கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் மற்றும் நிரந்தரமான தலைமை ஆசிரியர் இல்லாததை கண்டித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 124பேர் கடந்த செப் 6ம் தேதி திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட கல்வி அலுவலர் நேரில் வந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த பின் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலாண்டு பரிட்சை தொடங்கியது.ஆசிரியர் நியமனம் கோரி பரிட்சையை புறக்கணித்த பெரியபட்டினம் மாணவர்கள் பஸ் நிறுத்ததில் அரசு பஸ்ஸை சிறைபிடித்து மீண்டும் போராட்டதை தொடங்கினர்.இதனையறிந்த கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் திருப்புல்லாணி எஸ்.ஐ உள்ளிட்டோர் பெரியபட்டிணம் வந்து மாணவர்களை சமாதனப்படுத்தி பஸ்சை விடுவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது ,
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கம்ப்யூட்டர்,பிசிக்ஸ் தவிர எந்த பாடமும் எங்களுக்கு தெரியாது எனவே எப்படி பரிட்சை எழுத போகிறோம் என்று தெரியவில்லை என்றனர். மேலும் மாவட்ட கல்வி அலுவலரிடம் எங்கள் குறைகளை கூறி தீர்வு ஏற்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதனை தொடர்ந்து தொடர்பு கொண்டதின் பேரில் மீண்டும் மாவட்ட கல்வி அலுவலர் லத்திகா பெரியபட்டினம் வருகை தந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குறைகளை கேட்டு தனி தனியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறி மாணவர்களை பரிட்சை எழுத வருமாறு கேட்டு கொண்டார்.
மாவட்ட கல்வி அலுவலர் நிருபர்களிடம் கூறியதாவது, சுமார் ஒரு மாதத்திற்குள் ஆசிரியர்கள் பற்றாக்குறைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.மேலும் காலாண்டு தேர்வு நிறைவுற்றதும் வேறு பள்ளிகளிலிருந்து தற்காலிகமாக ஆசிரியர் வரவழைத்து பாடங்கள் நடத்தப்படும் என்றார்.
பேருந்து சிறைபிடிப்பு போராட்டத்தில் எஸ்டிபிஐ தொகுதி தலைவர் பைரோஸ்கான் தலைமையில் நகர் செயலாளர் சேகு இப்ராகிம் துணை தலைவர்கள் நவாஸ் மிர்ஷா,அஸ்கர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.