Wednesday, August 22, 2012

எல்லா புகழும் இறைவ‌னுக்கே..அனைவ‌ருக்கும் ந‌ன்றி !மாநில‌ விருது பெற்ற‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா பேட்டி!ப‌ட‌ விள‌க்க‌ம் :- அமைச்சர் சுந்தர்ராஜன்,ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார் உள்ளிட்டோர் விருது பெற்ற கல்லூரி முதல்வர் சுமையாவுக்கு வாழ்த்துக்க‌ளை தெரிவித்த‌ன‌ர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான சிறந்த சமூக பணியாளருக்கான(மகளிர் நலன்) விருது கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.இன்று ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார்,அமைச்ச‌ர் சுந்த‌ர்ராஜ‌ன் ஆகியோர் விருது பெற்ற‌ சுமையாவுக்கு பாராட்டு தெரிவித்தன‌ர்.த‌மிழ‌கம் முழுவதும் ப‌ல்வேறு அமைப்புக‌ள் ம‌ற்றும் பிர‌முக‌ர்க‌ள் வாழ்த்துக்க‌ளை தெரிவித்துள்ளார்க‌ள்.

மாநில‌ அள‌விலான‌ விருது பெற்ற‌து குறித்து தாசிம் பீவி அப்துல் காத‌ர் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையாவை ச‌ந்தித்து கீழக்கரை டைம்ஸ் சார்பாக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் கூறியதாவது,கேள்வி:- இது போன்ற மாநில அளவிலான‌ விருது கிடைக்கும் என‌ எதிர்பார்த்தீர்க‌ளா ?

பதில்:-எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே.... இப்ப‌டி ஒரு விருது என‌க்கு கிடைக்கும் என‌ நான் எதிர்பார்த்த‌தில்லை.இன்ப‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து.முதல்வர் ஜெயலலிதாவை நான் சிறு வயதில் எனது ஊருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த போது ஒரு முறை நேரில் சந்தித்துள்ளேன்.தற்போது இரண்டாவது முறையாக விருது பெறுவதற்க்காக முதல்வர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவ்விருது பெற‌ என‌க்கு உறுதுனையாக‌ இருந்த‌ க‌ல்லூரி நிர்வாக‌த்துக்கும்,ஆசிரியைக‌ள்,மாண‌விய‌ர்க‌ள் உள்ளிட்ட‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி தெரிவித்து கொள்கிறேன்.மேலும் ர‌ம‌லான் மாதத்தில் இந்த‌ விருது கிடைத்திருப்ப‌து அல்லாஹ்வின் மாபெரும் கிருபை என‌‌ க‌ருதுகிறேன்.

கேள்வி:-க‌ல்லூரி முத‌ல்வர் என்பது மிகபெரிய‌ பொறுப்பு அதில் இருந்து கொண்டு முழுமையான‌ சமூக‌ சேவையில் ஈடுபடுவது கூடுதல் சுமையில்லையா? இரண்டிலும் வெற்றிக‌ர‌மாக‌ செய‌ல்ப‌ட‌ முடியுமா?

பதில்:-கல்லூரியை பொறுத்த வரை கல்லூரி நிர்வாகம் என்னிடம் பொறுப்புமிக்க பிரின்ஸ்பால் என்ற‌ தலைமை பொறுப்பை ஒப்படைத்த நிகழ்வை இன்றும் மிகுந்த நன்றியுணர்வுடன் நினைத்து பார்க்கிறேன்.தாசிம் பீவி க‌ல்லூரி என‌து வாழ்வின் அங்கம். மேலும் நிர்வாகத்தின் ஆதரவும்,ச‌காக்க‌ளின் முழு ஒத்துழைப்பு இருப்ப‌தால் க‌ல்லூரியை மிக‌ சிற‌ப்பாக‌ செயல்ப‌டுத்த‌ முடிகிற‌து.மேலும் திட்ட‌மிட‌ல் இருந்தால் ஒரே நபர் எத்தனை பணிகளையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.சமூக பணியாற்றுவது என்பதை ஒரு பணியாகவே கருதவில்லை.எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.மேலும் எந்த‌ ஒரு ப‌ணியையும் முழு ஈடுபாட்டோடு செய்தால் எந்த‌ ப‌ணியும் சுமையில்லை.


