Saturday, August 18, 2012
ரம்ஜான் பெருநாளையோட்டி ஏராளமானோர் விடுமுறையில் ஊர் திரும்பினர்!ஏராளமான சிறுகடைகள் திறப்பு!(படங்கள்)
கீழக்கரை முழுவதும் ரமஜான் பெருநாளையோட்டி ஏராளமானோர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊரான கீழக்கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.இதனையடுத்து நகரின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் வியாபரம் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.மேலும் ஏராளமான தற்காலிக சிறுகடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
கீழக்கரையை சேர்ந்த வெளிநாட்டிலிருந்து ஊரி திரும்பியுள்ள பிலால் கூறுகையில் ,
இது போன்ற பெருநாள் தினங்களில் ஊர் வருவது மிகவும் மகிழ்ச்சியானது பல ஆண்டுகளாக நேரில் காண வாய்ப்பு கிடைக்காத நண்பர்கள் இங்கு காண்பது சந்தோசமான நிகழ்வாகும்.வெளிநாடுகளி பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நண்பர்கள் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.. ஈத் முபாரக்
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும். வ ரஹ்மத்துல்லாஹி வ பரகத்தஹு.
ReplyDeleteஈத் முபாரக்.
கீழக்கரை டைம்ஸ் வாசகர் வட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து கனிவான உள்ளங்களுக்கும் எந்தன் இதயம் கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அகிலத்தை படைத்து காத்து ரட்ஷிக்கும் வல்ல ரஹ்மானின் அருளாசியும் சாந்தியும் சமாதானமும் நம் அனைவ்ர் மீதும் உண்டாவதாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்