

பட விளக்கம்: சாலையோரம் கழிவுநீர் கால்வாய் பணியை காரணம் காட்டி டவுன் பஸ் ஊருக்குள் வருவது நிறுத்தப்பட்டது.தற்போது கழிவு நீர் கால்வாய் பணிகள் நிறைவடைந்து விட்டது.எனவே மீண்டும் பஸ் ஊருக்கு இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கீழக்கரை கடற்கரை பெட்ரோல் பங்க் வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.பெரும்பாலான பயணிகள் கடற்கரை பேருந்து நிறுத்ததிலும்,நடுத்தெரு ஜீம்மா பள்ளி நிறுத்ததிலும் பஸ் ஏறிசெல்வார்கள்.இந்நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனை எதிர்புறம் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கு பணிகள் வந்ததால் பஸ்கள் ஊருக்குள் வருவது சிரமம் என்று கூறி டவுன் பஸ் ஊருக்குள் வருவது நிறுத்தப்பட்டது.தற்போது கழிவுநீர் கால்வாய்பணிகள் நிறைவடைந்து விட்டதால் மீண்டும் நகருக்குள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த தினமும் ராமநாதபுரத்திற்கு பணிக்கு சென்று வரும் செல்லும் ராஜா என்பவர் கூறியதாவது,
போக்குவரத்து நெரிசலால் ஏற்கெனவே மிகுந்த சிரமத்துடன் டவுன் பஸ்கள் நகருக்குள் வந்து சென்றன.தற்போது கால்வாய் பணி நடப்பதை சுட்டி காட்டி ஊருக்குள் டவுன் பஸ் வருவதை நிறுத்தி விட்டனர்.இதனால் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு ராமநாதபும் செல்லும் தாய்மார்கள் ,பெரியவர்கல் கைகுழந்தைகளுடன் புதிய பேருந்து நிலையம் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.மேலும் நிரந்தரமாக கடற்கரை வரை டவுன் பஸ் வந்து செல்வதை நிறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தபட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் கீழக்கரை கடற்கரை பகுதி வரை டவுன் பஸ் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
செய்தியாளர்: சேகு சதக் இப்ராகிம்
இத்துடன் இன்னொரு விஷய்த்தையும் கவனத்தில் கொண்டு ஒரு சேர நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும்..
ReplyDeleteதினமும் மாலை வேலையில் (ஐந்தரையிலிருந்து ஏழு வரை)சென்னைக்கு தனியார் ஆம்னி வண்டிகள் செல்லும் நேரத்தில் அரசு டவுன் பஸ்கள் உள்ளே வருவதே இல்லை. அதே நேரத்தில் தனியார் சி.ஏ.எஸ் ,எஸ்.எம்.டி டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன.. இவர்களுக்கு கிடைக்கும் வழி அரசு டவுன் பஸ்ஸிற்கு கிடைக்காதோ?
இதனால் கையில் சாமான்களுடன் பெண்கள் படும் சிரமங்கள், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள் படும் துயரம் ஏட்டில் அடங்காத ஒன்று..
மக்கள் பிரதிநிதிகளும், பொது நல அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் தொகுதி சட்ட மன்ற பிரதிநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கைக்கு வேண்டுகோள் விட வேண்டும்.. தொகுதியை மறந்த நாடாளு மன்ற பிரதிநிதிக்கும் ஒரு நகலை அனுப்பி தொலைக்க வேண்டும்.. என்ன செய்ய தேர்ந்தெடுத்து விட்டோமே..