Saturday, August 18, 2012

ரம்ஜான் பெருநாள்!சென்னை&ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை !



கீழக்கரை,

வெளிநாடுகளில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான முஸ்லீம்கள், ரம்ஜான் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் வசதிக்காக சென்னை&ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வறட்சி பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாததால், ஏராளமானோர் வேலைவாய்ப்பை தேடி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான முஸ்லீம்கள் வெளிநாடுகள், வெளியூர்களில் பணிபுரிகின்றனர்.

முஸ்லீம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், இன்னும் சில தினங்களில் வர இருப்பதை தொடர்ந்து, அவர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். அவ்வாறு திரும்பும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் வசதிக்காக சென்னை&ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைத்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது போதாது. ரம்ஜான் பண்டிகைக்காக வெளிநாடுகளில் இருந்து வருவோர், சென்னையில் இருந்து ரயில் மூலம் வருவதற்கு பதிவு செய்தும் இடமில்லாத நிலையே உள்ளது. ஏராளமானோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இன்னும் ஒரு சில தினங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ராமநாதபுரம் பகுதிக்கு சென்னையில் இருந்து வரவுள்ளனர். அவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் ரயில்வேக்கும் வருவாய் பெருகும் என்றார்.

1 comment:

  1. காலம் கடந்த கோரிக்கை, இருப்பினும் நியாயமான கோரிக்கை. நாளையோ நாளை ம்று நாளோ ஈத் தொடங்க நிலையில் சாத்தியமற்றது.

    இன்ஷா அல்லா இனி வரும் காலங்களில் நோன்பின் தொடக்கத்திலேயே முயற்சி செய்து வெற்றி காண வ்ல்ல நாயன் நற்கருணை புரிவானாக. ஆமீன்.

    குறிப்பாக ரமலான் பிறை 25-ல் இருந்தே தினம் புகை வண்டிகள் இயக்கப்பட வேண்டும். அது போல பண்டிகைக்கு அடுத்த சில நாட்களும் மறு மார்க்கத்தில் கண்டிப்பாக் இயக்கப்பபட வேண்டும்.அதிலும் குறிப்பாக அதிக பட்சமாக இராம்நாதபுரத்திற்கு கோட்டாக்கள் வழங்கப் பட வேண்டும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.