Monday, August 6, 2012

கீழக்கரையில் ரேசன் பொருட்கள் வெளிமார்கெட்டில் விற்பனை!நடவடிக்கை எடுக்க கோரிக்கை!



18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கலெக்டருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

கீழக்கரையில் ரேஷன் கடைகளில் க்டந்த மூன்று மாதமாக சமையல் எண்ணை வழங்கப்படவில்லை. பெரும்பாலான கடைகளில் ரேசன் பொருட்கள் முறையாக விநியோகிக்கபடுவதில்லை. மேலும் ரேசன் பொருட்கள் சட்ட விரோதமாக வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ப‌ல‌ புகார்க‌ள் அளித்து சம்பந்தப்பட்ட துறையினர் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை .என‌வே குடும்ப‌ அட்டைதார‌ர்க‌ளை நேரில் அழைத்து விசார‌ணை செய்து த‌வ‌று செய்யும் ரேச‌ன் க‌டைக்கார‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட‌‌ வேண்டும்.

இவ்வாறு ம‌னுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.