ராமநாதபுரம் பாரதி நகர் குமரய்யா கோயில் பஸ் ஸ்டாப் அருகே பள்ளிவாசல் உள்ளது. குழந்தைகளுக்கு காலை, மாலை நேரங்களில் மதரசாவும் இங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தொழுகை முடிந்த பின்னர் அனைவரும் சென்று விட்டனர்.
துணை இமாம் சபியுல்லா மட்டும் பள்ளிவாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு சபியுல்லா எழுந்து வந்து பார்த்தார். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே சபியுல்லா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த இமாம் சையது அக்பர் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் பள்ளிவாசல் முன் குவிந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப் பட்டது. சிவகங்கை ஏடிஎஸ்பி கண்ணன், ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் வந்து பள்ளிவாசலை பார்வையிட்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரத்தில் இன்று மாலை இந்து முன்னணி சார்பில் 28 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘விநாயகர் சிலை ஊர்வலம் முடியும் வரை எந்த பிரச்னையிலும் ஈடுபட வேண்டாம், நாளை மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.
பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க காவல்துறையினரை வற்புறுத்தி வருகின்றனர்.
இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்காக நகர் முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,வேண்டுமென்றே இருதரப்புக்கும் இடையில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் விஷமிகள் செயல்பட்டதாக தெரிகிறது பள்ளிவாசல் அருகே உள்ள டயர் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது 3 பைக்குகளில் மர்ம நபர்கள் வந்துள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களை கைது செய்வோம்’ என்றனர்
விஷமிகள், குழப்பவாதிகள் அமெரிக்க,பிரான்ஸ், டென்மார்க் நாடுகளில் மட்டும் இல்லை.. இங்கும் நம்மிடையே இரண்டர கலந்து உள்ளார்கள்..இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஈனப் பிறவிகள் மும்பே, நாசிக் - இருந்து வந்திருக்க முடியாது. ஆகவே நாமும் அதித விழிப்புடன் இருக்க வேண்டும்..
ReplyDeleteஇன்று நகரில் நடந்த அனைத்து ஜூம்மா பிரசஙகதிலும் இதுதான் தலையாய செய்தி (நகர் அவ்காஃப் ஆலோசனைக்கு இணங்க)..