Wednesday, September 12, 2012
கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை!
கடல் பகுதியோடு அழகிய கீழக்கரை நகரம் !படம் : அபுபக்கர்
கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக இருந்து வருகிறது.
தற்போது புதிய ஜெட்டி பாலம் அமைக்கப்பட்ட பின் மீன் துறைக்கு சொந்ததமான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மாலை நேரத்தில் கடலின் அழகை ரசிக்க மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் கடல் பாலத்தில் அமர்ந்து வருகின்றனர்.
கடற்கரையில் மீன்துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது அந்த இடத்தை கையகப்படுத்தி சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சமூக நல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா விரைவில் பூங்கா அமைப்பற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து சென்னையில் அமைச்சரை கோகுல் இந்திராவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அரசு சார்பில் இதறகான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கான இடமும் தேர்வு செய்யப்படும் என்றும் அருகில் உள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ள நகராட்சி சார்பில் மீன் வளத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக என்பதாக செய்திகள் வெளியாயின.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹசன் அப்துல் காதர் கூறுகையில்,
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் தள்ளிபோகும் பட்சத்தில் தற்காலிகமாக கடற்கரையோரம் காலி இடத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் சேர்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
வரவேற்க வேண்டிய திட்டம் மற்றும் ஆலோசனைகள். இத்துடன் ஊருக்கே சர்வ காலமும் தொற்று நோய் கிருமிகளை உற்பத்தி செய்து மக்களை துயரத்தில் ஆழ்த்தும் கருவாட்டு பண்ணையையும் தயவு தாடசியம் இன்றி அகற்ற பட வேண்டும். அப்போதுதான் மக்கள் சுதந்திரமாக கடற்கரையின் மேன்மையை அனுபவிக்க முடியும்..
ReplyDeleteமுன் காலங்களில் அதுவும் 150-க்கும் மேலான மீன் பிடி விசை படகுகள் இருந்த காலத்தில் கூட ஊருக்கு வெளியே தான் கருவாட்டு பண்ணை இருந்தது..இன்று ஏர்வாடி போன்ற வெளி இடங்களிலிருந்து எல்லாம் மீன்களை இங்கு கொண்டு வந்து காயப் போடுகிறார்கள்..இரு குடும்பத்தினரின் வருமானத்திற்காக ஊர் மக்கள் அனவரும் நோகத்தான் வேண்டுமா? நகரில் சீர் கெட்ட சுகாதாரத்தை சீர் செய்யும் பணியுடன் அசிங்கத்தின் உச்ச கட்ட சின்னமாக உள்ள கருவாட்டு பண்ணையை நீக்க லஞ்ச லாவண்ணியத்திற்கு அடி பணியாது நகராடசி நிர்வாகம் நடவடிக்கை ந்டுக்க முன் வர வேண்டும்..
மேலும் ஐந்து வாசல் கிட்டங்கி வழியாக கடற்கரைக்கு செல்லும் பாதையில் உள்ள குப்பை மற்றும் கட்டட கழிவுகளை அறவே அகற்றி இருளை நீக்க மின் விளக்குகள் அமைத்து கொடுத்தால் பெண்களுகளும் அழகிய கடற்கரையை சென்று காண வசதியாக இருக்கும்.
வரவேற்க வேண்டிய திட்டம் மற்றும் ஆலோசனைகள். இத்துடன் ஊருக்கே சர்வ காலமும் தொற்று நோய் கிருமிகளை உற்பத்தி செய்து மக்களை துயரத்தில் ஆழ்த்தும் கருவாட்டு பண்ணையையும் தயவு தாடசியம் இன்றி அகற்ற பட வேண்டும். அப்போதுதான் மக்கள் சுதந்திரமாக கடற்கரையின் மேன்மையை அனுபவிக்க முடியும்..
ReplyDeleteமுன் காலங்களில் அதுவும் 150-க்கும் மேலான மீன் பிடி விசை படகுகள் இருந்த காலத்தில் கூட ஊருக்கு வெளியே தான் கருவாட்டு பண்ணை இருந்தது..இன்று ஏர்வாடி போன்ற வெளி இடங்களிலிருந்து எல்லாம் மீன்களை இங்கு கொண்டு வந்து காயப் போடுகிறார்கள்..இரு குடும்பத்தினரின் வருமானத்திற்காக ஊர் மக்கள் அனவரும் நோகத்தான் வேண்டுமா? நகரில் சீர் கெட்ட சுகாதாரத்தை சீர் செய்யும் பணியுடன் அசிங்கத்தின் உச்ச கட்ட சின்னமாக உள்ள கருவாட்டு பண்ணையை நீக்க லஞ்ச லாவண்ணியத்திற்கு அடி பணியாது நகராடசி நிர்வாகம் நடவடிக்கை ந்டுக்க முன் வர வேண்டும்..
