Tuesday, August 21, 2012

கீழக்கரையில் பாலில் விஷம் என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை !காவல்துறை அறிவிப்பு!


கீழக்கரையில் நேற்று ஈத் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று முன் தினம் நள்ளிரவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மெஹந்தி உபாயோகித்த பலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக செய்தி பரவி பின்னர் நேற்று காலை அடங்கியது.

இந்நிலையில் கீழக்கரையில் நேற்று அதிகாலை பாலில் விஷம் கலந்திருப்பதாக வதந்தி பரவி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பலரும் பால் உபயோகப்படுத்த தயங்கினர்.சில மணி நேரங்களில் வெறும் புரளி என்று உறுதிப்படுத்தப்பட்டது.ஈத் பெருநாளில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த விஷமிகள் பீதியை கிளப்பியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கூறியதாவது,

இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.சிலர் வேண்டுமென்றே இது போன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.இதை பரப்பியவர்கள் யார் என்று விசாரணை நடைபெறுகிறது.பிதியை கிளப்பிய இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1 comment:

  1. http://suvanappiriyan.blogspot.com/

    கீழக்கரை குப்பையும் அரிஜனத் தெருக்களின் அவலமும்!


    ஓரளவு வசதியான இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஊர் கீழக்கரை. வீடுகளெல்லாம் ஓரளவு நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்தாலும் குப்பைகளை அகற்றும் வழி தெரியாமல் இன்று முழி பிதுங்கி நிற்கிறது அந்த கிராமம். ஓரளவு படித்தவர்களும் நிறைந்த இந்த ஊர் குப்பைகளை அகற்றுவதற்கு அரசை நாடுவதும் அவர்கள் 'நீங்கள் எல்லாம் வசதியானவர்களாச்சே! நீங்களே பார்த்துக் கொள்ளக் கூடாதா' என்று கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    ஒரு சாதாரண குப்பை விஷயம் மக்கள் மற்றும் அரசின் அலட்சிய போக்கால் இந்த கிராமத்தை பெரும்பாடு படுத்துகிறது. இதனால் இந்த ஊர் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் மிக இலகுவாக தொற்றிக் கொள்கிறது. நமது அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு நாம் அறியாதது அல்ல. அதிலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள ஊர் என்றால் கேட்கவே வேண்டாம். அரசு உதவிகள் எதுவும் கிடைக்காமல் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செவ்வனே செய்து வருவார்கள். அவ்வாறு இருக்கையில் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் மனது வைத்தால் ஒரு நாளில் தீர்ந்து விடக் கூடிய பிரச்னை இது. ஆனால் ஒரு திருமணத்தை பல லட்சம் செலவு செய்து வீணடிக்கும் சமூகம், ஒரு சுன்னத்(முன் தோல் அகற்றுதல்) தனது பையனுக்கு செய்வதற்காக ஊரை கூட்டி விருந்து வைத்து வீண் பகட்டு காட்டும் சமூகம், தனது மகள் பூப்பெய்வதை பத்திரிக்கை அடித்து அதையும் விருந்தாக்கி மகிழும் சமூகம், இறந்த தாயோ தகப்பனோ வீட்டில் கிடக்க மார்க்கம் தடுத்த விருந்தை ஆக்கி அனைவரையும் அழைக்கும் சமூகம் தனது கிராமத்தின் சுகாதாரப் பிரச்னைக்கு அரசை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்வதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியுமா?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.