Friday, August 31, 2012
கீழக்கரையில் மாதிரி பாராளுமன்றம் !கல்லூரி மாணவிகள் அப்துல் ரஹ்மான்.எம்பியிடம் கேள்வி எழுப்பினர்!
மாதிரி பாராளுமன்றத்தில் அமைச்சராக பதவி ஏற்பு விழா,
வெற்றி பெற்ற பி அணியினர்
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதரி மகளிர் கல்லூரியில் இளைஞர்களுக்கான மாதிரி பாராளுமன்றம் என்ற கருத்தரங்க போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சபாநாயகர் ஹலீமத்து நசீலா தலைமையில்23பேர் ஏ அணியாகவும்,குர்சீத் பேகம் சபாநாயகர் தலைமையில் பி அணியாகவும் அமர்ந்து ராகிங்,கல்வி,சைபர் கிரைம்,பகுதி நேர வேலை,நீர்வளம் ஆகியவை குறித்து விவாதம் நடைபெற்றது.
மாதிரி பாராளுமன்றத்தில் பதவி ஏற்பு விழா,மாசோதா தாக்கல் உள்ளிட்டவையும் நடைபெற்றது.
வெற்றி பெற்ற பி அணிக்கு அப்துல் ரஹ்மான்.எம்பி பரிசு வழங்கி பாராட்டினார்.
அவர் பேசியதாவது,உலகிலேயே மிகச்சிறந்த கல்வி கற்று கொடுக்கும் முறை இந்தியாவில்தான் உள்ளது.எனவேதான் வெளிநாட்டிலிருந்து பல்கலைகழகங்களை இந்தியாவிற்குள் கொண்டு வர அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடைபெறுகிறது.இது மிகவும் துரதிஷ்டவசமானது. இது குறித்து பாராளுமன்றத்தில் என்னுடைய எதிர்ப்பை தெரிவிப்பேன்.தமிழகத்தில் தற்போது 548 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.34 பொறியியல் கல்லூரிகள் அனுமதிக்காக காத்திருக்கின்றன.மேலும் இந்த பின்தங்கிய கல்லூயில் இப்படி ஒரு கல்லூரியை தொடங்கிய பிஎஸ் ஏ ரஹ்மான் அவர்களை மனதார மரியாதை செய்கிறேன், வாழ்த்துகிறேன் என்றார்.
மாணவியர் சபாநாயகராக, அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்களது தலைமைப் பண்பினை வெளிப்படுத்தும் வகையில் சிறப்புற செயல்படுத்திக் காட்டியதை வெகுவாகப் பாராட்டினார். இது போட்டியோடு இருந்து விடாது அமைச்சராக ஆகும் நிலையை அடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய கனவு காண்பது குறித்து விவரித்தார். சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த முறையில் செயல்பட பாராட்டினார்.
கீழக்கரையில் இளைஞிகளின் நாடாளுமன்றம் எவ்வித வெளிநடப்பும் இன்றி நடந்துவிட்டது. ஆனால் டெல்லியில் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு சிலரின் பிடிவாதப் போக்கின் காரணமாக நடைபெறாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார். சட்டமேதை அம்பேத்கரை அரசியல் நிர்ணயசபைக்கு அனுப்பியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று தெரிவி்த்தார்.
நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது எப்படி, லோக்சபா, ராஜ்யசபாவிற்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் முறை, பதவியேற்கும் முறை உள்ளிட்டவற்றை ஆசிரியர் பாடம் நடத்துவது போல் மாணவிகளுக்கு விவரித்தார். நாடாளுமன்றத்தை அனைவரும் காண வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். அதற்கான ஏற்பாடுகளை தானே செய்வதாக உறுதியளித்தார்.
சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரிடம் சமூக சேவைக்கான சிறப்பு விருது பெற்ற தாசிம்பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூதினை பாராட்டி அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுத்தி வாழ்த்து தெரிவிக்கக் கூறினார். கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தில் பயில்வோர் சகோதரத்துவத்துடன் செயல்பட்டு சிறப்பான நிலையினை அடைய வாழ்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் மாணவிகள் அப்துல் ரஹமானிடம் சமசீர் கல்வி,பாராளுமன்ற செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அப்துல் ரஹ்மான் எம்பி , சமசீர் கல்வி அவசியம் என்றும் பாராளுமன்றம் செம்மையாக செயல்பட அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைத்தால் முடியும் மேலும் காரசாரமாக விவாதம் செய்து பாராளுமன்ற விதிமுறைகளை மீறாமல் நடந்து கொண்டால் தவறில்லை என்றார்,
நிகழ்ச்சியில் சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புஹாரி தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார்.ஈடிஏ மார்சல் இயக்குநர் எஸ்.எம்.புஹாரி முன்னிலை வகித்தார். அமீரக காயிதேமில்லத் பொது செயலாளர் லியாகத் அலி, துணை பொது செயலாளர் தாஹா, பொருளாளர் ஹமீது ரஹ்மான்,துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத்,, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது, சீதக்காதி துனை பொது மேலாளர் சேக் தாவுத் டாக்டர் செய்யது அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
கல்லூரி தாளாளர் அவர்கள் தகுநத முன் அறிவிப்புடன் (கீழக்கரை டைம்ஸ் மூலம் உட்பட) கல்லூரி மாணவிச் செல்வங்களின் மாதிரி நாடாளுமன்ற முழு நிகழ்ச்சியையும் மூன் தொலைகாட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் அந்நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பில்லாத மாணவிச் செல்வங்களின் குடும்பத்ததினரும், கல்லுரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பொது மக்களும் கண்டு களிக்க அரிய வாய்ப்பாக அமையும். (இது போன்ற நிகழ்ச்சி த்ற்போது மக்கள் தொலைகாட்சியிலும் ஒளிபரப்ப படுகிறது).
ReplyDeleteகல்லூரி தாளாளர் அவர்கள் தகுநத முன் அறிவிப்புடன் (கீழக்கரை டைம்ஸ் மூலம் உட்பட) கல்லூரி மாணவிச் செல்வங்களின் மாதிரி நாடாளுமன்ற முழு நிகழ்ச்சியையும் மூன் தொலைகாட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் அந்நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பில்லாத மாணவிச் செல்வங்களின் குடும்பத்ததினரும், கல்லுரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பொது மக்களும் கண்டு களிக்க அரிய வாய்ப்பாக அமையும். (இது போன்ற நிகழ்ச்சி த்ற்போது மக்கள் தொலைகாட்சியிலும் ஒளிபரப்ப படுகிறது).
ReplyDelete