Thursday, September 27, 2012

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும் அரிய‌ வ‌கை க‌ட‌ல்வாழ் உயிர‌ன‌ங்க‌ள்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில‌ ஆண்டுகளாக‌ திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் ஏராளமான கடல்பசு, போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய கடல் பகுதியில் மிகுந்த‌ கடல் வளங்கள் நிறைந்து படர்ந்துள்ள அற்புதங்கள், மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் உற்பத்தியில் 35 சதவீதம் மீன் உற்பத்தி, மன்னார் வளைகுடா கடலில் இருந்தே கிடைக்கிறது . கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியும் ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌தாகும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் 21 தீவுகளும் ஏராள‌மான‌ பவளப்பாறைகளும் உல‌கின் அரிவ‌கை உயிர‌ன‌ங்க‌ளும் இங்கு உள்ள‌து. கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப்பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் ஏராளமான உயிரினங்கள் அதிக‌ள‌வில் உள்ள‌து. இதில், அரிய வகை உயிரினங்களான பவள உயிரினங்கள், கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.பாலூட்டி இன‌ங்க‌ளான‌ திமிங்க‌ல‌ங்க‌ல்,டால்பின்க‌ள் அதிக‌ள‌வில் உள்ள‌து அழிந்து வரும் இவ்வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இநிலையில் க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ கீழ‌க்க‌ரை,ம‌ண்டப‌ம்,ஏர்வாடி உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளி க‌ட‌ல்ப‌சு,டால்பின்,திமிங்க‌ல‌ங்க‌ள்  இற‌ந்து க‌ரை ஒதுங்குகின்ற‌ன‌ர்.ச‌மீப‌த்தில் கீழ‌க்க‌ரை கட‌ற்க‌ரையில் அரிய‌ வ‌கை டால்பின் க‌ரை ஒதுங்கிய‌து.

இதுகுறித்து கடல் ஆர்வலர் சுல்தான் என்ப‌வ‌ர்  கூறுகையில்,
அரியவகை மீன்கள் இற‌ந்து க‌ரை ஒதுங்குவ‌த‌ற்கான‌  காரணத்தை கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டால்பின்,க‌ட‌ல் ப‌சு போன்ற‌வை  இப்ப‌குதியில் அதிக‌ள‌வில் இருப்ப‌தால் இது போன்ற‌ உயிர‌னங்க‌ளின் முக்கிய‌த்துவ‌ம் குறித்து விழிப்புண‌ர்வு பிர‌ச்சார‌ங்க‌ளை  அர‌சாங்க‌ம் இப்ப‌குதியில் மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்

கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,
ஆழம் குறைந்த பகுதியில் சிக்கி பாறைகளில் மோதும் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்க வாய்ப்புள்ளது.
இதுதவிர அரிய கடல் வாழ் உயிரினங்கள் வெளிநாடுகளில் உணவுக்காகவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப் படுவதால் சமீப காலமாக இவைகள் சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் கடத்தப்படுகின்றன. இத‌னால் கால‌போக்கில் ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியில் அரிய‌ வ‌கை உயிர‌ன‌ங்க‌ளை காண்ப‌து அரிதாகும் என்றனர்.

6 comments:

  1. கடல் உயிர்களை பாதுகாக்க முயற்சி உடனடியாக எடுக்க பட வேண்டும் உங்கள் கீழக்கரை டைம்ஸ் நன்றாக இயங்க வாழ்த்துக்கள்...

    அன்புடன் :- Jaheen

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 27, 2012 at 1:52 PM

    கை புண்ணுக்கு ஆராய்ச்சி எதற்கு?

    கீழக்கரைக்யில் அருகே அமைந்துள்ள அப்பா தீவு, வாளைத் தீவு, நல்ல த்ண்ணீர் தீவுகளுக்கு வடக்கே சுமார் பத்து கடல் மைல்கள் (சுமார் பதினெட்டு கி.மீ) தொலைவில் சரவ் தேச கடல் உள்ளது.

