ற்கு ஏற்ற இடம் உள்ளது.பத்திர பதிவு துறையும் வருவாய்த் துறையின் கீழ் தான் வருகிறது.. இப்படி இருக்கையில் ஏன் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் என்ன?
அப்படி போகக்கூடிய சூழ்நிலை உருவாகுமானால், நாம் அனவரும் குறிப்பாக மாணவச் செல்வங்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் கீழக்கரை தனி தாலுகா திட்டம் , நிச்சயமாக கன்வு திட்டமாகி விடும்..
நமது நகரில் சீதன வீடு பரிவர்த்தனை காரணமாக மக்கள் அன்றாடம் அணுகும் இடமாக உள்ளது பத்திர பதிவு அலுவலகம். ஊரை விட்டு அது இடம் பெயருமானால், அதனால் ஏற்படும் இன்னல் களை (குறிப்பாக பெண்களுக்கு)நினைத்து மனதில் அச்சம் கொண்டு அனைத்து பொது நல அமைபுகளும், கடசி பாகுபாடு இன்றி அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து உடனடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீர்வு காண வேண்டும்..இதில் கால தாமதம செய்வோமானால் தலையை விட்டு வாலை பிடித்த கதையாகி விடும்..
மக்கள் நலம் பேண அமைக்கப்பட்ட அமைப்பான நகராட்சி நிர்வாகமும் இதில் முனைப்பு காட்டி, இதற்கு ஒரு தீர்மானம் இயற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. நமது தொகுதி சட்ட மன்ற மக்கள் பிரதிநிதியும் இது விஷயத்தில் முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும்.