Monday, August 13, 2012

கீழக்கரையில் ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் நிறைவு !



கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு வாரம் இணையதளம் மூலம் நடைபெற்ற தென்தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஆசியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவுவிழா கல்லூரி தாளாளர் யூசுப்சாகிபு தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி இயக்குநர் ஹபீப்முகமது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார். தேசிய தொழில் நுட்ப ஆசியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மோகன் கூறுகையில்,
‘மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் 12வது ஐந்தாண்டு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், புதுசேரி ஆகிய ஐந்து மாநிலத்தில் உள்ள பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி முடிந்தவுடன் பரீட்சை வைக்கப்பட்டு 50 சதவிகிதம் தேர்ச்சி பெற்றால்தான் நிறுவனம் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் எங்கள் நிறுவனத்தின் இணையத்தளம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் சென்னை வந்து பயிற்சி மேற்கொள்வதற்கு இங்கு இருந்து கொண்டே கலந்து கொள்வதால் சிரமம் குறைந்துள்ளது. பயிற்சியில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு எப்படி பயிற்றுவிப்பது என்பதை ஆசிரியர்களுக்கு விரிவாக விவரித்ததாக கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.