கீழக்கரை ரேசன் பொருட்கள் வெளி மார்கெட்டில் விற்பதாக குற்றச்சாட்டு!பறக்கும்படை சோதனை!
கீழக்கரையில் ரேசன் கடைகளில் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாகவும் ரேஷன் பொருட்கள் அதிக விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்கப்ப்டுவதாகவும் இதனால் பொது மக்கள் முறையான விநியோகம் நடைபெறுவதில்லை என நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில் கீழக்கரையில் 8ம் நம்பர் கடையில் ராமநாதபுரம் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இது குறித்து முஜீப் கூறுகையில்,
கீழக்கரையில் நீண்ட காலமாக ரேசன் பொருட்கள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.ரேசன் கடை பொறுப்பாளர்கள் பலர் வெளியாட்களை ரேஷன் கடைகளில் பணியமர்த்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.இது போன்ற சட்ட விரோத காரியங்களால் பொது மக்களுக்கு அரிசி மண் எண்ணெய் உள்ளிட்ட ரேசன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை எப்போது போய் ரேசன் பொருட்கள் கேட்டாலும் தீர்ந்து விட்டது என்று பதில் சொல்கிறார்கள்.குறிப்பிட்ட அளவு மட்டும் விநியோகம் செய்து விட்டு மீதம் உள்ள பெரும்பாலான பொருட்களை வெளிமார்கெட்டில் விற்கிறார்கள்.சட்டப்படி ரேசன் பொருட்களின் இருப்பை இருப்பிற்கு தக்கவாறு மாற்றம் செய்து அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும்.அவ்வாறு செய்வதில்லை.
வெளிமாநிலங்களிலிருந்து கட்டிட வேலைக்கு அழைத்து வரும் காண்ட்ராக்டர்கள் சிலருக்கு ரேசன் கடையிலிருந்துதான் மொத்தமாக அரிசி விற்கபடுகிறது.
.தொடர்ந்து இது போன்ற திடீர் சோதனைகளை நடத்தி கடத்தலை தடுத்து மக்களுக்கு ரேசன் பொருட்கள் முறையான விநியோகம் நடைபெற வேண்டும் என்றார்.
கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,
உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் கையூட்டு பெற்று கொண்டு இது போன்ற செயல்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.கீழக்கரையில் பல முறை உள்ளூர் இளைஞர்களால் ரேசன் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.
ஏழை,எளிய மக்கள் வயிற்றில் அடிக்கும் இவர்கள் சட்டதிலிருந்து தப்பித்து விடுகிறார்கள் ஆனால் இறைவனிடம் தப்ப முடியாது என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.