
இஸ்லாமியா பள்ளியின் தொடர் வெற்றி!கைப்பந்து இறுதி போட்டியில் கோப்பையை வென்றது!
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடந்த போட்டியில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மீண்டும் செப்.16ல் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடந்த "ஓபன்' கைப்பந்து இறுதியாட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், ஜெயா ஆகியோரையும் பாராட்டினர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.