சாலை தெரு பகுதியில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் நீர் கால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளதால் கழிவு நீர் வெளியேறி சாலைகளில் தேங்கி சுகதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதிகளில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜமால் என்பவர் கூறுகையில்,
நீண்ட நாட்களாக இப்பகுதியை இப்பிரச்சனை இருந்து வருகிறது.இதனால் குழந்தைகள் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.இப்பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் நகராட்சி தலைமையிடம் எடுத்து சென்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்றார்.
இடம்: ஜெய்னம் பீவி பெண்கள் தொழுகை பள்ளி அருகில் .
அதேபோல் 8 வார்டு பகுதியில் கால்வாய் சுத்தம் செய்ய தோண்டி 4 நாள் ஆகி விட்டது. கொட்டப்பட்ட சாக்கடை மண்ணை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
அப்பகுதியை சேர்ந்த சித்திக் கூறுகையில்,
நான்கு நாட்களாக நகராட்சியில் புகார் கூறி வருகிறேன்,இதுவரை யாரும் அகற்றவில்லை.பள்ளி குழந்தைகள் அவ்வழியேதான் செல்கிறார்கள்.மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன் என்றார்.
நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் உங்கள பகுதி கவுன்சிலரை அப்படி இல்லை என்றால் நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் நீங்கள் தானே அவர்களுக்கு இந்த பொறுப்பை கொடுத்தீர்கள் வரலாறு காணாத அளவுக்கு கீழக்கரை இல் தினமும் சில பிரச்சனைகள் நன்றி:கீழக்கரை டைம்ஸ்
ReplyDelete