கேள்வி:-சமூக பணியில் உங்க‌ள் எதிர்கால‌ திட்ட‌மென்ன‌ ?

பதில்:- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏற்கேன‌வே ம‌க‌ளிர் சுய‌ உத‌வி குழுக்க‌ள் மூல‌ம் பெண்கள் தாங்களே வருமானம் ஈட்டி கொள்ளும் வகையில் சுய தொழிலுக்கான் பயிற்சிகள அளித்து வருகிறோம்.அதை இன்னும் விரிவாக‌ செய‌ல்ப‌டுத்துவோம்.மேலும் கீழ‌க்க‌ரையில் மிக‌ பெரிய‌ பிர‌ச்ச‌னையாக‌ திக‌ழ‌ கூடிய‌ சுகாதார‌ பிர‌ச்ச‌னையை சீர் செய்வ‌த‌ற்கு "கீப் த‌ ட‌வுன் கிளீன்" என்ற‌ பெய‌ரில் அமைப்பு ஏற்ப‌டுத்தி சமூக‌ ஆர்வ‌முள்ளவ‌ர்க‌ளை அதில் இணைத்து செய‌ல்ப‌டுத்தி வ‌ருகிறோம்.ப‌ல்வேறு திட்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌.அவை அனைத்தும் செயல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ரை சுத்த‌மான‌ ந‌க‌ர‌மாக்குவோம்.நான் விருது பெறும் போது சிறந்த நகராட்சிக்கான விருதை பொள்ளாச்சி நகரம் பெற்று ரூ25லட்சம் ரொக்கத்தையும் பெற்றனர்.இதே போல் இன்ஷா அல்லாஹ் அடுத்த‌ ஆண்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சேர்ம‌ன் சிற‌ந்த‌ நக‌ராட்சிக்கான‌ விருதை த‌மிழக‌ முத‌ல்வ‌ர் கையால் பெற‌ வேண்டும் என்ப‌து என‌து ஆசை அத‌ற்கு வேண்டிய‌ அனைத்து ஆத‌ர‌வையும் நாங்க‌ள் வ‌ழ‌ங்குவோம்.எங்க‌ளையும் ஈடுப‌டுத்தி கொள்வோம் .அதே போல் ம‌ன்னார் வ‌ளைகுடாவான‌ ந‌ம‌து க‌ட‌ல் ப‌குதியின் வ‌ள‌ம் பாதுக்காக்க‌பட ‌வேண்டும் அத‌ற்காக‌ வேண்டிய‌ முய‌ற்சிக‌ளையும் செய்வோம் என்றார்.

மாநில அளவிலான விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது .....
இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இது வரை 840 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 18லட்சத்து 41ஆயிரம் ரூபாயை மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவி சங்கத்தின் மூலம் வழங்கியுள்ளார்.மேலும் மாவட்டத்தின்பெண்கள் சுய உதவு குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.2ஆயிரம் சுய உதவி குழு பெண்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் தொழில் துவங்க பயிற்சி அளித்து வருகிறார்.சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். மேலும் சுய உதவிக்குழு மூலம் குடும்பகட்டுப்பாடு,கண்தானம்,ரத்ததானம்,மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 2007 -2009 மற்றும் 2010 - 2012 ஆகிய ஆண்டுகளில் பெண்கல்விக்கான தேசிய சிறுபாண்மையினர் கல்வியியல் நிறுவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.இவ்வாறு அதில் கூற‌ப்ப‌ட்டுள்ளது.


1 comment:

 1. attn:தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர்

  Congratulations for your achievements.

  regards
  mohamed sahul hameed
  dubai

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.