கீழக்கரை அரசு மருத்துவமனை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.பிரசவம் தொடர்பான சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள்(ஸ்கேன்) உள்பட அனைத்தும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாது.தற்போது இதய துடிப்பை சீர் செய்வதற்காக நவின கருவி வரவழைக்கப்பட்டுள்ளது.இந்த கருவி மூலம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் உடனடியாக இதய துடிப்பை சீர்செய்ய முடியுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாயாகுளத்தில் வசித்து வரும் பழனி(42) என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார்.இவருக்கு மாராடைப்பு ஏற்பட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய துடிப்பு பாதிக்கப்பட்டது .மருத்துவர்கள் சாகுல் ஹமீது,ஹசீன்,ஜவாஹிர் ஹுசைன்,முத்தமிழரசி தலைமை மருத்துவர் ராஜ்மோகன் ஆகியோர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு புதியதாக வரவழைக்கப்பட்ட நவீன கருவி மூலமாக பாதிக்கப்பட்டவரின் இதயதுடிப்பை சீர் செய்து சிகிச்சை அளித்தனர்.இது போன்ற சிகிச்சை கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து அரசு தலைமை மருத்துவர் ராஜ்மோகன் கூறுகையில்,
கீழக்கரை அரசுமருத்துவமனை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.பொது மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.
கீழக்கரை சிரிக்க ஆரம்பித்து விட்டது.(வஞ்சி புகழ்ச்சி)..
ReplyDelete