Tuesday, September 11, 2012
செய்தி எதிரொலி !18வது வார்டு பகுதியில் குப்பைகள் அகற்றி நடவடிக்கை!
http://keelakaraitimes.blogspot.com/2012/09/18.htmlகீழக்கரை நகராட்சி 18வது வார்டு பகுதியில் சுகாதார கேடு நிலவுவதாகவும் அப்பகுதியின் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் பாராமுகமாக இருப்பதாக அப்பகுதியின் இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர்.இது குறித்து செய்திகள் வெளியானது.இதனையடுத்து அப்பகுதியில் சில இடங்களில் நீண்ட கால குப்பைகள் அகற்றப்பட்டன.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அப்தாகிர் கூறியதாவது,
கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் ஏற்பாடில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இப்பகுதியில் சில இடங்களில் நீண்ட காலமாக குவிந்து மிக மோசமாக அசுத்தமடைந்து கிடந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு சுகாதாரத்தை வலியுறுத்தி விளம்பர போர்டும் வைக்கப்பட்டுள்ளது.ஏற்பாடு செய்த சகோதரர் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிமுக்கும் நகராட்சி நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,
இப்பகுதியின் குறைகளை சுட்டிகாட்டிய ஹனீப் சுபியான்,அப்தாகிர் உள்ளிட்ட இளைஞர்களுக்கும் ஏற்பாடுகளுக்கு உதவிய தினமணி நிருபர் நிஸ்பார் அவர்களுக்கும்
நன்றி ! குப்பை அகற்றும் டிரை சைக்கிள் இறைச்சிக்கடை அருகே நிறுத்தப்பட்டு தினமும் குப்பைகள் அகற்றப்படும்.விரைவில் உடைந்த கழிவுநீர் கால்வாய்கள் சரி செய்யப்பட்டு சிமெண்ட் மூடி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகளை என்னிடம் எந்த நேரத்திலும் சுட்டிகாட்டுங்கள்.பணியாற்ற தயாராக உள்ளேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
சகோதரர் முகைதீன் இபுறாகிம் அவர்களே.எண்ணில் அடங்கா நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுக. உங்களின் மக்கள் சேவையை குறை கூறியது அறிய வந்ததும் உடன் செயலில் இறங்கியது உண்மையிலேயே பாராட்ட தக்கதாகும்..
ReplyDeleteஇனி வரும் காலங்களில் மக்கள் குறை கூறும் வரை தத்திருக்காமல் முடிந்த நேரம் எல்லாம் தெருவை சுற்றி கண்காணித்து, குறைகளை இப்போது போல சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பீர்களானால் உங்களுக்கு ஓட்டளித்த் மக்களின் மனதில் நிலைத்திருப்பதோடு வருங்காலங்களில் அந்தப் பகுதியின் நிரந்தரமாய் ஆயுட்கால மக்கள் பிரதிநிதியாக இருக்க பிரகாசமான வாய்ப்புண்டு.. மனமார்ந்த் வாழ்த்த்கள்..பிரதிநிதியாக