
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை அரசு மருத்துவமனை எதிரில் கழிவு கால்வாய் பணி நடைபெற்றது தற்போது அப்பணி நிறைவடைந்தும் கழிவு நீர் கால்வாய் மேற்புறம் மூடப்பட்டு சாலையை சமப்படுத்தி சீரமைக்காமல் இருப்பதால் சாலையின் ஒரு பகுதி மேடாகவும் இன்னொரு பகுதி பள்ளமாகவும் கழிவு நீர் கால்வாயின் மேற்பகுதி வேகத்தடையை போன்ற நிலையில் உள்ளது. இதனால் மெயின் ரோட்டிலிருந்து வடக்குத்தெரு,மற்றும் மகளிர் காவல் நிலையம் செல்லும் வாகனங்கள் அவ்வழியே செல்ல முடியவில்லை.இதனால் இரு சாலைகளும் துண்டிக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் :சேகு சதக் இப்ராகிம்
டெண்டர் விடும் போதே பணி முடிந்ததும் இது போன்ற குறைகளை சீர் செய்ய வேண்டும் என ஒப்ப்ந்தகாரரிடம் நிபந்தனை போட மாட்டார்களா? அப்படி போட்டு இருந்தால் பணி நிறைவுக்கு பின் ஒப்பந்த்காரர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பணி நிறைவு பத்திரம் பெறுவதறகு முன் இப்படிப்பட்ட குறைகளை கலைந்திருக்கலாமே? பொது மக்களுக்கும் அவதி இல்லையே..
ReplyDeleteபொது மக்கள் இது போன்ற தவறை செய்தால் சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரிகளின் பதில் இதற்கு என்ன? ஏறத்தாழ நகராட்சி அலுவலகத்திற்கு முன் புற பகுதியில்தான் இந்த சீர்கேடு உள்ளது/ ஆணயர் கண்ணில் படவே இல்லையா? ஆணையர் அவர்கள் கை சுத்தமானவர், பாரபட்சமில்லாம்ல் துரித நட்வடிக்கை எடுப்பவர் என் கேள்விப் ப்டுகிறோமே. அது பொய்யாகி விடுமோ!!!