மேலும் ஐந்து வாசல் கிட்டங்கி வழியாக கடற்கரைக்கு செல்லும் பாதையில் உள்ள குப்பை மற்றும் கட்டட கழிவுகளை அறவே அகற்றி இருளை நீக்க மின் விளக்குகள் அமைத்து கொடுத்தால் பெண்களுகளும் அழகிய கடற்கரையை சென்று காண வசதியாக இருக்கும்.
மறு பதிப்பு:
ReplyDeleteபொய்யான அலங்காரமான வாக்குறுதிகளை நம்பி, நம்பிக்கையுடன் ஓட்டளித்த மக்களை ஏமாற்றி இப்போது பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பதவிகளை துறக்க வேண்டும்.
நகரின் சுகாதாரத்தை பின்னுக்கு தள்ளி சாலைகளை அமைப்பதில் முஸ்திபு காட்டுகிறார்களே. அது ஏன்? சமீபத்தில் நகர் சுகாதாரம் பற்றி ஜி தமிழ் தொலைகாட்சி ஒளிபரப்பின் நடுவே ஆணையர் (பொருப்பு) உடன் நடந்த தொலைபேசி உரையாடலில் அவர் அறிவித்தப்படி வரும் நிதி ஆண்டில் பாதாள சாக்கடை திட்டம் அமுல் படுத்தப் படுமானால் இந்த சாலைகளின் கதி? அந்தோ மக்களின் வரி பணம்.
தற்போது குப்பைக்கரை என புகழ் பெற்ற கீழக்கரையின் தலையாய பிரச்சனையே குப்பைதான் என்பதில் இங்குள்ள மக்களிடையே இரண்டாம் கருத்து கிடையாது.இது பற்றி மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ளாதது ஏன்? ஏன்? ஏன்? உப்புக்கு சப்பில்லாத ஆயிரம் சமாதானங்களை சொல்லுகிறார்கள். குறைந்த பட்ஷம் வாருகால்களை முறையாக மூடி அடைப்புக்களை நீக்கி தொற்று கிருமி களின் உற்பத்தியை தடை செய்தார்களா? இதற்கு ஒன்பது மாத அவகாசம் போதாத? உதாரணத்திற்கு துணை தலைவரின் அலுவலகம் அமைந்துள்ள முஸ்லீம் பஜாரிலிருந்து பழைய மீன் கடை செல்லும் (ஒ.ஜே.எம் தெரு)சாலையில் ஊர் மக்களே வந்து கண் குளிர கண்டு செல்லுங்கள்.
பொதுவாக நகரில் தற்சமயம் பலவிதமான தொற்று வியாதிகள் பரவி காணப்படுகிறது. உள்ளூர் மற்றும் இராமநாதபுரம் குழந்தைக்கான சிறப்பு மருத்துவர்களை பேட்டி கண்டாலே அதன கொடுரம் தெரிய வரும்.
சமீபத்திய பத்திரிக்கை செய்தியில் பிரதானமாக கடற்கரை ஓர குடி இருப்பு பகுதிகளில் தொற்று நோய்க்கான கிருமிகள் அபரிதமாக காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கடற்கரை ஓர திறந்த வெளிகளில் கருவாட்டிற்காக மீன்களை காயப் போடுவதுதான்.
இது விஷயத்தில் நமது நகரின் நிலைமை? அனுதினமும் கடற்காற்று கரையை நோக்கி வீசும் போது, அது புழுக்கள் நிறைந்த கருவாடுகளை ஆரத்தழுவி வந்த பின்னரே நாம் சுவாசிக்கக்கூடிய கட்டாயத்தில் வாழ்ந்து வருகிறோம்.அதன் கொடுமையை (அதிலும் காலை வேளையில்) கடற்கரை ஓரத்தில் குடி இருக்கும் மக்களிடம் கேட்டால்தான் அதன் கொடுரம் புரியும்.
