கீழக்கரை கிழக்கு தெரு மொட்டபிள்ளை தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்று காலை முதல் செயல்பட துவங்கியது.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் இன்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன்,கீழக்கரை நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீன், நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,ஜமாத் நிர்வாகிகள்,கவுன்சிலர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது,
இங்கு திறக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 1 டாக்டர் மற்றும் நான்கு நர்ஸ்களுடன் 24 மணி நேரம் செயல்படும் மேலும் ஊரின் மத்தியில் இன்னும் பெரிய கட்டிடம் கிடைத்தால் அதிக வசதி செய்து ஆரம்ப சுகாதார நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றார்
அரசு துறை சார்பான நிர்வாகம் என்றாலே மக்களிட்ம் ஒரு அலாதியான முக சுழிப்பு உண்டு..
ReplyDeleteஇப்போது நகரில், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு நகர் ஆரமப சுகாதார நிலையம் மககளின் முக சுழிப்பு இல்லாமல் சீரோடும் சிறப்போடும் வளர்ச்சி காண எங்களின் இதயம் கனிந்த பிரார்த்தனையுடன் கூடிய நல் வாழ்த்துகள்..
சுகாதாரத் துறை துணை இயக்குநர் திரு. பாலசுப்பிர மணியன் வேண்டுகோளுக்குசெவி சாய்த்து பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சார்ந்த தொழில் அதிபர் ஜனாப். எம்.எம்.எஹ்ச். சாதிக் அலி அவர்கள் மனது வைத்தால் முஸ்லீம் பஜாரிலேயே அமைய வாய்ப்பு உண்டு.அது சாத்தியப் படுமானால் அந்த நிலயத்திற்கு அவரது தந்தையாரின் பெயரை சூட்ட அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். சம்பந்தப்ப்ட்டவர்கள் ஆலோசிப்பார்களாக..