கீழக்கரையில் தொடரும் மின் வெட்டை கண்டித்து இன்று இரவு மாணவர்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள பாலிஹ் மெடிக்கல் அருகே குழுமினர்.இவர்களில் பலர் கையில் மெழுவர்த்தி ஏந்தியபடி நின்றிருந்தனர்.இதனால் அப்பகுதியில் கூட்டம் சேர ஆரம்பித்தது.
தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேசி கலைந்து போகும்படி கேட்டுகொண்டனர்.இதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜாஹிர் ஹுசைன் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் மின்வெட்டு உள்ளது ஆனால் மற்ற இடங்களை காட்டிலும் அதிக நேரம் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது மேலும் கீழக்கரையில் எப்போது மின்சாரம் வரும் எப்போது மின் தடை வரும் என்ற எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.இதனால் பெரும் சிரமமாக உள்ளது.மின்சாரம்தான் சரியாக தருவதில்லை முறையான அறிவிப்பையாவது மின் இலாகா செய்ய வேண்டும்.எனவேதான் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் எங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் என்றார்.
நமது சொந்த ஊரின் குறைகளை களைய சமீப காலமாக நமது கீழக்கரை மக்கள் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளார்கள்.இது ஒரு நல்ல தொடக்கம் இது தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ் விரைவில் நமதூருக்கு தேவையான நற்காரியங்களை அரசாங்கம் செய்ய துவங்கும்.சுயநலமில்லா போராட்டம் என்றென்றும் வெற்றியை தரும்.
ReplyDeleteநமது சொந்த ஊரின் குறைகளை களைய சமீப காலமாக நமது கீழக்கரை மக்கள் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளார்கள்.இது ஒரு நல்ல தொடக்கம் இது தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ் விரைவில் நமதூருக்கு தேவையான நற்காரியங்களை அரசாங்கம் செய்ய துவங்கும்.சுயநலமில்லா போராட்டம் என்றென்றும் வெற்றியை தரும்.
ReplyDeleteJahir hussain
AK Textiles
Banglore
நல்ல உதயம்
ReplyDeleteஉறங்கி கிடந்த ஊர் இப்பொழுதுதான் சிறிது
உறக்கம் கலைந்து இருள் களைய
மெழுகுவர்த்தி போராட்டம் நடத்துகிறது.
இனி ஒவ்வொரு குறையும் தீர்க்க இது போல்
குழுமும் என்ற நம்பிக்கை சுடர் விடுகிறது
நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteby www.99likes.blogspot.com