Sunday, September 9, 2012

கவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுத்ததால் கணவர் மீது குற்றச்சாட்டு!சேர்மன் கண்டனம்!




கணவர் ரிஸ்வான் மீது மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொய் குற்றச்சாட்டு என மறுத்ததோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் சேர்மன் ராவியத்துல் காதரியா. அவர் தரப்பில் அளித்துள்ள மறுப்பில் கூறியிருப்பதாவது,

கீழக்கரை நகராட்சியில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நகரின் குப்பை பிரச்சனையும் தீரும் நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அன்றாடம் மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் .

நான் ஒரு பெண் என்ற அடிப்படையில் கணவர் என்னுடன் வருவார் இதை எப்படி தவறு என்று சொல்ல முடியும் இதை நான் பலமுறை கூறிவிட்டேன்.இங்குள்ள பெண் கவுன்சிலர்களோடு கணவர்,மகன்,பேரன் என்று உடன் வருகிறார்கள்.இதை தவறு என்று சொல்ல முடியுமா?
எனது கணவர் வீட்டிலிருந்து அலுவலகம் வரை துணைக்கு வருவார் ஆனால் அவர் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவது கிடையாது.

தவிர 43 வருட போராட்டத்துக்கு பின் எங்கள் (அதிமுக)கட்சி நகராட்சியை பிடித்துள்ளது.எனவே ஊருக்கான நலப்ப பணிகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களிடம் யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டாம் பணிகளை 100 சதவீதம் முழுமையாக பார்க்க வேண்டும் என எழுத்து மூலம் தெரிவித்துள்ளேன் இதனால் கமிஷன் கிடைக்காத கவுன்சிலர்கள் ஆத்திரத்தில் என் கணவர் மீது புழுதி வாறி தூற்றி வீண் பழி சுமத்துகின்றனர் .

மேலும் புகாரில் கையெழுத்திட்டதாக சொல்லப்படும் சில கவுன்சிலர்களிடம் எதற்கு கையெழுத்து என்று சொல்லாமலே கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா உள்ளிட்ட சிலரிடம் வேறு காரணங்களை கூறி கையெழுத்து வாங்கியுள்ளார்கள்.இதில் கூட நேர்மையில்லை.

சில கவுன்சிலர்கள் தங்களின் அன்றாட செலவுக்கு கூட காண்டிராக்டர்களின் வீட்டும் கதவை தட்டி காசு கேட்கும் மோசமான செயல் கீழக்கரைய்ல் நிலவுகிறது.

ராஜினாமா செய்வேன் என்று மிரட்டும் இவர்கள் தைரியம் இருந்தால் ராஜினாம் செய்து மீண்டும் ஜெயித்து வரட்டும் பார்க்கலாம்.நமதூர் மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.வீண் குற்றச்சட்டுகளை பொய்களையும் அள்ளி தெளிப்பதை விட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

இவர்களுக்கு ஊர் நலனில் அக்கறையில்லை தங்களின் சொந்த சுயநலத்துக்காகவும் ,இவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு நான் இடையூராக உள்ளேன் என்ற என்பதற்காகத்தான்பொய் குற்றச்சாட்டை புணைந்துள்ளார்கள்.

இறைவன் துணையோடு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நல்லாட்சியில் இவர்களில் சூழ்ச்சிகளை முறியடித்து கீழக்கரை நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி உழைப்பேன் பொதுமக்களாகிய உங்கள் ஆதரவோடு......

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

7 comments:

  1. தங்கள் கணவர் மீது குற்றம் சொல்வது ஒன்று இரண்டு வார்டுகள் கிடையாது மொத்தம் இருக்கும் அணைத்து வார்டுகளும் அது எப்படி பொய்யாகி விடும் தாங்களே சற்று யோசித்து பாருங்கள் சேர்மன் அவர்களே, தாங்கள் பெண் என்பதால் கணவர் கூட வருகிறார் அது தவறு என்று கூற வில்லை இருந்தாலும் நீங்கள் பார்க்க வேண்டிய வேலையை அவரே பார்க்கிறார் என்றார் பிறகு நீங்கள் எதற்கு அதைத்தான் அணைத்து கவுன்சிலர்களின் கேள்வி சேர்மனுக்கு துணையாக வர வேண்டியன கணவர் பலநேரங்களில் சேர்மனாகவே செயல் படுகிறார் அதைத்தான் நீங்க திருத்த வேண்டும்

