Saturday, September 15, 2012

கீழ‌க்க‌ரை 18வாலிப‌ர் த‌ர்ஹா வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்ற‌ ரேச‌ன் கார்டு குறைதீர்ப்பு நிக‌ழ்ச்சி!






கீழக்கரையில் சில ரேசன் காடுகளில் பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில பெயர் விடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற காரியங்களுக்கு ராமநாதபுரம் செல்ல வேண்டியுள்ளது. கீழக்கரையில் சிற‌ப்பு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள், சித்திக் அலி, ரபியுதீன், தாஜின் அலிமா மற்றும் நன்பர்கள் டீம் காதர் ஆகியோர் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் குடிமைபொருள் தனி வட்டாச்சியர் சுகுமாரன் தலைமையில் தனிவருவாய் ஆய்வாளர்கள் விஜயகுமார், பாலசுப்ரமணியன், தமிழரசு, ராமசாமி ஆகியோர் கடை எண்2 மற்றும் 6க்கு மட்டும் குறைதீர் கூட்டம் நடத்தினர்.

குறைதீர் கூட்டம் மேலத்தெரு 18 வாலிபர் தர்ஹா வளாகத்தில் நேற்று காலை 10 மணியிலிருந்து 2 மணிவரை நடைபெற்றது. ஒரு நாளைக்கு முன் தான் த‌க‌வ‌ல் தெரிய‌ வ‌ந்த‌து.இது குறித்து கீழ‌க்க‌ரைடைம்சில் செய்தி வெளியிட‌ப்ப‌ட்டிருந்த‌துhttp://keelakaraitimes.blogspot.com/2012/09/2.html.நேர‌ம் குறைவாக‌ இருந்த‌ததால் குறைந்த‌ அள‌வு ம‌க்க‌ள்தான் ப‌ய‌ன‌டைந்தார்க‌ள் பெரும்பாலானோர் ப‌ய‌னில்லாம‌ல் திரும்பி சென்ற‌ன‌ர்.இனியாவ‌து ஒரு வார‌ம் முன்பு அறிவிப்பு செய்து கூடுதல் நேர‌ங்க‌ள் இச்சிற‌ப்பு முகாமை ந‌ட‌த்தியிருந்தால் பெரும்பாலானோர் இம்முகாமில் ப‌யன‌டைய‌ உத‌வியாக இருக்கும்.கீழ‌க்க‌ரையில் அனைத்து ரேச‌ன் க‌டை கார்டுதார‌ர்க‌ளுக்கும் இதுபோன்ற‌ சிற‌ப்பு முகாமை ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்த‌ன‌ர்.



நண்ப‌ர்க‌ள் டீம் காத‌ர் ஒருங்கினைப்புக்கான‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார்.



1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 15, 2012 at 3:34 PM

    சமீபத்தில் நகரில் தேசீய அடையாள அட்டைக்கான பதிவுகள நடந்தது.. அது சமயம் இரண்டு மானிட்டர்கள் பயன் படுத்தப்பட்டன.. ஒன்று விவரங்களை பதியும் அரசு ஊழியருக்கு. மற்றது வாக்காளரின் பார்வைக்கு.. பதிவுகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் இருந்தது.. பதிவில் உள்ள குறைகளை/தவறுகளை நிவர்த்தி செய்து ஓகே சொன்ன பிறகு தான பதிவை முடிக்கிறார்கள. இது ஒரு அருமையான முறை.. தேசீய அடையாள அட்டையில் தவறு என்பது இருப்பதற்கான சாத்ய கூறுகள் மிக மிக அரிது..மேலும் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் உதவினார்கள்..

    இந்த நடைமுறையை வாக்காளர் அட்டைக்கும் தெரிவு படுத்தினால் மிகவும் சாலச் சிறந்தது.. இப்போது உள்ள வாக்காள்ர் அட்டையில் எவ்வளவு குளறுபடிகள் உளள்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று..

    மேலும் இது விஷயமாக தமிழக தலைமை தேர்த்ல் அதிகாரி திரு. பிரவின் குமார் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்..

    மேலும் இது போன்ற நிகழ்வுகளுக்கு குறைந்த பட்சம் மூன்று நாடகளூகு முன்பாவது தமுக்கு (பறை) அல்லது கை ஒலிபெருக்கி மூலம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அதிகமான பலன் அடைய முடியும்.. இதில் நகரில் உள்ள அரசியல் கட்சிகளும் முனைப்பு காட்ட வேண்டும்..பொது நல அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் அதீத அக்கறை காட்ட வேண்டும்..

    வாக்காளர் அட்டையே இல்லை என்கிற போது தேர்தல் நேரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் எவ்வளவு முஸ்திபு செய்தாலும் பலன் பூஜியமாகவே இருக்கும் என்பது திண்ணம்..

    இந்த பதிவு முறை ரேஷன் பதிவுக்கும் பொருந்தும்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.