Friday, August 31, 2012
கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை பதிவு துவக்கம் !வார்டு வாரியாக இடம் மற்றும் தேதி விபரம்!
கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக புகைபடம் எடுக்கும் பணி துவங்கியது. இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆக 30 முதல் செப் 2 வரை 1, 2, 6 ஆகிய வார்டுகளுக்கு மறவர்தெரு ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,
செப் 2 முதல் 5 வரை 3 4 5 வார்டுகளுக்கு கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியிலும்,
செப் 6 முதல் 8 வரை 7 8 9 10 ஆகிய வார்டுகளுக்கு மஹ்தூமியா பள்ளியிலும்,
செப் 9 முதல் 11 தேதி வரை 11 12 13 14 ஆகிய வார்டுகளுக்கு மேலத்தெரு ஹமீதியா தொடக்கப்பள்ளியிலும்,
செப் 12 முதல் 14 வரை 15 16 17 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு தெற்குதெரு இஸ்லாமியா தொடக்கப்பள்ளியிலும்,
செப் 15 முதல் 17 வரை 18 19 ஆகிய வார்டுகளுக்கு சதக்கத்துன் ஜாரியா பள்ளியிலும்,
செப 18 முதல் 20 வரை 20 21 வார்டுகளுக்கு வடக்குதெரு சிஎஸ் ஐ பள்ளியிலும்
அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கபடுகிறது.
வாக்களர் அடையாள அட்டையையும் குடும்ப அட்டையை உடன எடுத்து வர வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
where is the ward 7,8,9 and 10 no detail on which date the should come
ReplyDeleteவிழிபுணர்வுக்கான தகவலுக்கு நன்றி 7, 8, 9,மற்றும் 10 வார்டுகளுக்கான தேதி குறிப்பிட விடுபட்டுள்ளது. அந்த தகவலையும் தந்தால் உதவியாக இருக்கும்.
ReplyDeleteநகரின் மூத்த குடிமகள் இந்த அறிக்கையை இரண்டு, மூன்று நாட்களூக்கு முன் வெளியிட்டு இருந்தால் வெளியூரில் இருக்கும் ஒன்று முதல் ஆறு வார்டுகளில் உள்ள குடிமக்களுக்கு திட்டமிட்டு ஊர் வர உதவியாக இருந்திருக்கும்.
வருங்காலத்தில் தேசீய அடையாள அட்டை அதி முக்கியத்துவ்ம் வாய்ந்ததாக இருக்கப் போவதால் எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஆட்டோ மற்றும் தமுக்கு விளம்பரமும் செய்யபட வேண்டும். அதுவும் ஒவ்வொரு சந்தியிலும் ஆட்டோவை நிறுத்தி செய்யப்பட வேண்டும். நகரில் நடைமுறையில் இருப்பது போல தேசீய அடையாள என்ற வாசகத்தை மட்டும் ஒரு சந்தியிலும் அட்டைக்கு போட்டோ என்ற வாசகத்தை மற்றொரு சந்தியிலும் தேதியை வேறு சந்தியிலும் சொல்லுவதில் எந்தவிதமான பிரயோசனம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனபதை கீழக்கரை டைம்ஸ் மூலமாக நகராட்சி தலைவியின் சீரிய கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.
சுட்டிகாட்டியதற்கு மிக்க நன்றி. தற்போது திருத்தம் செய்யப்பட்டு விடுபட்ட வார்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது
ReplyDeleteAssalamu alaikum brother. Is there any exceptional options for the persons staying abroad to apply for it.
ReplyDelete