முன் காலங்களில் மக்கள் குடி இருப்புகள் குறைவாக,மேலும் மீன்பிடி இயந்தர படகுகள் அபரிதமாக இருந்த காலத்தில் கூட கருவாடுகளை ஊருக்கு வெளியே கிழக்குப் பக்கத்தில் பெரிய பட்டணத்திற்கு இடைப்பட்ட திறந்த வெளியிலும், மேற்கே சின்ன ஏர்வாடிக்கு அருகில் குடி இருப்பு இல்லாத பகுதியிலும் மீன்களை காயப் போடுவார்கள். யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் இப்போது சொரணை அற்ற கீழக்கரை மக்களின் தயாள இரக்க குணத்தை பகடை காயாக்கி கொடூர வியாதிகளை குறிப்பாக குழந்தைகளுக்கு பரப்பி வருகிறார்கள். அந்த இரண்டு நபர்களின் சுகபோகத்திற்காக ஊர் மக்கள் வேதனை அடையத்தான் வேண்டுமா? மக்களே சிந்திப்பீர்களா? ஒருவர் கடுவாட்டு பண்ணை வைத்திருப்பவர். மற்றவர் இடத்தை வாடகைக்கு விட்டவர்கள்.அவர்களின் செல்வத் தகுதிக்கு இந்த வருமானம் கடலில் கரைத்த பெருங்காயம். ஆனால் மக்கள் படும் அவதியோ சொல்லும் தரமன்று.
மக்கள் நலம் கருதி மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பூனைக்கு மணி கட்டுவது யார்? லஞ்ச லாவண்ணியத்திற்கு அடி பணியாது நகராட்சியின் சுகாதாரத் துறை போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா? மாவட்ட சுகாதார மேளாளர் திருமதி.உமா மகேஸ்வரி இது விசயத்தில் கவனம் செலுத்துவார்களா. அவ்ரது பார்வைக்கு யாராவது சமூக ஆர்வலர் கொண்டு செல்லுவார்களா?
இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்த்கீம்
முன் காலங்களில் கருவாடு பண்னைகள் ஊருக்கு கிழக்கே பெரிய பட்டிணத்த்ற்கு இடைப்ப்டட மக்கள் குடி இருப்பு இல்லாத திறந்த வெளியிலும், மேற்கே சின்ன ஏர்வாடிக்கு இடைப்பட்ட மக்கள் குடி இருப்பு இல்லாத திறந்த வெளிப் பகுதியிலும் காயப் போடுவார்கள். இது மட்டும் அல்ல. திராவகம் கல்ந்த கடல் பாசிகளையும் காயப் போடுவார்கள்.
ReplyDeleteஆனல் சமீப காலங்களில் ஊரின் நலனில் அக்கரை அற்ற சொரணை அற்ற பொரும்பாலன மக்களின் காரணமாக, போகுவரத்து செலவை மிச்சப்படுத்தி தொழிலில் கொள்ளை லாபம் காண இவர்கள் ஊர் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கி பூமியிலேயே சுகிக்க வைக்கிறார்கள். கஷ்டத்தை அனுபவிகிறர்களே தவிர எதிர்ப்பு இல்லை. வசூல் வேட்டை நடத்தி குதுகளிக்கும் பொது நல அமைப்புகளும் கண்டு கொள்வதில்லை. (விதி விலக்காக இருக்கும் மிகச் சில பொது நல அமைப்புகள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
தனிப்பட்ட இரண்டு நபர்களுக்காக ஊர் மக்கள் அல்லல் படத்தான் வேண்டுமா? ஒருவர் வெளியூர் வாசியான கருவாடு பண்ணைக்காரர். மற்றவர் இடத்தை வாடகைக்கு கொடுத்தவர்கள்.அவர்களின் செல்வத் த்குதிக்கு இந்த வாடகை வருமானம் ஒரு பொருட்டே அல்ல. ஊர் மக்களின் நலன் கருதி மனம் மாற எல்லாம் வல்ல ரஹ்மான் கருணை புரிவானாக.ஆமீன்.
ம்று பதிப்பு:
பூனைக்கு யார் மணி கட்டுவது? நகராட்சி சுகாதாரத் துறையும், மாவட்ட சுகாதார மேலாளர் திருமதி. உமா மகேஸ்வரியும் லஞ்ச லாவண்ணியத்திற்கு இடம் கொடாது போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நகர மக்களை குறிப்பாக குழந்தை செல்வங்களை காக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் கட்சி பாகுபாடு இன்றி துயர் நீங்க பாடு பட வேண்டும்.