Thursday, September 20, 2012

ஊர் ந‌லன் குறித்து ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து!3மாத‌த்திற்க்கு ஒரு முறை ந‌ட‌த்த‌ முடிவு!



ஊரின் நலன் கருதி கீழக்கரை குத்பா கமிட்டி மற்றும் அனைத்து ஜமாத், சமூக நல அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்க‌ப்ப‌ட்டு ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரி யா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், குத்பா கமிட்டி தலைவரும் முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநரு மான ஹமீது அப்துல்காதர், முகம்மது சதக் கல்லூரிகளின் தாளாளர் யூசுப்சாகிபு, நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்ட‌த்தில் கீழ‌க்க‌ரை ந‌ல‌னுக்காக‌ எடுக்க‌ப்ப‌டும் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் குறித்து ,நக‌ராட்சியின் செய‌ல்பாடு குறித்தும்
ஆலோச‌னை செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இதில் பேசிய‌ குத்பா க‌மிட்டி தலைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் பேசிய‌தாவ‌து,
கீழ‌க்க‌ரையில் தாலுகா அலுவ‌ல‌க‌ம் அமைக்க‌ அர‌சாங்கதிற்கு 5 ஏக்க‌ர் நில‌ம் எங்க‌ள் குடும்ப‌த்தின் சார்பில் வ‌ழ‌ங்கியுள்ளோம் அத்தோடு சேர்த்து ப‌த்திர‌ அலுவ‌ல‌க‌ம் அமைத்து கொள்ள‌ அர‌சு கூடுத‌லாக‌ 5 ஏக்க‌ர் தேவை என‌ கேட்டுள்ளார்க‌ள்.இன்னும் ப‌ல்வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ளை நாம் ஒற்றுமையாக‌ இருந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும் என்றார்.

கூட்டத்தில் தலைவர் ராவியத்துல் கதரியா பேசு கையில்,கீழக்கரை நகராட் சிக்கு நிரந்தர கமிஷனரை நியமித்துள்ள தமிழக முதல் வருக்கு நன்றி. கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டத் தை கொண்டு வரவேண்டும் என்று தமிழக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச் சர் மற்றும் நகராட்சி நிர் வாக ஆணையர் (சென் னை) ஆகியோருக்கு மனு செய்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கீழக்கரை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கலெக்டர் ஆகியோருக்கு எடுத்து கூறப்பட்டது. அவர்களது முயற்சியால் தற்போது நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உரக்கிடங்கு அமைத்திட சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. உரக்கிடங்கு அமைப்பதற்கு இலவசமாக சுமார் 12 ஏக்கர் இடம் (வெல்பர் அசோசியேசன்) தொண்டு நிறுவன நிறுவனர் சலாஹூதீன் அளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் குடி நீர் பைப்புகள் அமைக்கவும் புதிய 10 லட்சம் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டுவதற்கும் ஒதுக்கப்பட்டு குடிநீர் வடி கால் வாரியத்தால் கைவிட ப்பட்ட நிதியான ரூ.1 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்தை திரும்பப் பெற்று இந்நகராட்சி மூலம் விரைவில் அந்த பணி செய ல்படுத்தப்பட உள்ளது.

கீழக்கரை நகராட்சியில் துப்புரவு தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் நகராட்சியில் காலியாக உள்ள குடிநீர் திட்டப் பொருத்துநர், மின் பணி உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கும் தமி ழக முதல்வர், உள்ளாட்சி அமைச்சருக்கு மனு செய்துள்ளோம்.

