


அமெரிக்காவில் பெருமானர் முகம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி படம் தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் இன்று மாலை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செயத் காலித், மாநில பேச்சாளர் அப்துல் ஜமீல், எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் தொகுதி துணை தலைவர் அப்பாஸ் ஆலிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். சத்தார் அவர்கள் கண்டன கோசங்கள் எழுப்பினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் ராமநாதபுரம் நகர் தலைவர் பரக்கத்துல்லா நன்றி கூறினார்.இதில் கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராமானோர் பங்கு பெற்று கண்டனங்களை தெரிவித்தனர்.
தகவல் : முஜீப்(மக்கள் சேவை இயக்கம்)
salam brother protest pannunathu SDPI illa kaka POPULAR FRONT OF INDIA(PFI). antha name a change panirunga.
ReplyDeleteஅமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி Innocence of Muslims என்ற திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.
ReplyDeleteஅந்த 14 நிமிட வீடியோ வை பார்க்கும் எந்த முஸ்லிமின் இரத்தமும் கொதிக்காமல் இருக்காது.
நபிகள் நாயகத்தின் படத்தை வரைந்ததற்கே கொந்தளித் போன முஸ்லிம்கள் இதை பார்த்தார்கள் ஆத்திரடையாமல் இருக்க மாட்டார்கள்.
இந்த படத்தில் நபிகள் நாயகத்தின் வேடத்தில் ஒருவனை தாடியுடன் நடிக்க செய்திருக்கின்றான் அந்த சாம் பாசைல்.
நபிகள் நாயகத்தை ஓரின சேர்க்கையாளர் எனவும், நபிகள் நாயகம் பெண்களுடன் தகாத முறையில் உறவு கொள்வது போன்றும்,
நபிகள் நாயகத்தை பாஸ்..(ஆங்கில வார்த்தை , எழுதுவதற்கு கை வரவில்லை) எனவும். நபிகள் நாயகத்தை பெண்கள் செருப்பால் அடிப்பது போன்றும்
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றும் இன்னும் எந்த அளவிற்கு இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தை இழிபடுத்த முடியுமோ அந்த அளவிற்கு இழிவு படத்தி படம் எடுத்துள்ளான் இந்த யூத கைக் கூலி! அதே நேரத்தில் யுதர்களை படத்தில் உயர்வாக காட்டியுள்ளான். யூடுபில் இருந்து அந்த வீடியோவை இதுவரையும் நீக்காமல் இருப்பதும் மிகப் பெரும் கண்டனத்திற்குரியதாகும்