    அங்கு, அரபி கடலின் கரையில் அமைந்துள்ள மும்பாய், மங்களூர், கொச்சி முதலான துறை முகங்களிலிருந்தும், இந்து மகா சமுத்திரத்தின் கரையில் அமைந்துள்ள தூத்துக் குடி துறை முகத்திலிருந்தும்,சூயஸ் கல்வாய் மற்றும் அரேபிய, அமீரக துறைமுகங்களிலிருந்தும் ஸ்ரீலங்கா வழியாக சென்னை மற்றும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா முதலான துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து சர்வ தேச கப்பல்களும், இது போல எதிர் மார்கத்திலும் கடந்து செல்கிறன.. அது சமையம் மன்னார் கடலுக்குள் நுழைய வரும் இது போனற அரிய வகை கப்பலின் துடுப்பில் (புரப்பல்ர்) அடிபட்டு இறக்க அநேக வாய்ப்புகள் உண்டு.மேலும் அதே பகுதியில் ஆயிரக்கணக்கான இந்தியா மற்றும் சர்வ தேச மீன்பிடி விசை படகுகளும் தொழில் செய்து வருவதால் அதன் துடுப்புகளிலும் அடிபட்டு இறக்க கூடுதல் வாய்ப்புண்டு..

    மேலும் மூப்பு காரணமாகவும் இறக்க வாய்ப்புண்டு..

    பூமியின் மேல் பரப்பு எப்படி மேடு பள்ளம், மலை மடுவு உள்ளதோ அது போல கடலின் அடியிலும் உண்டு..எதிரி களால் தாக்குதலுக்கு ஆட்படும் போது தப்பிக்கவும், காமக்களி ஆட்டங்களில் ஈடுபடும் போது உற்சாகத்தின் காரணமாக எதிர் பாடாத முறையில் மலைகளில் மோதி காயம் பட்டு இறக்கவும் வாய்ய்புண்டு..இறைவனின் படைப்பு காரணமாக அலைகள் அனைத்தும் கரையை நோக்கிதான் வரும்.அது சமயம் இது போன்ற அடிபட்ட கடல்வாழ் உயிரினங்கள்அலைகளை எதிர்த்து போராட திராணி இன்றி கரைக்கு வந்து மடிகின்றன..ஆகவே இது இய்ற்கயினால் ஏறப்டும் அழிவுகள்..

    பசிபிக்கடல், இந்து மகா,அரேபிய கடல்களில் கப்பலில் குவார்ட்டர் மாஸ்டராக (அதாவ்து கேப்ட்னுக்கு கப்பலை செலுத்துவதில் உதவியாளர்)பணி புரிந்த அனுபவதில இதை பதிவு செய்கிறேன்.. அரபிக் கடலில் பவுர்ணமி நாடகளில் பயனிக்கும் போது கப்பலை ஒட்டி டால்பின்கள் குழந்தை போல் சபதமிட்டு, துள்ளி குதித்து விளயாடுவதை காண கண் கோடி வேண்டும்..இது போன்ற சமயங்களிலும் கப்பல் துடுப்பில் அடிபட்டு இறப்பதும் உண்டு..அதை பார்த்த சில அனுபவங்களும் எமக்கு உண்டு..

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 27, 2012 at 1:58 PM

    கை புண்ணுக்கு ஆராய்ச்சி எதற்கு?

    கீழக்கரையின் கடற்கரை அருகே அமைந்துள்ள அப்பா தீவு, வாளைத் தீவு, நல்ல தண்ணீர் தீவுகளுக்கு வடக்கே சுமார் பத்து கடல் மைல்கள் (சுமார் பதினெட்டு கி.மீ) தொலைவில் சர்வ தேச கடல் பாதை உள்ளது.