அதுவரை, தற்போதைக்கு25 துப்புரவு தொழிலாளர்களை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள நியமனம் செய்து கொள்ள நகராட்சி நிர்வாக ஆணைய ரால் உத்தரவிடப்பட்டுள்ளது. கீழக்கரை நகராட்சி பகுதியில் வள்ளல் சீதக்காதி மணி மண்டபம் அமைக்க செய்தி மக்கள் தொடர்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்ட‌த்தில் ம‌க்க‌ள் சேவை அமைப்பின் நிறுவ‌ன‌ர் முஜீப் பேசிய‌தாவ‌து,
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு என்றைக்கும் இல்லாத‌ அள‌வுக்கு கோடிக்க‌ண‌க்கில் அர‌சு நிதி வ‌ருகிற‌து.அதை முறையாக‌ ம‌க்க‌ள் ப‌ணிக்கு செல‌வு செய்ய‌ வேண்டும்.கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர்க‌ளில் சில‌ர்  காண்ட்ராக்ட‌ர்க‌ளில் ல‌ஞ்ச‌ம் கேட்கிறார்க‌ள்.த‌ங்க‌ளுடைய‌ செல‌வுக்கு கூட‌ காசு கேட்கும் அவ‌ல‌ நிலை நில‌வுகிற‌து.அது போல் போல் பெண் க‌வுன்சில‌ர்க‌ளின் உற‌வின‌ர்க‌ள் க‌வுன்சில‌ர்க‌ள் போல் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர்.இது போல் செய‌ல்ப‌டுவ‌த‌ற்கு நீங்க‌ள் ஏன் க‌வுன்சில‌ர்க‌ளாக‌ வ‌ருகிறீர்க‌ள் என‌ ஆவேச‌மாக‌ பேசினார் அப்போது ஒரு சில‌ர் இதை எதிர்த்து ம‌றுத்து பேசின‌ர் இத‌னால் சிறிது நேர‌ம் ச‌ல‌சல‌ப்பு ஏற்ப‌ட்ட‌து.குத்பா க‌மிட்டி தலைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் குறிக்கிட்டு ச‌மாதான‌ம் செய்தார்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் முழுவ‌தும் இய‌ற்கை வ‌ள‌ம் குறைந்து விட்ட‌தாக‌  த‌க‌வ‌ல் உள்ள‌தால் ந‌க‌ர் முழுவ‌தும் ம‌ர‌ங்க‌ளை ந‌டுவ‌து,புதிதாக‌ வீடு க‌ட்ட‌ ந‌க‌ராட்சியில் பிளான் அனுமதி கோரும் போது வாசல் ப‌டிக‌ளை த‌ங்க‌ளுடைய இட‌ங்க‌ளில்லே அமைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தி அத‌ற்கேற்றார்போல் பிளானை அனும‌திக்க‌ வேண்டும் என்றும்,மூன்று மாத‌த்திற்கு ஒரு முறையாவ‌து இதுபோன்று அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் அழைத்து ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌ட‌த்துவ‌து உள்ளிட்ட‌ க‌ருத்துக்க‌ள் ஆலோச‌னை கூட்ட‌த்தின் வாயிலாக‌ கேட்டு கொள்ள‌ப்ப‌ட்டது.
.

இதில் ப‌ல்வேறு ஜமாத்க‌ள்,ச‌மூக‌ ந‌ல‌ அமைப்புக‌ள்,ச‌ங்க‌ங்க‌ள் பிர‌திநிதிக‌ள் உள்ளிட்ட‌ ஏராளமானோர் பங்கேற்றனர். முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனர் ஹமீது அப்துல்காதர் நன்றி கூறினார்.

இது குறித்து க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கூறிய‌தாவ‌து,
இந்த கூட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து குறித்த‌ த‌க‌வ‌ல் ப‌ல‌ருக்கு இல்லை.ஒரு சில‌ க‌வுன்சில‌ர்க‌ள் க‌ல‌ந்து கொள்ள‌வில்லை அடுத்த‌ முறை அனைத்து அமைப்பு பிர‌திநிதிக‌ளுக்கு அழைப்பு விடுக்க‌ வேண்டும்.கீழ‌க்க‌ரையின் நல‌னுக்காக‌ பெரிய‌வ‌ர் பி எஸ் ஏ காக்கா,  உள்ளிட்ட‌ இன்னும் ‌ ப‌ல‌ ந‌ல்ல‌ ம‌ன‌து ப‌டைத்தோர் த‌ங்க‌ளது சொத்துக்களை அர‌சாங்க‌த்திற்கு த‌ந்துள்ளார்க‌ள் அவ‌ர்க‌ளுக்கும் நாம் ந‌ன்றி சொல்ல‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம்.

 

3 comments:

  1. இது போன்ற ஆலோசனை கூட்டங்கள் நடப்பது மிகவும் நல்லது. கீழக்கரை சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.
    - அல் அய்னில் இருந்து கீழை. முஹம்மது இபுனு

    ReplyDelete
  2. all the best to all....

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 21, 2012 at 6:51 PM

    இன்று (21/09/12 வெள்ளி)தின மலர் (மதுரை பதிப்பு)பக்கம் எட்டு, டீ கடை பெஞ்சு தலைப்பில் நகராட்சி நிர்வாகத்தில் குறுக்கீடு சம்பந்தமாக ஒரு சங்கடத்திற்குரிய தகவல் பதிவாகி உள்ளது.இதற்கு நகரின் மூத்த குடிமகள் என்ன பதிலை பதிவு செய்யப் போகிறார்? வழக்கம் போலத் தானா? இல்லை..........

    இன்றைய காலக் கட்டத்தில் அலை பேசி என்பது காலத்தின் கட்டாயம்.அதை தவிர்பவர்கள் பொது வாழ்க்கை யில் ஈடுபடுவதில் அர்த்தமே இல்லை..இதில் ஆண், பெண் என பாகுபாடு என்பது அறவே கிடையாது..நகராட்சி தலைவியின் அலைபேசியில் (7708305330) தொடர்பு கொள்ளும் போதெல்லாம் யாரோ தொடர்பில் வருகிறார்கள். இது ஏன் என்று புரிவதில்லை.கண்டவர்களுடன் பேசுவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பதவியை தொடர்வதில் அர்த்தமே இல்லை. காரணம் அவர் பொது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அடி மட்ட பொது நல ஊழியர்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.