Saturday, September 15, 2012

கீழ‌க்க‌ரையில் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌கம் திடீர் முற்றுகையிடப்ப‌ட்ட‌தால் ப‌ர‌ப‌ர‌ப்பு!



கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை வழங்கும் பட்டியலில் ப‌ன்னாட்டார் தெரு மீனவ குடியிருப்புக்கள் உள்ள ஒரு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சென்றுள்ளனர்.

பட்டியலில் தங்களின் பெயர்கள் இல்லாததை அறிந்து ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 15, 2012 at 1:39 PM

    இது சம்பந்தமாக முன்பே எமது கருத்தினை பதிவு செய்திருந்தோம்..

    வள்ளல் சீதக்காதி சாலயில் குனாதானா ஜவுளிக் கடைக்கு நேர் எதிரில் வருவாய் துறைக்கு பாத்தியபட்ட,அலுவலகம் கட்டுவத்ற்கு ஏற்ற இடம் உள்ளது.பத்திர பதிவு துறையும் வருவாய்த் துறையின் கீழ் தான் வருகிறது.. இப்படி இருக்கையில் ஏன் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

    அப்படி போகக்கூடிய சூழ்நிலை உருவாகுமானால், நாம் அனவரும் குறிப்பாக மாணவச் செல்வங்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் கீழக்கரை தனி தாலுகா திட்டம் , நிச்சயமாக கன்வு திட்டமாகி விடும்..

    நமது நகரில் சீதன வீடு பரிவர்த்தனை காரணமாக மக்கள் அன்றாடம் அணுகும் இடமாக உள்ளது பத்திர பதிவு அலுவலகம். ஊரை விட்டு அது இடம் பெயருமானால், அதனால் ஏற்படும் இன்னல் களை (குறிப்பாக பெண்களுக்கு)நினைத்து மனதில் அச்சம் கொண்டு அனைத்து பொது நல அமைபுகளும், கடசி பாகுபாடு இன்றி அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து உடனடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீர்வு காண வேண்டும்..இதில் கால தாமதம செய்வோமானால் தலையை விட்டு வாலை பிடித்த கதையாகி விடும்..

    மக்கள் நலம் பேண அமைக்கப்பட்ட அமைப்பான நகராட்சி நிர்வாகமும் இதில் முனைப்பு காட்டி, இதற்கு ஒரு தீர்மானம் இயற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. நமது தொகுதி சட்ட மன்ற மக்கள் பிரதிநிதியும் இது விஷயத்தில் முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.