    அங்கு, அரபி கடலின் கரையில் அமைந்துள்ள மும்பாய், மங்களூர், கொச்சி முதலான துறை முகங்களிலிருந்தும், இந்து மகா சமுத்திரத்தின் கரையில் அமைந்துள்ள தூத்துக் குடி துறை முகத்திலிருந்தும்,சூயஸ் கல்வாய் மற்றும் அரேபிய, அமீரக துறைமுகங்களிலிருந்தும் ஸ்ரீலங்கா வழியாக சென்னை மற்றும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா முதலான துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து சர்வ தேச கப்பல்களும், இது போல எதிர் மார்கத்திலும் கடந்து செல்கிறன.. அது சமையம் மன்னார் கடலுக்குள் நுழைய வரும் இது போனற அரிய வகை கப்பலின் துடுப்பில் (புரப்பல்ர்) அடிபட்டு இறக்க அநேக வாய்ப்புகள் உண்டு.மேலும் அதே பகுதியில் ஆயிரக்கணக்கான இந்தியா மற்றும் சர்வ தேச மீன்பிடி விசை படகுகளும் தொழில் செய்து வருவதால் அதன் துடுப்புகளிலும் அடிபட்டு இறக்க கூடுதல் வாய்ப்புண்டு..

    மேலும் மூப்பு காரணமாகவும் இறக்க வாய்ப்புண்டு..

    பூமியின் மேல் பரப்பு எப்படி மேடு பள்ளம், மலை மடுவு உள்ளதோ அது போல கடலின் அடியிலும் உண்டு..எதிரி களால் தாக்குதலுக்கு ஆட்படும் போது தப்பிக்கவும், காமக்களி ஆட்டங்களில் ஈடுபடும் போது உற்சாகத்தின் காரணமாக எதிர் பாராத முறையில் மலைகளில் மோதி காயம் பட்டு இறக்கவும் வாய்ய்புண்டு..இறைவனின் படைப்பு காரணமாக அலைகள் அனைத்தும் கரையை நோக்கிதான் வரும்.அது சமயம் இது போன்ற அடிபட்ட கடல்வாழ் உயிரினங்கள்அலைகளை எதிர்த்து போராட திராணி இன்றி கரைக்கு வந்து மடிகின்றன..ஆகவே இது இய்ற்கயினால் ஏறப்டும் அழிவுகள்..

    பசிபிக்கடல், இந்து மகா,அரேபிய கடல்களில் கப்பலில் குவார்ட்டர் மாஸ்டராக (அதாவ்து கேப்ட்னுக்கு கப்பலை செலுத்துவதில் உதவியாளர்)பணி புரிந்த அனுபவதில இதை பதிவு செய்கிறேன்.. அரபிக் கடலில் பவுர்ணமி நாடகளில் பயனிக்கும் போது கப்பலை ஒட்டி டால்பின்கள் குழந்தை போல் சபதமிட்டு, துள்ளி குதித்து விளயாடுவதை காண கண் கோடி வேண்டும்..இது போன்ற சமயங்களிலும் கப்பல் துடுப்பில் அடிபட்டு இறப்பதும் உண்டு..அதை பார்த்த சில அனுபவங்களும் எமக்கு உண்டு..

    ReplyDelete
  4. நல்ல பயன்னுள்ள தகவல்...

    ReplyDelete
  5. அரிய உயிரனத்தின் அழிவு பற்றி
    அழகிய வடிவில் ஒரு
    வரி கூட
    மங்காது தந்த
    மங்காத்தாவின் தங்கச்சி மகன்
    பிடியுங்கள் பூச்செண்டு

    ReplyDelete
  6. அரிய உயிரனத்தின் அழிவு பற்றி
    அழகிய வடிவில் ஒரு
    வரி கூட
    மங்காது தந்த
    மங்காத்தாவின் தங்கச்சி மகன்
    பிடியுங்கள் பூச்செண்டு

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.