Sunday, September 9, 2012

சேர்மன் கணவர் தலையீடு!ராஜினாமா செய்வோம்! 19 கவுன்சிலர்கள் பெயரில் முதல்வருக்கு புகார் மனு!


சேர்மன் ராவியத்துல் காதரியா, கணவர் ரிஸ்வான், துணை சேர்மன் காஜா முகைதீன்



கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் சார்பில் நமக்கு தரப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியாவின் கணவர் ரிஸ்வன் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும்,காண்ட்ராக்ட் மற்றும் பணிகள் ஒதுக்குவதில் பேரம் பேசுவதாகவும்,
இதனால் நகராட்சி நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் அவரின் தலையீடு தொடர்ந்தால் அனைவரும் நகராட்சி கூட்டங்களை புறக்கணிப்பதோடு தங்களின் கவுன்சிலர் பதவிகளை ராஜினாம செய்யும் நிலையில் இருப்பதாகவும் எனவே தமிழக முதல்வர் சேர்மனின் கணவர் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என நகராட்சி துணை தலைவர் காஜா முகைதீன் உள்ளிட்ட 19 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பலருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அவ்வாறு இவர் கூறியுள்ளார்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியாவிடம் கேட்ட போது,

எனது கணவர் நிர்வாகத்தில் தலையிடுவது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது நான் பெண்ணாக இருப்பதால் எனது கணவர் வீட்டிலிருந்து அலுவலகம் வரை துணைக்கு வருவார் ஆனால் அவர் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவது கிடையாது.தவிர 43 வருட போராட்டத்துக்கு பின் எங்கள் கட்சி நகராட்சியை பிடித்துள்ளது.எனவே ஊருக்கான நலப்ப பணிகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களிடம் யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டாம் பணிகளை 100 சதவீதம் முழுமையாக பார்க்க வேஎண்டும் என எழுத்து மூலம் தெரிவித்துள்ளேன் இதனால் கமிஷன் கிடைக்காத கவுன்சிலர்கள் ஆத்திரத்தில் என் கணவர் மீது புழுதி வாறி தூற்றி வீண் பழி சுமத்துகின்றனர் என்றார்






2 comments:

  1. "43 வருட போராட்டத்துக்கு பின் எங்கள் கட்சி நகராட்சியை பிடித்துள்ளது.எனவே ஊருக்கான நலப்ப பணிகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களிடம் யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டாம் பணிகளை 100 சதவீதம் முழுமையாக பார்க்க வேஎண்டும் என எழுத்து மூலம் தெரிவித்துள்ளேன் இதனால் கமிஷன் கிடைக்காத கவுன்சிலர்கள் ஆத்திரத்தில் என் கணவர் மீது புழுதி வாறி தூற்றி வீண் பழி சுமத்துகின்றனர் என்று சொல்லிருக்கும் நம்ம CHAIRMAN அவங்க கமிஷன் வாங்காத மாதிரியும் அவங்க கட்சியில் இருந்து வந்த VICE CHAIRMAN உட்பட ஏனைய கவுன்சிலர்கள் கமிஷன் கிடைக்காத ஆதங்கத்தில் புகார் சொல்கிறார்கள் என்றும் சொல்லியிருப்பது அறிவுடையோர் சிந்திக்க வேண்டிய ஒன்று. அமானிதத்தை உண்ண நினைக்காதே அல்லாஹ்வையும் மறுமையும் அஞ்சிக்கொள் என்ற சொல்லை மறந்ததின் விளைவோ ........

    ReplyDelete
  2. keelakarai nagaratchi nirvagathil thalaiviyin kanavar thalai iduvthu eanbathu neenda kaala prachinaiyaga irunthu varukirathu. intha seithi coucilargal sollithan theriya vendum eanpathu illai.intha seithiyanathu earkanave media vin mulamaga velivantha ondre.Eaninum 19 councilargal avar kanavar meethu pali vanga ninaipathaga thalavi therivithullar .appadi anal ean media karargalum commission kidaikatha karanathal than ithu mathiriyana seithigalai velittullanara?????????????????????????keelakarai nagaratchiyil moththam 21 cousilar ullanar.ithil thalaivaraium sethu moththam 22per. avarkalil 19 per mattume commisson keatkinranar eantral.matra 3peru nallavargala???????????????????????????????
    nagaratchi nirvagam eanbathu urbinargal mattrum thalaivaral merkolla vendiya ondre.Ithil thanipatta nabarn merkollum patchaththil mattra urubinargal athirubthin adaikindranar.Itharkana muiduthan enna??????????????????????????????????????????????????????????????
    makkal than theermanikka vendum.
    melae nanbar MJS korubittathu pola amanithathain unna ninaikathe allahvaium marumayaium anjikkol.
    Assalaamu Alaikum(varah...........)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.