Wednesday, August 15, 2012
கீழக்கரையில் ரமலான் மாதம் முழுவதும் தினமும் 250க்கும் அதிகமானோருக்கு சஹர் உணவு ஏற்பாடு !
படம்: கீழக்கரை தெற்குதெரு பள்ளிவாசல்
கீழக்கரை தெற்குதெரு ஜமாத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தினமும் 250நபர்களுக்கு மேல் எவ்வித கட்டணமும்மின்றி சஹர் உணவு தரப்படுகிறது.பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திட்டம் மறைந்த எம்.எம்.கே.முகம்மது இப்ராகிம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவரின் வரவேற்பை பெற்றது.தன்னார்வத்தோடு பல்வேறு புரவலர்களின் பொருளாதார உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இன்னும் அதிகளவில் புரவலர்கள் பொருளாதாரத்தை தந்து பங்கேற்றால் இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம் என நிர்வாகம் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு தெரு ஜமாத்தின் துணை செயலாளர் நிஸ்பார் கூறியதாவது,
ஒரு நபருக்கு சஹருக்கான உணவு தயாரிப்புக்கு ரூ 50 முதல் ரூ 60 வரை செலவாகிறது.ஒவ்வொரு ஆண்டும் இதை செயல்படுத்தும் போது பொருளாதார பற்றாக்குறை ஏற்படுகிறது.மிகுந்த சிரமத்துடன் தான் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.எனவே இந்த சஹர் உணவு திட்டத்தில் உதவ விரும்புவர்கள் குறைந்த பட்சமாக ஒரு நபருக்கு தேவையான குறைந்த பட்ச செலவான நாளொன்றுக்கு ரூ50வீதம் முப்பது நாட்களுக்கு ரூ1500 நன்கொடையாக தரலாம்.இன்ஷா அல்லா பொருளாதார ரீதியாக இதற்கு அதிகளவில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தருவார்களானால் சஹர் திட்டத்தை விரிவுபடுத்தி ஏழை எளிய மக்களுக்கு சஹருக்கான செலவு கவலையை போக்கி இறைவனிடம் அதற்கான நற்கூலியை பெறலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.