Saturday, September 29, 2012

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் ர‌க‌ளை!க‌வுன்சில‌ர்க‌ளிடையே மோத‌ல் !


ப‌ட‌ விள‌க்க‌ம்:‍ க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிமை க‌வுன்சிலர்க‌ள் ஆனா மூனா,சுரேஷ்,சித்தீக் உள்ளிட்டோர் ச‌மாதான‌ம் செய்கின்ற‌ன‌ர்.

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில், ஒருமையில் பேசிய கவுன்சிலர் வருத்தம் தெரிவிக்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவருடன் சில கவுன்சிலர்கள் கைகலப்பில் ஈடுபட‌ முய‌ன்ற‌ன‌ர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

கீழக்கரை நகராட்சி கூட்டம், தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், கமிஷனர் முகம்மது முகைதீன், மேற்பார்வையாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் அஜ்மல்கான் (10வது வார்டு) பேசுகையில், கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நவீன குளிர்சாதன வசதியுடன் மீன், கோழி, ஆடு, காய்கறி விற்பனைக்காக 25 கடைகளை கட்டவும், உணவுபொருட்கள் கெடாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் பொருட்டு வசதியை ஏற்படுத்தும் பொருட்டும் மத்திய அமைச்சர் சரத்பவார் பரிந்துரை நிதியில், மீன்வளத்துறை மூலம் புதிய திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.

அப்போது முகைதீன் இபுராகிம் (18வது வார்டு), இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு)உள்ளிட்ட‌ சில கவுன்சிலர்கள் எழுந்து கடந்த கூட்டத்தில் ஒருமையிலும், தகாதமுறையிலும் பேசிய கவுன்சிலர் அஜ்மல்கான், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.க‌வுன்சிலர் அஜ்ம‌ல்கான் வ‌ருத்த‌ம் தெரிவிக்க‌ ம‌றுத்து விட்டார்.

இதுதொடர்பாக அஜ்மல்கானுடன் முகைதீன் இபுராகிம் (18வது வார்டு), இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு) ஜெயபிரகாஷ் (21வது வார்டு) சாகுல்ஹமீது (5வது வார்டு) உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வருத்தம் தெரிவிக்க அஜ்மல்கான் மறுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. க‌வுன்சில‌ர் அஜ்மல்கானுட‌ன்  சில கவுன்சிலர்கள் நேருக்குநேர் கைகலப்பில் ஈடுபட முய‌ன்ற‌ன‌ர். இதனால் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கமிஷனர் முகம்மது முகைதீன்,ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ள் வாக்குவாத‌த்தில் ஈடுப‌ட்ட கவுன்சிலர்களை சமாதானம் செய்தன‌ர். இதையடுத்து கூட்டம் முடிந்தது.

 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 29, 2012 at 1:09 PM

    இதற்கு கருத்து பதிவு செய்து எம்மையே யாம் தரம் தாழ்த்திக் கொள்ள விருமபவில்லை.தினப் பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானதால் அனைவரும் தகவல் அறிந்து காரித் துப்புகிறார்கள்.ஊரே நாறுகிறது.

    இனி வரும் காலங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு குறைந்த பட்ச வயது நாற்பது நிர்ணயித்தால் கொஞ்சமாவது முதிர்ச்சி உள்ளவர்கள் வரக் கூடும்.காரணம் ஜனநாயக ஆட்சி முறையில் இவர்கள் தான் பொது மக்களுக்கு மிக மிக நெருக்கத்தில் இருப்பவர்கள்( மக்கள் நலத் திட்டங்களை அடைய, காக்க)..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.