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 10, 2012 at 2:20 PM

    வாய் கிழிய வாகுறுதிகளை தந்து விட்டு மகத்தான மக்களின் ஓட்டுக்ளை பெற்று ம்க்கள் பிரதிநிதியாக பதவிக்கு வந்தது எதற்காக?? இப்படி இவர்களுக்குள் சச்சரவு செய்து கொள்ளத் தானா?? ஆரம்பம் முதலே இதே பரச்சனையாகத் தான் உள்ளது..வெட்கக்கேடு.

    ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் கொள்ளுகள்..உங்களை தேர்ந்தெடுத்தது ஏர்வாடி, காஞ்சரங்குடி மக்களோ இல்லை. உங்கள் வீட்டின் எதிர்,அடுத்து, சுற்றி வசிக்கும் பிராயம் முதல் உங்களை நன்கு அறிந்த மக்கள் தான்..ஆகவே யார் சொல்லுவது உண்மை, பொய் என அவர்களுக்கு புரியும். உணரவும் முடியும்.. என்வே அதிகம் ஆட்டம் போடாதீர்கள்.. மறுமுறை தேர்தல் வரத் தான் செய்யும்..

    நகராட்சிக்கு வரும் பணம் எல்லாம் மக்களின் பணம்.ஆகவே அது அமானிதமான பணம். அல்லாஹ்தாலாவின் சொத்து. ஆகவே இறை அச்சம் கொள்ளுங்கள்.இதில் நீதமாக இல்லை என்றால் நிச்சயமாக தண்டணையை அனுபவிக்க வேண்டியது வரும்..இது சத்திய வேத வாக்கு..

    நகராட்சி தலைவி மீது கூறப்படும் குற்றசாட்டு களுக்கு ஆதாரமானதாக அமைவது அவர் சமபந்தப்பட்ட செய்தியுடன் வரும் நிழல் பட நகல்களே. இதற்கு முன் இரு இஸ்லாமிய சகோதரிகள் இதே பதவியில் இருந்தார்கள் என்பதும் மக்கள் மனதில் இருக்கத் தான் செய்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. கவுன்சிலர்கள் தங்களின் அன்றாட செலவுக்கு கூட காண்டிராக்டர்களின் வீட்டும் கதவை தட்டி காசு கேட்கும் மோசமான செயல் கீழக்கரைய்ல் நிலவுகிறது என்று நம்ம CHAIRMAN சொல்றாங்க, மொத்ததில கீழக்கரை கவுன்சிலர்கள் எல்லாம் அன்றாடம் செலவுக்குப் பிச்சை எடுக்கிறார்கள் என்பதை நாசுக்கா சொல்லி இருக்காங்க. எண்ட ரப்பே(என்னுடைய இறைவா) எங்க ஊர் நகராட்சி கவுன்சிலர்களின் நிலைமை இப்படியா போகணும். ஆமா .... இந்த LIST-ல CHAIRMAN அவங்களோட (அதிமுக) கட்சியைச் சேர்ந்தவங்களும் இருக்கத்தானே செய்வாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தொப்பி தொப்பி.....

      Delete
  4. naanum oru pen naanum oru pen endru vasanam paaduvathai thayavu seithu niruthungal endru thaalmaiyudan kettu kolkiren chairman avarkale.neengal ondrum muthal kilakarai pen chairman illai.matravarkal meethu illaatha kutrachaattu ungal meethu mattum eppadi vara mudiyum.kilakarai makkalin nambikkaiyai neengal ilanthu varukireerkal enbathil ayyam illai.

    ReplyDelete
  5. எல்லாம் காசுக்குதான் ,

    ReplyDelete
  6. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 12, 2012 at 10:19 PM

    அது என்ன கணக்கு 43 வருட போராட்டத்திற்கு பின் மறைந்த முன்னால் முத்ல்வர் திரு.எம்.ஜி,ராமசந்திரன் அவர்களால் அனைத்து இந்திய் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்1972 அக்டோபர் 17 - ல் துவஙகப்பட்டது..( SOURCE: WIKIPEDIA / AIADMK )..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.